தங்கத்தின் விலை 2019-ம் ஆண்டில் நன்கு உயர்ந்ததால், நல்ல வருமானத்தைக் கொடுத்தது. இனி 2020-ம் ஆண்டில் தங்கம் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதைப் பார்ப்போம்.

உள்நாட்டில் விலை உயர்ந்த தங்கம்

2013-ம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு அவுன்ஸ் (சுமார் 31 கிராம்) தங்கம் விலை 1,557 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் 1,280 டாலராக இருந்தது. ஆண்டு முடிவடையும்போது, அதாவது தற்போது 1,500 அமெரிக்க டாலரை ஒட்டி வர்த்தகமாகிவருகிறது. ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சுமார் 17% அதிகரித்திருக்கிறது.

நம் நாட்டில் 2019, ஜனவரி 1-ம் தேதி அன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.3,021 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் கடைசியில் ரூ.3,690-க்குமேல் வர்த்தகமாகிவருவதைப் பார்க்க முடிகிறது. இது 22% விலை உயர்வாகும்.

உலக அளவில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

தங்கத்தின் விலை உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டுதான் மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ நகரும். அந்த வகையில் உலக அளவில் நிகழும் பிரச்னைகளை, மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அமெரிக்காவின் ஜி.டி.பி-யும் பணவீக்கமும்

அமெரிக்காவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, அந்த நாட்டின் ஜி.டி.பி. அமெரிக்காவின் ஜி.டி.பி வளர்ச்சி 2018-ம் ஆண்டின் மத்தியில் அதிகபட்சமாக 3.5% காணப்பட்டது. 2019-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 2.1% குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் இறக்குமதி வரி விதிப்பு. இந்த வரி விதிப்பு அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் வர்த்தகப் போரின் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.

இரண்டாவது, பணவீக்கம். அதாவது, அமெரிக்க ஐ.எஸ்.எம் சேவைத்துறை சார்ந்த குறியீடு ஒரு வருடத்துக்கு முன் 13% வருட உச்சத்தில் அதாவது, 60.8 சதவிகிதமாக இருந்தது. கடந்த நவம்பரில் இது 53.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தக் குறியீடு 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் வரை பொருளாதாரம் வளர்ச்சியில் இருப்பதாக அர்த்தம்.

அதிகரிக்கும் கடன்...

ஒட்டுமொத்த அமெரிக்க நிறுவனங்களின் கடன் தொகை, கடந்த பத்து வருடங்களில் 50% அதிகரித்து, 10 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஒருபக்கம், உலகப் பொருளாதாரம் சுணக்கம் அடைய வாய்ப்பு இருப்பதாகக் கருதக்கூடிய நிலையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி 2020-ம் ஆண்டில் வட்டி விகிதங்களை உயர்த்தினால், நிறுவனங்களின் செயல்பாடுகளில் அவை நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக யூ.பி.எஸ் (UBS) நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. எனவே, நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்கும்பொருட்டு அமெரிக்க ஃபெடரல் வங்கி, நிதிக் கொள்கைகளில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கும் என்று அறிவித்துள்ளது. ஒருவேளை இன்றைய நிலையிலேயே நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டால், அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்க முயலும். தற்சமயம் மதில்மேல் பூனையாகவே அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வியூகம் அமைத்திருக்கிறது.

அமெரிக்க சீன வர்த்தகப்போர் தொடரும் என்றால், தங்கம் மேலும் விலை உயர வாய்ப்புகள் அதிகம்.

பங்குச் சந்தை சரிந்தால்..?

பொதுவாக பங்குச் சந்தைகள், நிறுவனங்களின் எதிர்காலச் செயல்பாடுகள் அதாவது, விற்பனை மற்றும் லாப சதவிகிதம் ஆகியவை முன்கூட்டியே கணிக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறும். 2009-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மேல்நோக்கி நகர்ந்து உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த நிலையில் வர்த்தகப் போரின் விளைவாக நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டால், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர சாத்தியம் இருக்கிறது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், பணவீக்கம் இரண்டிலும் மிதமான போக்குக் காணப்படும்போது, பணப் புழக்கத்தை அதிகரிக்க மத்திய வங்கிகள் கடன் பத்திரங்களை வாங்குவதை ஒரு வழிமுறையாகப் பின்பற்றி வருகின்றன. அந்தந்த நாடுகளின் கரன்ஸி மதிப்பு இறக்கமடையச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், 2020-ம் ஆண்டில் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கைகளை எப்படிக் கையாளவிருக்கின்றன என்பதைச் சந்தைகள் கவனித்துவருகின்றன.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம்...

வர்த்தகப் போரின் தாக்கங்களால் ஏற்படும் மந்தநிலை, சீன – அமெரிக்க நாடுகளுக்கு ஏற்டுத்தக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக ஐரோப்பிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இப்போதே, அதன் தாக்கத்தை ஜெர்மனியின் தேக்கநிலை பிரதிபலித்துவருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, உற்பத்தித்துறை பாதிப்படைந்திருக்கிற. 2019-ம் ஆண்டு முழுவதும் ஐரோப்பிய மத்திய வங்கி, (ECB) வட்டி விகிதங்களைக் குறைத்தும் பணவீக்கம் தொடர்ந்து சரிந்துவருவது கவலை தருவதாக இருக்கிறது. இதற்கான தீர்வுகளாக, தளர்வுடன் கூடிய நிதிக் கொள்கைகளை (Loose monitory policy), பணப் புழக்கத்தை அதிகரித்து, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நிதிக்கொள்கையைக் கடும் எதிப்புகளுக்கிடையே மத்திய வங்கி கையாண்டுவருகிறது. இதனால் மட்டும் பொருளாதாரத்தை மேம்படுத்திவிட முடியுமா என்பதில் சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பொருளாதார வல்லுநர்களும் சந்தேகப்படுகின்றனர். எனவே, தங்கத்தின் விலைப்போக்கை நிர்ணயிப்பதில் ஐரோப்பிய பிராந்தியத்தின் பொருளாதார நிகழ்வும் முக்கியமானதாக இருக்கிறது.

2020–ம் ஆண்டு தங்கம் விலை உயருமா?

கடந்த 17 மாதங்களாக அதிகமாகப் பேசப்பட்ட வர்த்தகப் போர், 2019-ம் ஆண்டில் தங்கத்தை 14% விலை உயரச் செய்து லாபம் தந்திருக்கிறது. வரும் புத்தாண்டில், சீனா எந்த அளவுக்கு அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு உடன்பட இருக்கிறது அல்லது இறுக்கமான சூழ்நிலை தொடருமா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். வர்த்தகப் போர் தொடர்ந்தால், தங்கம் மேலும் விலை உயர வாய்ப்புகள் அதிகம். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்களைப் பரிசீலிக்கலாம்!

கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரிப்பு!

கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு கோல்டு இ.டி.எஃப் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில் தங்கம் விலை சுமார் 1,250 டாலராக இருந்தபோது, தோராயமாக 72 மெட்ரிக் டன் தங்கம் இ.டி.எஃப் மூலம் வாங்கப்பட்டது. அது, இந்த ஆண்டு இறுதியில் 82 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 17 நாள்கள் இ.டி.எஃப் மூலமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் தொடர்பான முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்க அதிபரின் புதிய அறிவிப்புகள், நடவடிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் திருப்பங்களைச் சந்திக்கலாம் எனும் நிச்சயமற்ற தன்மை, தங்கம் விலை உயர முக்கியமான காரணம்.