Published:Updated:

தினசரி எஸ்.ஐ.பி முதலீடு...  உங்களுக்கு ஏற்றதா? புதிய முதலீட்டுக்கான வழி...

MUTUAL FUND

பிரீமியம் ஸ்டோரி

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல், சிறுகச் சிறுக சீரான முதலீட்டுத் திட்டம் (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் – எஸ்.ஐ.பி) மூலம் முதலீடு செய்துவரும்பட்சத்தில் பெரும் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஹசன் அலி 
ஆலோசகர், 
Siptiger.com 
ஹசன் அலி  ஆலோசகர், Siptiger.com 

எஸ்.ஐ.பி என்பது ஆரம்பத்தில் மாதச் சம்பளக்காரர்களைக் குறி வைத்து, மாத எஸ்.ஐ.பி-யாக இருந்து வந்தது. அதன் பிறகு, சுய தொழில் செய்பவர்களின் வசதிக்காக காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எஸ்.ஐ.பி வந்தது.

அதன் பிறகு, சந்தையின் ஏற்ற இறக்கத்தில் கூடுதல் லாபம் நோக்கத் துடன் வாராந்தர எஸ்.ஐ.பி அறிமுக மானது. இதன் பிறகு, பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க தினசரி எஸ்.ஐ.பி சமீப ஆண்டுகளில் அறிமுகமானது.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் தினசரி எஸ்.ஐ.பி முறையை எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்கூட அவற்றின் அனைத்துத் திட்டங்களிலும் இந்த தினசரி எஸ்.ஐ.பி முறையைக் கொண்டு வந்துவிடவில்லை. குறிப்பிட்ட சில திட்டங்களில் மட்டுமே இந்த வசதியைக் கொண்டு வந்திருக்கின்றன.

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

தினசரி எஸ்.ஐ.பி என்பது எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் முழுமையான பலனை அடைய உதவுவதாக உள்ளது. மாத எஸ்.ஐ.பி-யில் மாதம் ஒருமுறை மட்டுமே பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க பலன்களைப் பெற முடியும். தினசரி எஸ்.ஐ.பி முறையில் மாதம் முழுக்க, சந்தையின் ஏற்ற இறக்கத்தின் ஏற்படும் பலனை அடைய முடியும்.

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டில் தினசரி எஸ்.ஐ.பி முதலீட்டுக்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாயாக உள்ளது. இந்தத் தினசரி எஸ்.ஐ.பி முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ் தர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் எனப் பலவழிகளில் மேற்கொள்ள முடியும்.

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் தினசரி எஸ்.ஐ.பி முறையில் தினம் ரூ.300 வீதம் ஒரு மாதத்தில் 22 வர்த்தக தினங்களில் முதலீடு செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. இதன்படி, மாத முதலீடு ரூ.6,600-ஆக இருக்கும். எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட், அதன் ஈக்விட்டி ஃபண்ட், குரோத் ஃபண்ட், மிட்கேப் ஃபண்ட், இன்ஃப்ரா ஃபண்ட், இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் வைத்திருக் கிறது. இந்த நிறுவனம் பேலன்ஸ்டு ஃபண்ட், மன்த்லி இன்கம் பிளான் ஆகியவற்றிலும் தினசரி எஸ்.ஐ.பி முறையைக் கொண்டிருக்கிறது.

ஈக்விட்டி ஃபண்டுகளில் தினசரி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தாலும் முதலீட்டுக் காலத்தைக் குறைந்தபட்சம் 3 - 5 ஆண்டுகள் வரை இருப்பது நல்லது. அப்போது தான் நீண்டகால காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி லாபம் கிடைக்கும்.

தினசரி எஸ்.ஐ.பி என்கிறபோது வங்கியில் தினமும் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கான தொகை இருப்பது அவசியம். இதற்கு மாதம் குறைந்தது சுமார் ரூ.6,500 முதல் ரூ.11,000 தேவைப்படும். இந்தளவு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் முதலீடு செய்துவரும் ஈக்விட்டி ஃபண்டில் தினசரி எஸ்.ஐ.பி வசதி இல்லை என்பதற்காக கவலைப்படத் தேவையில்லை. உங்களின் ஒரு மாத முதலீட்டுத் தொகையை அந்த நிறுவனத்தின் ஏதாவது ஒரு கடன் சார்ந்த ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் நீங்கள் தினசரி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். இந்த முறையிலும் எஸ்.ஐ.பி முதலீட்டின் முழுப் பலனை உங்களால் அடைய முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு