Published:Updated:

ஒளிரும் திருநாள்... மிளிரும் முதலீடு..! - நம்பிக்கை தரும் பங்குகள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்திய பி.வி.சி குழாய் பிரிவில் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் 10% சந்தைப் பங்கைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகும்!

ஒளிரும் திருநாள்... மிளிரும் முதலீடு..! - நம்பிக்கை தரும் பங்குகள்!

இந்திய பி.வி.சி குழாய் பிரிவில் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் 10% சந்தைப் பங்கைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகும்!

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
தீமைகள் ஒழிந்து நன்மைகள் வருவதைக் குறிக்கும் தீபத் திருநாளையொட்டி பங்கு முதலீட்டாளர்கள் பலரும் புதிய முதலீட்டை மேற்கொள்ள விரும்பு வார்கள். அவர்களுக்காக ஐ.டி.பி.ஐ கேப்பிடல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகர் ஏழு பங்குகளைப் பரிந்துரை செய்கிறார். அந்தப் பங்குகள் பற்றி இனி பார்ப்போம்.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் (APL Apollo Tubes)

நிறுவனம் பற்றி: இந்த நிறுவனம், இ.ஆர்.டபிள்யூ (ERW -Electrical Resistance Welding) ஸ்டீல் குழாய்கள் சந்தையில் முக்கிய சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பங்களிப்பு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு பத்து இடங்களில் இந்தியா முழுக்க உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. 2.5 மில்லியன் டன் உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது. நாடு முழுக்க 800-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் சிறிய மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களிடமிருந்து சந்தைப் பங்களிப்பைப் பெற்றதன்மூலம் தொழில் வளர்ச்சியை இந்த நிறுவனம் சிறப்பாகக் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் அரையாண்டிலிருந்து வலுவான மீட்சி மற்றும் லாபத்தை எதிர்பார்க்கிறது.

ஒளிரும் திருநாள்... மிளிரும் முதலீடு..! - நம்பிக்கை தரும் பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது, கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தால் அமைப்புசாராத நிறுவனங்கள் நடைமுறை மூலதனம், கடன் பிரச்னைகள் போன்றவற்றுடன் போராடி வருகின்றன. எனவே, 2020-21, 2021-22-ம் நிதி ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு (Market capitalization) சுமார் ரூ.7,685 கோடியாக உள்ளது. இந்தப் பங்கு 17x FY22E P/E-ன் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் வர்த்தகமாகி வருகிறது. இதன் ஒரு பங்கு வருமானம் (இ.பி.எஸ்) 2021-22–ம் நிதி ஆண்டில் 50% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.3,740

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலெம்பிக் பார்மா (Alembic Pharma)

நிறுவனம் பற்றி: நூற்றாண்டைக் கடந்த இந்த நிறுவனம், ஆண்டுதோறும் 15-20% வளர்ச்சி கண்டுவருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருந்து தயாரிக்கும் மூலப்பொருள் சீனா விலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை இந்தியாவில் தயாரிக்க ஊக்கத்தொகை தரப்படுகிறது. இதன்மூலம் இந்த நிறுவனம் லாபம் அடையும். இமாசலப்பிரதேசத்தில் இதற்கு இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன.

ஒளிரும் திருநாள்... மிளிரும் முதலீடு..! - நம்பிக்கை தரும் பங்குகள்!

இந்த நிறுவனத்தின் அமெரிக்க விற்பனை (2019-2020–ம் நிதி ஆண்டு வருவாயில் 43%) 2015-16 முதல் 2019-20–ம் நிதி ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 12% வளர்ச்சி கண்டு ரூ.2,000 கோடியாக உயர்ந்துள்ளது. குறைவான போட்டி, தொடர்ந்து புதிய மருந்துகள் அறிமுகம் போன்றவற்றின் பின்னணியில் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. மேலும், சுமார் 65 புதிய மருந்துகளின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பளம் உள்ளிட்ட நிலையான செலவுகள் குறைந்து, இதன் லாபம் அதிகரித் திருக்கிறது.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் 18,855 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு 17.5xFY21 P/ E-ன் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் வர்த்தகமாகி வருகிறது. எபிட்டா வருமானம் சிறப்பாக அதிகரித்து வருகிறது.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.1,360

பேயர் கார்ப் சயின்ஸ் (Bayer Crop Science)

நிறுவனம் பற்றி: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு ரசாயன நிறுவனமான பேயர் கார்ப்ப்பின் ஓர் அங்கம்தான் இந்த நிறுவனம். இந்த நிறுவனம் பூச்சிக்கொல்லிகள், பூசணக்கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகளை உற்பத்தி செய்கிறது. பருத்தி, பழங்கள், தினை, கடுகு, பருப்பு வகைகள், அரிசி, சோயா பீன்ஸ், கரும்பு, காய்கறிகள் போன்ற பயிர்களுக்குத் தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம், வீடுகளுக்கான பூச்சிப் பராமரிப்புக் கானத் தீர்வுகளையும் வழங்குகிறது.

இந்தியாவில் விவசாய மசோதாக்கள் நிறைவேறியிருக்கின்றன. இதனால் ஒப்பந்தப் பண்ணைகள் (கான்ட்ராக்ட் ஃபார்மிங்) அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறையில் விவசாயம் செய்யும்போது தரமான விதைகள், உரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். அப்போது இந்த நிறுவன அதிக பலன் அடையும். மேலும், கொரோனா பரவல் பாதிப்பால் இந்தியாவில் விவசாயத் தொழில் பாதிக்கப்படவில்லை என்பது இந்த நிறுவனத்துக்குச் சாதகமான அம்சம். சீனா விலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யக் கூடாது என்ற எண்ணம் இந்தியர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இதனால் இந்த நிறுவனம் தொடர்ந்து லாபமடையும்.

தொடர்ந்து புதிய மற்றும் புதுமையான பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்மூலம் இந்த வேளாண் பயிர்ப் பாதுகாப்பு மருந்துச் சந்தையில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த நிறுவனம், மான்சான்டோ இந்தியா (Monsanto India) என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேளாண் ரசாயனங்கள் மற்றும் விதைகள் சந்தையில் நுழைந்துள்ளன்ன.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் 23,795 கோடியாக உள்ளது. பங்கின் விலை அடுத்த 2021-ம் ஆண்டு ஓராண்டுக்குள் சுமார் 25% அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ராண்டு இலக்கு விலை: ரூ.6,850

நெஸ்லே நிறுவனம் கடந்த 8-9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2,600 கோடியில் விரிவாக்கம். செய்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இதே அளவுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்தி ஏர்டெல் (Bharti Airtel)

நிறுவனம் பற்றி: இந்தியாவில் இப்போது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், ஐடியா, பி.எஸ்.என்.எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இயங்கி வருகின்றன. ஆனால், உண்மையான போட்டி ஜியோ, பார்தி ஏர்டெல்லுக்குத்தான்.

ஏ.கே.பிரபாகர்
ஏ.கே.பிரபாகர்

பார்தி ஏர்டெல், இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக உள்ளது. வயர்லெஸ் சேவைகள், மொபைல், லேண்ட் லைன் சேவைகள், அதிவேக வீட்டு பிராட்பேண்ட், டி.டி.ஹெச், தேசிய மற்றும் சர்வதேச நீண்ட தூர சேவைகள் உள்ளிட்ட நிறுவன சேவைகளை வழங்குகிறது. இவை தவிர, உயர் வருமானப் பிரிவினருக்காக பிரீமியம் சேவை அளித்து வருகிறது. உலகம் முழுக்க 20 நாடுகளில் 42.50 கோடி சந்தா தாரர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இங்கிலாந்தில் செயற்கைக் கோள் நிறுவனமான ஒன்வெப்-ஐ (OneWeb) அந்த நாட்டு அரசுடன் இணைந்து வாங்குகிறது. நீண்டதூரத் தகவல் தொடர்புக்கு கேபிள் அமைப்பதைவிட செயற்கைக்கோள் மூலம் தொலைபேசி, இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தனிநபர் மூலமாக இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருமானம் (ரூ.157) தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ.2,46,345 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் எபிட்டா லாப வரம்பு 44.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பங்கின் விலை அடுத்த ஓராண்டுக்குள் சுமார் 35% அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.620

