நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி) சார்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதைவிடச் சிறப்பாக வந்துள்ளன.

தொழில் ஒப்பந்தங்களில் வெற்றி, அடுத்தடுத்து வரும் தொழில் ஒப்பந்தங்கள், `எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான நிதியாண்டாக 2020-21 இருக்கும்’ என்ற கணிப்பு ஆகியவை ஐ.டி துறையின் பாசிட்டிவ் அம்சங்களாக உள்ளன.

நிஃப்டியைவிட ஏற்றம்கண்ட என்.எஸ்.இ ஐ.டி இண்டெக்ஸ்

டயர் 1 ஐ.டி நிறுவனங்களாக உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் ஆகியவற்றின் நிதிநிலைகள் மிகச் சிறப்பாக உள்ளன. இவற்றின் பிசினஸ் மாடல் எந்தவிதச் சூழலையும் எதிர்கொண்டு சிறப்பாகச் செயலாற்றும் வகையில் உள்ளன. மேலும், நிர்வாக அளவிலும் ஸ்திரமாகச் செயல்படுகின்றன. அதேசமயம் இந்த நிறுவனப் பங்கு மதிப்புகளும் அதிக விலையில் இல்லை. கோவிட்- 19 பாதிப்பில் மற்ற துறைகள் அதிக ஏற்ற இறக்கத்துடனும், சப்ளை மற்றும் டிமாண்ட் நிலைகுலைந்தும் இருக்கும் நிலையில், ஐ.டி துறையில் இது போன்ற நெருக்கடி இல்லை என்பது அதன் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் என்.எஸ்.இ ஐ.டி இண்டெக்ஸ், நிஃப்டியைவிட 20% அதிகமாக ஏற்றம்கண்டிருக்கிறது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் ஐ.டி இண்டெக்ஸ் 10% வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் நிஃப்டி 9.4% இறக்கம் கண்டுள்ளது.

டயர் 1 ஐ.டி நிறுவனங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட், பங்குகளைத் திரும்ப வாங்கியது (பைபேக்) மூலம் 2015-16 முதல் 2019-20 வரை மொத்தமாக ரூ.2.3 லட்சம் கோடி வருமானத்தைக் கொடுத்துள்ளன. மொத்த லாபத்தில் இவை மட்டுமே 71% ஆகும்.

லாபம் தந்த வொர்க் ஃப்ரம் ஹோம்..!

ஐ.டி நிறுவனங்கள் இருந்த இடத்திலிருந்தே பணிபுரிவதைத் தீவிரமாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இதற்குச் சர்வதேச வாடிக்கை யாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் அவற்றின் தொழில் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் மாற்றியமைத்துள்ளன.

நேரடித் தொடர்பு இல்லாமலேயே விற்பனை, ஒப்பந்தங்களை முடிப்பது, பரிவர்த்தனை, ஊழியர்களை ஆன்லைன் மூலமே கையாளுதல் இவையெல்லாமே ஐ.டி நிறுவனங்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளன. சப்ளை சார்ந்த சிக்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. கோவிட்-19 தாக்கத்தால் இதன் பாதிப்பு 10-30% மட்டுமே உள்ளது.

சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள்..!

திடீரெனத் தேவை குறைந்தது தொழில் சார்ந்து ஆகும் செலவுகளை மறு ஆய்வு செய்யத் தூண்டியிருக்கிறது. மேலும், தொழிலில் சுணக்கம், தேவையற்ற செலவுகள் போன்றவற்றால் மொத்த வருவாய் -2% முதல் -7% வரை வீழ்ச்சி கண்டதையடுத்து நிறுவனங்கள் ஐ.டி சார்ந்த தீர்வுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. இதனால், இன்ஃபோசிஸ், விப்ரோ, எல் அண்ட் டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் அதிகரித்திருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஊதிய உயர்வு ஒத்திவைப்பு, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம், பயணச் செலவுகள் குறைந்தது, ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவை லாபம் அதிகரிப்புக்குக் காரணங்களாக உள்ளன. ஆனால், அதிகபட்ச மதிப்பு குறைவாலும், கடன்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாலும் நிறுவனங்களின் எபிட் (EBIT) வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது.

டி.சி.எஸ்., சயன்ட் ஆகியவற்றின் லாப வளர்ச்சி மற்றவற்றோடு ஒப்பிடுகையில் சிறப்பாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் கணிசமான ஆர்டர்களை வைத்துள்ளன.

உதாரணமாக, ஹெச்.சி.எல் காலாண்டு அடிப்படையில் 40% வளர்ச்சியில் உள்ளது. நிறுவனங்கள் நிலுவைத் தொகை வசூலில் தீவிர கவனம் செலுத்துகின்றன. லாப அதிகரிப்பு, ஆரோக்கியமான வசூல், வரம்புக்கு உட்பட்ட மூலதனச் செலவு ஆகியவை நிறுவனங்களின் நிதிநிலையைச் சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

வரிக்குப் பிந்தைய லாபம் (நிகர லாபம்) டி.சி.எஸ்-ல் 114 சதவிகிதமாகவும், ஹெச்.சி.எல்-ல் 196 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கின்றன. எனவே, லாபமும் கணிசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளன. எரிசக்தி, உற்பத்தி, ஏரோஸ்பேஸ் மற்றும் வாகனத்துறை ஆகியவை மீண்டுவர அதிக கால அவகாசம் தேவைப்படலாம்.

