Published:Updated:

அதிகரிக்கும் எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை..! - பாசிட்டிவ் மாற்றம்..!

எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி

ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை ரூ.28.33 லட்சம் கோடி. விரைவில் இது ரூ.30 லட்சம் கோடியாக மாறக்கூடும்!

மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 செப்டம்பரில் எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் (ஃபோலியோக்கள்) 3.33 கோடியாக இருந்தது, அக்டோபரில் 3.37 கோடியாக அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.7,788 கோடி. இது அக்டோபரில் ரூ.7,800 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் எஸ்.ஐ.பி மொத்த முதலீட்டுத் தொகை ரூ.3.35 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

தொடர்ந்து நான்கு மாதங்களாக ஈக்விட்டி ஃபண்டுகளில் செய்யப்படும் நிகர முதலீடு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருந்து, ஈக்விட்டி ஃபண்டுகள் லாபத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் யூனிட்டுகளை விற்று லாபம் பார்த்திருப்பதால், ஈக்விட்டி ஃபண்ட் நிகர முதலீட்டுத் தொகை குறைந்துள்ளது. அக்டோபரில் ஈக்விட்டி ஃபண்ட் நிகர முதலீடு ரூ.2,724 கோடியாக உள்ளது. இது செப்டம்பரில் ரூ.734 கோடியாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிகர முதலீடு ரூ.98,575 கோடியாக உள்ளது. இதை அடுத்து இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ.28.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் ரூ.30 லட்சம் கோடியை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்!