Published:Updated:

தங்கம், ரியல் எஸ்டேட்... முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

முதலீடு
முதலீடு

ஒரு வீட்டையோ, மனையையோ முதலீட்டுக்காக வாங்குவதாக இருந்தால் குறைந்தது 5-7 ஆண்டுகள் கழித்துதான் அதன் மதிப்பு உயரும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கான முதலீட்டு ஆலோசனையை கமாடிட்டி நிபுணர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.

"தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்கள் முதலீட்டை அப்படியே தொடர்வது நல்லது. ஏனெனில், உலக அளவிலான பிரச்னைகள்தான் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்யும்.

அதேபோல அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் வட்டியைக் குறைத்தால், தங்கத்தின் விலை ஏற்றம் பெறும். வட்டிக் குறைப்பு இல்லையென்றால் தங்கத்தின் விலை குறையக்கூடும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உலக அரசியல் சூழல்களை கவனித்துவர வேண்டும்" என்றார்.

`ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்...’ என்று தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கரிடம் கேட்டோம்.

தங்கம், ரியல் எஸ்டேட்... முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

"ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு வீட்டையோ, மனையையோ முதலீட்டுக்காக வாங்குவதாக இருந்தால் குறைந்தது 5-7 ஆண்டுகள் கழித்துதான் அதன் மதிப்பு உயரும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, வாங்கிய உடனேயே விலையேற்றத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

வீட்டுக்கு அருகில், அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளிகள், மருத்துவமனை, விற்பனையகங்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். நிலத்தடி நீர் பயன்பாட்டுக்குரியதாக இருக்கிறதா, குடிநீர் வசதி இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2VmoxUs

வீட்டுக்குச் செல்லும் பாதைகள், பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். வீட்டை விலைக்கு வாங்கி, அதை வாடகைக்குவிடும் பட்சத்தில், குடியேற வாடகைதாரர்கள் கிடைப்பார்களா என்றும் பார்க்க வேண்டும். வளர்ச்சி அடையக்கூடிய பகுதியில் வீடு அமைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்" என்றார்.

எதில் முதலீடு செய்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல..!

இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன், "இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, எந்தத் தேவைக்காக இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். எண்டோவ்மென்ட் பாலிசியைப் பொறுத்தவரை 4% முதல் 6% வரை மட்டுமே வருமானம் எதிர்பார்க்க முடியும். பங்கு சார்ந்த யூலிப் பாலிசிகள் இருக்கின்றன. அதிக வருமானம் எதிர்பார்த்து இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இதைவிட அதிக நன்மைகளைக்கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

தங்கம், ரியல் எஸ்டேட்... முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

அடுத்ததாக டேர்ம் இன்ஷூரன்ஸ். இதுதான் சரியான இன்ஷூரன்ஸ் திட்டம். பாலிசி எடுப்பதற்கு முன்னர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகால க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது சீராகவும் அதிகமாகவும் இருக்கும்பட்சத்தில் பாலிசி எடுக்கலாம்" என்றார்.

- தங்கம், ரியல் எஸ்டேட் போலவே பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான நிபுணர்கள் பகிரும் விரிவான உத்திகளை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பங்கு, ஃபண்ட், தங்கம், வீடு... முதலீட்டில் லாபம் பார்க்கும் உத்திகள்! https://www.vikatan.com/news/investment/how-to-yield-profits-through-investments

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு