Published:Updated:

`பேப்பர் கோல்டு', `எஸ்.ஜி.பி'... தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..?

பேப்பர் கோல்டு
பேப்பர் கோல்டு

ஒவ்வொரு முதலீட்டு வகையிலும், ஒரு சில நிபந்தனைகள், சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும்

தங்கத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான வாசகரின் சந்தேகங்களுக்கு கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் பதிலளிக்கிறார்...

> தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..?

- கே.வைதேகி, மதுரை-2

"தங்க ஆபரணத்தின் மீதான முதலீடு நம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இல்லாமல், 'பேப்பர் கோல்டு' என்று சொல்லப்படும் கோல்டு இ.டி.எஃப் மற்றும் மத்திய அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் தங்கப் பத்திரங்கள் மூலமாகவும் தங்கம் சார்ந்த முதலீடுகளைத் தொடரலாம்.

ஒவ்வொரு முதலீட்டு வகையிலும், ஒரு சில நிபந்தனைகள், சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். நம் முதலீட்டுக்கான காரணம் என்ன, முதிர்வுப் பலனை அடைய எவ்வளவு காலம் காத்திருக்க முடியும் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ப முதலீடுகளைத் தொடரலாம்."

'காகிதத் தங்கம்' என்று சொல்லப்படும் கோல்டு இ.எஃப்.டி முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?

- வி.சுரேஷ் கிருஷ்ணா, இ-மெயில் மூலம்

"செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்குத் தரகர்களிடம் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளைத் தொடங்க வேண்டும். ஆண்டுக்கு 0.40 முதல் 0.80% பராமரிப்புக் கட்டணம் இருக்கும். எந்த ஒரு வர்த்தக தினத்திலும் வாங்கலாம், விற்கலாம். வரிச் சலுகை கிடைக்காது. மூலதன ஆதாய வரி இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட கோல்டு இ.டி.எஃப்கள் தற்போது வர்த்தகமாகி வருகின்றன."

`பேப்பர் கோல்டு', `எஸ்.ஜி.பி'... தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..?

> ஆர்.பி.ஐ வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகள் பற்றி விளக்கவும்.

- ரமேஷ் ராயன், முகநூல் மூலம்

"இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளிடப்படுவது 'எஸ்.ஜி.பி' (சாவரின் கோல்டு பாண்டு) எனப்படும் தங்கப் பத்திரங்கள். இவற்றில் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஒரு கிராமின் விலை இரண்டு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும்.

இதன் முக்கிய அம்சங்கள்...

1. தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். | 2. முதலீட்டுக்கு வட்டியாக ஆண்டொன்றுக்கு 2.5% அளிக்கப்படும். | 3. முழுப் பலன்களைப் பெற, முதிர்வுக் காலமான எட்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு வெளியேறலாம். | 4. கணவன்-மனைவி இணைந்தும், மைனர் பேரிலும் முதலீடுகளைச் செய்யலாம். | 5. குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் முதலீடு செய்யலாம். | 6. தனிநபருக்கு முதலீடு ஆரம்பத்திலிருந்து முழுக்காலத்தில் முதிர்வடையும்பட்சத்தில் பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.''

> நீண்டகாலமாக தங்கத்தின் விலை ஏறாமல், கடந்த ஓராண்டில் திடீரென ஏற என்ன காரணம்? | என் மகளுக்கு இன்னும் பத்தாண்டுகள் கழித்து 50 பவுன் நகை தேவை. அதற்கு நகைச் சீட்டு வாங்கலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மூலம் வாங்கலாமா... எதில் முதலீடு செய்தால் லாபம்? | தங்கத்தின் விலை எப்போதெல்லாம் ஏறும், எப்போதெல்லாம் இறங்கும் எனச் சொல்ல முடியுமா? | தங்கத்தின் விலை மாற்றத்துக்கும், பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருக்கிறதா? | டீமேட் கணக்கு மூலம் 120 கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகள் வாங்கியிருக்கிறேன். தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெறுவதுபோல் இந்த யூனிட்டுகளை அடமானம் வைத்து பணம் பெற முடியுமா?

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பகுதியை நாணயம் விகடன் இதழில் காண > தங்கத்தில் முதலீடு செய்ய சரியான வழி..! - 'கமாடிட்டி நிபுணர்' ஷியாம் சுந்தர் Click here https://bit.ly/2MjPbau

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு