நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் இரண்டாம் நாள் நிகழ்வில், ‘செல்வம் சேர்க்க முதலீட்டாளர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்!’ என்ற தலைப்பில் `ஈக்னாமிக்ஸ்’ நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் பேசினார்.

“பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இன்னொருவரிடம் ‘ஃப்ரீ அட்வைஸ்’ கேட்டுச் செயல்படுவது தவறான பழக்கம். அப்படிக் கிடைக்கும் அறிவுரைகள் சரியானவையாக இருப்பதில்லை. சந்தையின் செயல்பாட்டை தினமும் பார்த்து முதலீடு செய்வதும் தவறு. 90% முதலீட்டாளர்கள் தினமும் 20 முறைக்குமேல் சந்தையைக் கண்காணிக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பம்தான் ஏற்படும். வார இறுதியில், வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை செயல்பாட்டைப் பார்த்தாலே போதுமானது. சில நிறுவனப் பங்குகளின் விலை குறைவாக இருக்கும்; ஆனால், செயல்பாடு பல்லாண்டுகளாக சீரான ஏற்றத்தில் இருக்கும். இன்னொரு நிறுவனம் புதிதாகப் பங்குச் சந்தைக்குள் நுழையும்போதே அதிக பங்கு விலையுடன், பெரிய லாபத்தைக் காட்டுவதாக இருக்கும். உடனே பலரும் அதை நம்பி முதலீடு செய்வார்கள். ஆனால், சிறிது காலத்திலேயே அதன் செயல்பாடு சரியில்லை என்றதும் ஏற்கெனவே முதலீடு செய்திருந்த நிறுவனத்துக்கே திரும்புவார்கள். இதுவும் தவறு. பங்கு விலையைப் பார்த்து மாறிக்கொண்டேயிருக்கக் கூடாது. குழப்பமாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ‘Law of Demand Theory’ என்று ஒன்று உண்டு. அந்தக் கோட்பாட்டை 98% பேர் மீறுகிறார்கள். 2% பேர்தான் கடைப்பிடிக்கிறார்கள்” என்றார்.

`யூனிஃபை கேப்பிட்டல்’ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன், ‘பொருளாதார மந்தநிலை... பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!’ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேச்சில் தினசரி பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் இரைச்சல் போன்றவை. முதலீட்டாளர்கள் இரைச்சலைப் பொருட்படுத்தாமல் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும்.

தற்போது இந்தியா முழுவதும் அனைவரும் உச்சரிக்கும் வார்த்தையாக ‘பொருளாதார மந்தநிலை’ இருக்கிறது. அது மெள்ள மெள்ளத்தான் மாறும். கடந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் இண்டெக்ஸை பார்க்கும்போது சில பங்குகள் நன்கு செயல்பட்டிருக்கின்றன. பல பங்குகளின் செயல்பாடுகள் நன்றாக இல்லை. கார் உற்பத்தித்துறையின் தேக்கநிலைக்கு புகைமாசுக் கட்டுப்பாட்டுக்காக இன்ஜின் மாற்றம் செய்வதும், வாடகை கார்களின் வருகையும், கார் பார்க்கிங் பிரச்னைகளும் காரணங்களாக இருக்கின்றன. ஆக, வாகன உற்பத்தித்துறையில் மந்தநிலை இல்லை, மந்தநிலை போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது” என்றார்.

முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸ், ‘முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிக்கும் உபகரணங்கள்!’ என்ற தலைப்பில் பேசினார். ‘‘முதலீட்டாளர்களுக்கு உபகரணங்கள் மிகவும் முக்கியம். முதலீட்டுக்கான உபகரணங்களாக முதலீடு குறித்த அறிவு, சந்தை ஏற்றத்தின்போது எது தேவை, இறக்கத்தின்போது எது தேவை என்ற தெளிவு ஆகியவை இருக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் சந்தை தற்போது உச்சத்தில் இருக்கிறது. எனவே, சந்தை எல்லா நேரமும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையைப் பிரதிபலிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைக் குவித்தால் சந்தை உயரும். முதலீட்டை விலக்கினால் சந்தை சரியும். முதலீட்டாளர்களின் முந்தைய அனுபவங்களே சந்தையின் செயல்பாட்டை நிர்ணயிக்கும். எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையைச் செயல்பட வைக்கும். எதிர்பாராமல் ஏற்படும் ஏற்றங்களை நம்பி முதலீடு செய்யக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்னர் அதற்குத் தயார்படுத்துதலும் கவனமும் தேவை. சரியான முதலீட்டுப் பயிற்சி வேண்டும். முதலில் சின்ன சின்ன முதலீடுகள் மூலம் பயிற்சி பெற வேண்டும். சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் ரிஸ்க் குறித்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். இதற்குப் பொறுமை அவசியம் வேண்டும்’’ என்றார் ரெஜி தாமஸ்.

`ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், ‘தமிழ்நாடு... 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். “இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இந்தியாவிலேயே நடுத்தர வர்க்க மக்கள்தொகை, தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறது. அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்கமாக வெகு வேகமாக முன்னேறி வருகிறார்கள். கல்வியைப் பொறுத்தவரை, கல்லூரிப் படிப்பறிவு விகிதத்தில் இந்தியா 25.8 சதவிகிதமாக உள்ளது. தமிழகமோ 48.6 சதவிகிதமாக உள்ளது. இதில் டெல்லி நகரம்கூட நமக்குப் பின்னால்தான் இருக்கிறது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளைக் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பும் மனப்பான்மை அதிகரித்திருக்கிறது. நம் தற்போதைய தேவை, கல்லூரி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது. அதை முறைப்படி செய்துவிட்டால், 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையலாம். கணினித் துறையின் நவீன படிப்புகளை முடித்துவிட்டு, புத்தாக்கச் சிந்தனையோடும், பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் திறனோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கினால், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகம் எளிதில் அடையும்” என்றார் சுரேஷ் சம்பந்தம்.

`ஸ்பார்க் கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’, `இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ்’ நிர்வாக இயக்குநர் கணேஷ்ராம் ஜெயராமன், ‘இந்தியாவின் எதிர்காலம்... வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேசினார்.

“இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலையைச் சரிசெய்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் வழங்கியது. தொடர்ச்சியாக ஐந்து முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. இதன் மூலம் வங்கிக்கடன் வட்டி விகிதம் குறைந்தால், புழக்கத்துக்கு வராமல் மக்களிடமிருக்கும் பணம் வெளியில் வரும் என்று எதிர்பார்த்தது.

வங்கிகள் ரிஸ்க் எடுத்து அதிக வருமானத்தை ஈட்ட முயல வேண்டும். இதற்காகத்தான் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.டி.பி.ஐ வங்கியை எல்.ஐ.சி கையகப்படுத்தியது. இது போன்ற நடவடிக்கைகள் எத்தகைய பலனளிக்கும் என்பது இனிதான் தெரியவரும். பத்து முன்னணி நிறுவனப் பங்குகளே பங்குச் சந்தையை முன்னெடுத்துச் செல்கின்றன.

‘ஃப்ரீ அட்வைஸ்’ கேட்டுச் செயல்படுவது தவறான பழக்கம். சந்தையின் செயல்பாட்டை தினமும் பார்த்து முதலீடு செய்வதும் தவறு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் நஷ்டத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரிசெய்வதற்கும், முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றுவதற்கும் அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதுதான் புயல் ஓய்ந்து வெள்ளம் வடிந்திருப்பது போன்ற நிலை நிலவுகிறது. இனிமேல்தான் பங்குச் சந்தையின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவரும்” என்றார் அவர்.

‘உலகப் பொருளாதாரமும் பங்குச் சந்தையும்... 2020 எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் ‘ஐ.எஃப்.எம்.ஆர்’ டீன் அனந்த நாகேஸ்வரன் பேசினார். ‘‘உலக அளவில் சீன மற்றும் அமெரிக்கப் பொருளாதார நிலைகளைப் பார்ப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்துத் தெளிவடையலாம். தற்போது சீன-அமெரிக்க வர்த்தகப் போரில் அமெரிக்காவுடன் சீனா சமரச ஒப்பந்தத்துக்கு வந்திருக்கிறது. சீன மக்களின் நுகர்வு அதிகரிக்க வேண்டும். ஆசிய அளவில் நம்மிடமிருந்து சீனா அதிக அளவில் பொருள்களை இறக்குமதி செய்தால்தான் நமக்கு வளர்ச்சி இருக்கும். சீனாவின் உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 3.5%-4.5% மட்டுமே. சீனாவுக்கு 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய சந்தை நெருக்கடி இருக்கும். அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும். 2020-ம் ஆண்டில் சீனாவின் கரன்ஸியும் பலவீனமடைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், நம் டாலருக்கு நிகரான பண மதிப்பு 70-72 ரூபாய்க்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க அந்நியச் செலாவணியில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாததால், டாலர் மதிப்பு சீராக இருக்கிறது. இது தொடருமா என்பது சந்தேகமே. அமெரிக்காவில் விலைவாசி உயராததும் ஒரு சிக்கலே. பிரெக்ஸிட் சிக்கலும் அமெரிக்க-சீன ஒப்பந்தமும் நேர்மறையாகவே இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை இந்தியா குறைத்திருப்பதால், சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா ஈர்க்கும்” என்றார் அவர்.

நாணயம் விகடன் நடத்திய கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது!

தொழில்முனைவோரா, பிசினஸ்மேனா?

ரேஸ் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர் டாக்டர் ரேஸ் குமரன் ‘தொழில்முனைவோர் Vs பிசினஸ்மேன்’ என்ற தலைப்பில் பேசினார். தொழில்முனைவோர், பிசினஸ்மேனுக்கு இடையிலான வேறுபாடு என்ன என்பதை விளக்கினார். “கிரியேட்டிவ் சிந்தனையோடு புதிதாக ஒன்றை உருவாக்குபவர் தொழில்முனைவோர். ஏற்கெனவே இருக்கும் பிசினஸ் மாடலைக் காப்பியடிப்பவர் பிசினஸ்மேன். தொழில்முனைவோர்கள் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவார்கள், தொழிலுக்கு உயிர் தருவார்கள், துணிந்து செயல்படுவார்கள். பிசினஸ்மேன், குடும்பம் குறித்த சிந்தனை இல்லாமல் தொழிலிலேயே கவனமாக இருப்பார். மற்ற போட்டியாளர்களைப் பற்றிய சிந்தனையில் இருப்பார். தொழில்முனைவோருக்கு அவரே அவருக்குப் போட்டியாளராக இருப்பார்’’ என்றவர், நம் பிசினஸ் இலக்குகளை எப்படி நிர்ணயிப்பது என்பதை பிராக்டிகலாக விளக்கிச் சொன்னார்!