Published:Updated:

கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள்

கொரோனா வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் பாதிப்பு எப்போது சரியாகும்...’ என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை.

கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள்

கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் பாதிப்பு எப்போது சரியாகும்...’ என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை.

Published:Updated:
கொரோனா வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வைரஸ்
லகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது ‘கோவிட்-19.’ இந்த வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த வைரஸ், மனிதர்களை மட்டும் ஐ.சி.யூ-க்களுக்கு அனுப்பவில்லை; உலகப் பொருளாதாரத்தையும்கூட அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பியிருக்கிறது. உலகப் பொருளாதாரம் உயிர்பிழைக்கப் போராடிக்கொண்டிருக்கிறது. கூடவே, தனிநபர்களின் நிதி நிலையையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.

கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள்

இந்த வைரஸால் நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரச்சூழல் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. விமானத்துறை, சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. இந்தத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இவை தவிர, பொதுமக்களின் நடமாட்டம் உலக அளவில் குறைந்திருப்பதால், பொருள்களின் விற்பனை தேங்கியிருக்கிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்டு பொருள்களைத் தயாரிக்க முடியாமல் திணறுகின்றன. இதன் காரணமாக, வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உலகெங்கும் மாறியிருக்கிறது.

கொரோனாவின் நேரடித் தாக்கமும் பாதிப்பும் சீனா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் பெரிய அளவில் இல்லையென்றாலும், இங்கும் தொழில் முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் கண்டிப்பான உத்தரவால், மக்கள் வெளியில் நடமாடுவது கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதனால், பலதரப்பட்ட மக்களின் வருமானம் குறப்பிடத் தகுந்த அளவு குறைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் பாதிப்பு எப்போது சரியாகும்...’ என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் ஒரு மாத காலத்தில் இயல்புநிலை திரும்பலாம் அல்லது ஐந்தாறு மாதங்கள்கூட ஆகலாம். இந்த நிலையில், நமது நிதி வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், இப்போதுள்ள நிலையை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடல் ஆரோக்கியம் வேண்டும்!

கொரோனா நோய் பாதிப்பு எல்லோருக்கும் எளிதில் வந்துவிடக்கூடிய நிலையில், நம்முடைய மற்றும் நமது குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மிடம் எவ்வளவுதான் பணமிருந்தாலும், கொரோனா போன்ற கொடிய நோய் ஏதாவது வந்துவிட்டால், அதிலிருந்து நாம் தப்பித்து மீள்வதுஅவ்வளவு எளிதானதல்ல. எனவே, உடல்நலத்தில் அதிக கவனம் கட்டாயம் தேவை.

முதலீடு
முதலீடு

நிதி ஆரோக்கியம் வேண்டும்!

உடல்நலத்துக்கு நாம் தரும் அதே கவனத்தை நம் நிதி நலத்துக்கும் தர வேண்டும். இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் நமது வருமானம் குறைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, வேலையிழப்பு என்ற பாதிப்பு நம்மைத் தேடி வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இத்தனை காலம் பட்ஜெட் எதுவும் போடாமல் செலவு செய்திருக்கலாம். ஆனால், இனியாவது எதற்கு, எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்வது நல்லது. விலை மிகுந்த செல்போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஆடம்பரமான வீட்டு உபயோகப் பொருள்களை இந்த நேரத்தில் வாங்குவது சரியான முடிவாக இருக்காது.

ஹெல்த் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்!

தொற்றுநோய் அபாயம் நிலவும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவக் காப்பீடு மிக அவசியம். இந்தக் காலத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால், நாம் சேர்த்த பணத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியிருக்கும். இப்படி ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால், எல்லோரும் மருத்துவக் காப்பீட்டை எடுத்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்காதவர்கள் இனியாவது எடுப்பது நல்லது!

மருத்துவக் காப்பீடு எடுப்பதுடன், குடும்பப் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸையும் எடுக்க வேண்டும். குடும்பத்துக்கு யார் வருமானம் ஈட்டுகிறார்களோ, அவர்களின் பெயரில் இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்.

அவசியம், அவசரகால நிதி!

பெரும்பாலானவர்கள் அவசரகால நிதியைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. திடீர் வேலையிழப்பு போன்ற நேரங்களில், கையில் நிதி இல்லாமல், கடன் வாங்கிச் சிக்கலில் சிக்கிக்கொள்வதுதான் வாடிக்கை. இனி அப்படியல்லாமல், சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் அவசரகால நிதியைச் சேமித்து வைத்திருக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாத காலத்துக்கு குடும்பச் செலவுக்கான தொகையை, வங்கி ஃபிக்ஸட் டெபசிட்டில் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைத்திருப்பது நல்லது. அதேபோல, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுத்து வைத்திருப்பது முக்கியம். திடீர் செலவுகளுக்கு அவசரகால நிதியையும், திடீர் மருத்துவச் செலவுகளுக்கு இந்த பாலிசியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுவரை அவசரகால நிதியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் இனியாவது அதை உருவாக்கிக்கொள்வது நல்லது. இந்த அவசரகால நிதியில் சுமார் 50 சதவிகிதத் தொகையை, குடும்பத்தின் மாதச் செலவைப்போல் ஆறு முதல் 12 மடங்கு தொகையை எளிதில் பணமாக்கும்விதமாக வங்கி சேமிப்புக் கணக்கு, லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் வைத்துக்கொள்ள வேண்டும். மீதியை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளலாம்.