தற்போது நிதிச் சேவை சார்ந்த நிறுவனங்கள் (BFSI), டெலிகாம் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நுகர்வோர் பொருள்கள் (CPG) ஆகியவை சற்று நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீண்டகால அடிப்படையில் தொழில் நுட்பங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, ஐ.டி துறைக்குச் சாதகமான போக்கு நிலவுகிறது. இந்தத் துறையில் வலுவாக உள்ள நிறுவனப் பங்குகளை கவனிக்கலாம். ஐ.டி துறையில் சில நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் சிறப்பான வருவாய் வளர்ச்சியடையும் திறனுடன் உள்ளன. இதனால் ஐ.டி துறை பங்குகளில் சமீபத்திலுள்ள ஏற்றம் தொடர்ந்து நீடிக்கும் என்றே நம்பலாம். மேலும், இவற்றின் பங்கு மதிப்பு நியாயமாக உள்ள நிலையில், நிறுவனத்தின் நிலையான நிதிநிலை, வருமான விகிதம், ரிஸ்க் எடுப்பதற்குக் கிடைக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் முதலீட்டாளர்கள் பின்வரும் பங்குகளை கவனிக்கலாம்.

ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் (HCL Technologies)

இலக்கு விலை ரூ.765.

இந்த நிறுவனம் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், எரிசக்தி, பயணம், போக்குவரத்து, விடுதிகள் மற்றும் ரீடெயில் உள்ளிட்ட நெருக்கடியான துறைகளோடு குறைவான தொடர்பே கொண்டுள்ளது. கூடுதலாக, தகவல் மேலாண்மை சிஸ்டத்தில் (IMS) அதிக பங்குவகிக்கிறது. இதன் மூலம் மட்டுமே 37% வருவாய் கிடைக்கிறது. இதனால் அதன் வருவாய் போர்ட்ஃபோலியோவுக்கு சிறப்பான பலனைத் தருகிறது.

மேலும், இந்த நிறுவனம் நிதிச் சேவை, தொழில்நுட்பச் சேவை, உற்பத்தி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் அதிக சேவை அளித்து வருகின்றன. தற்போதைய நெருக்கடியிலிருந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் வெற்றிகரமாகக் கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல் அண்ட் டி இன்ஃபோடெக்

இலக்கு விலை ரூ.2,645.

கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும் எல் அண்ட் டி இன்ஃபோடெக் தனது வாடிக்கை நிறுவனங்களை அதிகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஸ்டாண்டர்டு சாட்டர்ட் நிறுவனம் இதன் வாடிக்கை நிறுவனமாகியுள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவு நம்பிக்கை அளிக்கும்விதமாக உள்ளது. கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகான உலக இயக்கத்தில் டிஜிட்டலின் பங்கு அதிகமிருக்கும். இதில் அதிக பலனடையும் வகையில் இந்த நிறுவனம் இருக்கும்.

இன்ஃபோசிஸ்

இலக்கு விலை ரூ.1,050.

இன்ஃபோசிஸ் நிறுவனம் வருவாய் மற்றும் லாபம் இரண்டிலும் வலுவான நிதிநிலையைக் கொண்டுள்ளது. லாபத்தை அதிகரிப்பதில் சிறப்பான செயல்பாட்டை இந்த நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இதன் வருவாய், லாபம் ஆகியவை இதன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் டிஜிட்டல் சார்ந்த துறைகளில் செய்யப்படும் முதலீடுகளிலிருந்து பயனடையப் போகும் முன்னணி நிறுவனம் இதுதான்.

மைண்ட் ட்ரீ

இலக்கு விலை ரூ.1,160.

கடந்த ஜூலை 2019 முதல் மைண்ட் ட்ரீ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இடையில் இணக்கமான, சமநிலையான சூழலை உருவாக்குவதில் அதிக உற்சாகத்துடன் பணியாற்றியது. ஜூன் காலாண்டின் லாப வளர்ச்சியைப் பார்க்கும்போது, கோவிட்-19 பாதிப்பு முடிவுக்கு வந்த பிறகு இந்த நிறுவனம் மிக விரைவில் நெருக்கடியிலிருந்து மீண்டுவிடும் என்றும், சவால்களைக் கடந்து வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இதன் ஆரோக்கியமான தொழில் ஒப்பந்தங்கள், வலுவான லாப வளர்ச்சி ஆகியவை இதன் பாசிட்டிவ் அம்சங்கள்.

பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

இலக்கு விலை ரூ.1,040

கடந்த சில காலாண்டுகளில் இதன் சேவைப் பிரிவில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கோவிட்-19 பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நெருக்கடியையும் சிறப்பாகச் சமாளித்துவருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் கைவசமுள்ள ஆர்டர்களும் ஆரோக்கியமான வளர்ச்சியில் உள்ளன. இதனால் குறுகியகாலத்துக்கு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய கணிப்பு பாசிட்டிவாக உள்ளது. கோவிட்-19 பாதிப்பின் விளைவாக ஏற்பட்டுள்ள டிஜிட்டல் சேவையின் பயனாளியாக இந்த நிறுவனம் இருக்கும்.