Published:Updated:

தனிநபர் கடன் to கிரெடிட் கார்டு... கடன் நல்லதே... எப்படி?

கடன்
கடன்

'கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினதெ'ல்லாம் பழைய காலம். இன்று எப்பேர்ப்பட்ட அசுரனாக இருந்தாலும் கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது. எனவே, கடன் வாங்குவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் வாங்கும் கடன் நல்ல கடனாக இருக்க வேண்டும்.

கடன் நாடுவோருக்கு 5 கைடன்ஸ்!

எந்தக் கடனாக இருந்தாலும் சரியான முறையில், சரியான தேவைக்காக வாங்காவிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். கடந்த ஐந்து வருடங்களாக நம்மில் பலர் குறுகியகாலக் கடன்களான தனிநபர் கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது.

இந்த விஷயத்தில் அவர்கள் தங்களை அறியாமலேயே மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்கிறார்கள். குறுகியகாலக் கடன்களை வாங்கி, அதன் மூலம் நீண்டகாலச் சொத்துகளான மனைகள் மற்றும் வீடுகளை வாங்குகிறார்கள். ஏதாவது திடீர் மருத்துவச் செலவு அல்லது வேலையிலிருந்து திடீரென நீக்கப்படுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டால், அவர்களால் இந்தத் தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களைச் செலுத்த முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாத நிதிச் சிக்கலில் சிக்கிக்கொள்ளவும் நேரிடும்.

பொருளாதார மந்தநிலை போன்ற சூழ்நிலையால் சம்பள அதிகரிப்பு விகிதம் குறைவு அல்லது அல்லது சம்பள உயர்வு இல்லாத நிலை அல்லது வேலை இழப்பு போன்றவை ஏற்படும்போது, அதிக தொகை மாதத் தவணையாக இருந்தால் குடும்பத்தினர் அனைவரின் நிம்மதியும் பறிபோய்விடும். எப்போது கடன் வாங்கினாலும், அது எந்தக் கடனாக இருந்தாலும் நாம் செலுத்தும் கடனுக்கான மாதத் தவணை, மொத்தச் சம்பளத்தில் பாதிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தனிநபர் கடன் to கிரெடிட் கார்டு... கடன் நல்லதே... எப்படி?

கடன் மாதத் தவணை என்பது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் வேறு ஏதாவது கடன் இருந்தால், இவை அனைத்தும் சேர்ந்தது. உதாரணமாக, ஒருவர் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார்; பி.எஃப்., இன்ஷூரன்ஸ் பிரீமியம், தொழில் வரி, வருமான வரி போன்றவை செலுத்தியது போக மாதம் ரூ.70,000 வீட்டுக்கு எடுத்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் அதிகபட்சம் 35,000 ரூபாய்தான் அனைத்துக் கடன்களுக்கான மாத மொத்தத் தவணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவசரச் செலவுகள், மருத்துவச் செலவுகள் அல்லது திடீர் பணத் தேவை ஏற்பட்டால் சமாளிக்க முடியும்.

கடன்... கவனி... வாங்கு!

1) தேவைக்காகக் கடன் வாங்குங்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதீர்கள்.

2) வாடகை மூலமான வருமானம், வீட்டின் விலையோடு ஒப்பீடும்போது வெறும் 2-3 சதவிகிதம்தான். எனவே, வீடு (கடனில்) வாங்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதிப்பது லாபகரமானதாக இருக்காது.

3) கடன் வாங்குவதற்கு முன்னர் அவசரகால நிதியாக 3-6 மாத சம்பளத் தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

4. குறுகியகாலக் கடன் வாங்கி, நீண்டகாலச் சொத்துகளை (மனை, வீடு) வாங்காதீர்கள்.

5. அந்தந்தத் தேவைக்கு அதற்கென இருக்கும் கடனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக காரை, கார் கடன் வாங்கி வாங்குங்கள். இதற்கான வட்டி விகிதம் சுமார் 9.5 சதவிகிதம்தான் இருக்கும். இதற்கு பதில், தனிநபர் கடன் வாங்கி கார் வாங்கினால் 18-22% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்!