கடன் வேண்டாம்!

இன்றைய நிலையில் கடன் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான இலகுவான சூழல் இப்போது இல்லை.

எந்த நேரத்திலும் நிதி நெருக்கடி நேரலாம் என்ற நிலையில், கடன் வாங்கிச் செலவு செய்வதையோ, கடன் வாங்கி முதலீடு செய்வதையோ செய்ய வேண்டாம்.

குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பக்கம் போகாமல் இருப்பது நல்லது.

அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடு..!

இதுவரை நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட், நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட், பாண்டுகள் எனப் பலவற்றில் முதலீடுகளைச் செய்திருப்பீர்கள். இது போன்ற சூழ்நிலையில், அவற்றையெல்லாம் ஒரு முறை ரிவியூ செய்துகொள்வது மிக முக்கியம். முதலீடுகளை வயது, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அஸெட் அலொகேஷன் முறையில் எப்போதும் பராமரிப்பது நல்லது. பங்கு சார்ந்த முதலீடுகளின் மதிப்பு இப்போது மிகவும் குறைந்திருக்கிறது என்பதற்காக, அவற்றில் அதிக அளவு முதலீட்டை மேற்கொள்வது ரிஸ்க்காக முடியக்கூடும்.

முதலீட்டின் தரம்..!

நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்திருப்பவர்கள், அந்த நிறுவனங் களுக்குத் தரக்குறியீடு குறைக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பது அவசியம். அப்படி ஏதாவது குறைத்திருக்கும்பட்சத்தில், அதிலுள்ள முதலீட்டுத் தொகையை வேறு முதலீட்டுக்கு மாற்றிக்கொள்வது நல்லது. கொரோனா கோரத் தாண்டவம் எப்போது சரியாகும், பொருளாதாரம் எப்போதும் எழுச்சி பெற்று பழைய நிலையை அல்லது வளர்ச்சிப் பாதையை எட்டும் என்பதை இப்போதைக்கு யாராலும் கணிக்க முடியாது. எனவே, நாம் இப்போதைக்கு செய்யக்கூடியதெல்லாம் நம் நிதி வாழ்க்கையை நம் பொருளாதார நிலைக்கு ஏற்றதுபோல் மாற்றியமைத்துக்கொள்வதுதான் சரியான தீர்வு. கொடுமையான இந்தக் காலமும் சீக்கிரமே கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் நம் நிதிச் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வோம்.

இக்கட்டான நேரம்... என்ன முடிவெடுப்பது?

பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், `பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவிடட்டுமா?’ என்று முதலீட்டாளர்களில் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பங்குச் சந்தை சாதாரணமாக வீழ்ச்சியிலிருக்கும்போது பங்குகளை விற்பது நஷ்டத்தை ஏற்படுத்தும். கொரோனா பதற்றத்தால் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் சூழ்நிலையில், பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுவது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுக்கும்.

கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள்

முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருந்து, அவற்றின் நிர்வாகம் நன்றாக இருக்கும்பட்சத்தில், தற்போதைய நிலையிலிருந்து அந்த நிறுவனம் நிச்சயமாக மீண்டுவரும். அதனால் நல்ல நிறுவனங்களின் பங்குகளை வைத்துக் கொள்ளுங்கள். மோசமான நிறுவனங்களின் பங்குகளாக இருந்தால், அவற்றை விற்பது குறித்து முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம்.

எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தலாமா?

சிலர், `நஷ்டத்திலிருக்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடுகளை நிறுத்திவிடலாமா?’ என்று கேட்கிறார்கள்.

கொரோனா... மாற்ற வேண்டிய நிதி வாழ்க்கை! - வழிகாட்டும் ஆலோசனைகள்

தற்போதைய நிலையில் பங்குச் சந்தை சரிவிலிருப்பதால், அதில் முதலீடு செய்திருக்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளும் நஷ்டத்தில்தான் இருக்கும். இது தற்காலிகச் சரிவாகக்கூட இருக்கலாம். உங்களுடைய இலக்கு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்கு அல்லது ஓய்வுக்காலத்துக்கு என்று இருக்கலாம். அதற்கு இன்னும் நீண்டகாலம் இருக்கும்பட்சத்தில் எஸ்.ஐ.பி முதலீடுகளை நிறுத்தாமல் தொடர்வதுதான் நல்லது.

அதே நேரத்தில், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவி லுள்ள ஃபண்டுகள் உங்கள் எதிர்கால இலக்கை நிறைவேற்றுவது மாதிரி இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சந்தை இறங்கியிருக்கும் இந்தக் காலம்தான் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள உகந்த நேரம்!