- தனிநபர் கடன், வீட்டுக் கடன் தொடங்கி கிரெடிட் கார்டு வரை... கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முழுமையான வழிகாட்டுதலைத் தரும் நாணயம் விகடன் கவர்ஸ்டோரியை வாசிக்க > கடன்... தவிர்க்க வேண்டிய தவறுகள் தீர்க்கமான தீர்வுகள்! https://www.vikatan.com/news/general-news/how-to-avoid-loan-related-issues

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

கடன் நல்லதே... எப்படி?

'கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினதெ'ல்லாம் பழைய காலம். இன்று எப்பேர்ப்பட்ட அசுரனாக இருந்தாலும் கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது. எனவே, கடன் வாங்குவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் வாங்கும் கடன் நல்ல கடனாக இருக்க வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன், பிசினஸ் கடன் போன்றவை நம் முன்னேற்றத்துக்குத் துணைநிற்பதால், இவற்றையெல்லாம் 'நல்ல கடன்' என்று சொல்லலாம். கார், விலையுயர்ந்த செல்போன், பிராண்டடு ஆடைகள், வாஷிங் மெஷின், டி.வி போன்றவற்றுக்காக வாங்கும் கடன், 'கெட்ட கடன்.' ஏனெனில், இவற்றின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். கூடுமான வரை இந்தப் பொருள்களைக் கடனுக்கு வாங்காமல் இருப்பது நல்லது.

கடன்
கடன்

மிக மிகக் கெட்ட கடன் ஒன்று உண்டு. அது, கிரெடிட் கார்டு கடன். இதைக் கையாளத் தெரியாமல், இஷ்டத்துக்குக் கடன் வாங்கியவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள பத்து வருடங்களுக்கு மேலாகும். 24%, 36% என்று இதன் வட்டி விகிதம் மிக அதிகம். அத்துடன் கடலின் ஆழம் தெரியாமல் விளையாடுபவர்கள் ஒருகட்டத்தில் மீண்டு வர முடியாமல் முழுகுவதுபோல, சிறுகச் சிறுக நம்மைக் கடன் வலைக்குள் இழுத்துக்கொண்டு போவது இந்த கிரெடிட் கார்டுதான். ஆனால், இந்த 'பிளாஸ்டிக் மணி' யுகத்தில் கிரெடிட் கார்டை ஒரேயடியாக ஒதுக்கவும் முடியாது. நம் மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே கிரெடிட் கார்டில் வாங்கும் பழக்கத்தைக் கறாராகக் கடைப்பிடித்தால், அந்தந்த மாத பில்லை முழுவதுமாகச் செலுத்தலாம்; சேரும் பாயின்ட்டுகளுக்கு இலவசப் பொருள் அல்லது கேஷ் பேக் பெறலாம்.

- கல்லூரிக் காலத்தில் தூள் கிளப்பியிருப்பீர்கள்; வேலையில் சேர்ந்த பின்னரும் விளையாட்டுத்தனத்தை அடியோடு விட்டு விடாமல் நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், கேரம், சுற்றுலா என்று பொழுது கழிந்திருக்கும். 'சம்பாதிப்பதெல்லாம் செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான்' என்பதே உங்கள் கொள்கையாக இருந்திருக்கும். ஆனால், காட்டாற்று வெள்ளமாக ஓடிய மனம் முப்பது வயதில் கட்டுக்குள் வந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் சில நிதிப்பழக்கங்களின் பலன்கள் வாழ்வின் எல்லை வரை துணைக்கு வரும். அவற்றை விரிவாகப் பார்ப்போமா? - 30 வயதில்... ஆரம்பிக்க வேண்டிய முக்கிய நிதிப்பழக்கங்கள்! https://www.vikatan.com/news/investment/some-money-handling-principles-you-should-start-when-you-are-in-the-30s

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

பின் செல்ல