ஜான்சன் கன்ட்ரோல்ஸ் - ஹிட்டாச்சி ஏர்கண்டிஷனிங் இந்தியா (Johnson Controls - Hitachi Air conditioning India - JCHAC)

நிறுவனம் பற்றி: அமெரிக்காவின் ஜான்சன் கன்ட்ரோல்ஸ், அலுவலக ஏ.சி தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனம். ஜப்பானின் ஹிட்டாச்சி அப்ளிகன்ஸ் வீட்டு ஏ.சி தயாரிப்பு மற்றும் விற்பனையில் பிரபல நிறுவனம். இவை இரண்டு இணைந்தும் இந்தியத் துணை நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் - ஹிட்டாச்சி ஏர்கண்டிஷனிங் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன. இதற்கு குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை இருக்கிறது. ஏ.சி தயாரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் தயாரிக்கும் ஒருங்கிணைந்த தொழிற்சாலை இது. இன்னும் ஆறு மாதங்களில் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருள்களை இந்த நிறுவனம் பயன்படுத்தும். மேலும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ற குளிர்சாதனங்களைத் தயாரிக்க ஆய்வு (ஆர் அண்ட் டி) மேற்கொண்டிருப்பது சிறப்பு.

இந்த நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகள், காற்று சுத்திகரிப்பான்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. நாடு முழுக்க 1,350 நகரங்களில் 10,000-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இதன் விநியோக நெட்வொர்க் 150% அதிகரித்துள்ளது. இதன் பொருள்கள் விற்பனையை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிகரிக்கக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ.6,020 கோடியாக உள்ளது. பங்கின் விலை அடுத்த ஓராண்டுக்குள் சுமார் 35% அதிகரிக்கக்கூடும்.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.2,970

நெஸ்லே இந்தியா (Nestle India)

நிறுவனம் பற்றி: இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான பால் உணவுப் பொருள்கள் சந்தையில் இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 92% என்ற வலுவான நிலையில் உள்ளது. மேலும், நூடுல்ஸ் என்றாலே நெஸ்லே இந்தியாவின் மேகிதான் என்று பெயர் எடுத்திருக்கிறது.

நெஸ்கபே, மேகி, மில்கி பார், மைலோ, கிட் கேட், பார் ஒன், மில்க்மெய்ட் மற்றும் நெஸ்டியா ஆகியவை நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகள் ஆகும்.

வருவாய் அடிப்படையில் நெஸ்லே இந்தியா, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாகும். முக்கிய வணிகப் பிரிவுகளில் பால் பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்து (வருவாயில் 46%), தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் உதவிப் பொருள்கள் (வருவாயில் 29%), தூள் மற்றும் திரவ பானங்கள் (வருவாயில் 12%) மற்றும் மிட்டாய் பொருள்கள் (வருவாயில் 13%) ஆகியவை அடங்கும்.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ.1,65,870 கோடியாக உள்ளது. பங்கின் விலை அடுத்த ஓராண்டுக்குள் சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.20,820

சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் (Supreme Industries)

நிறுவனம் பற்றி: பிளாஸ்டிக் சேர்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்திய பி.வி.சி குழாய் பிரிவில் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் 10% சந்தைப் பங்கைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகும். மேலும், பிளாஸ்டிக் ஃபர்னிச்சர்கள் பிரிவில் உள்நாட்டுச் சந்தையில் 13% சந்தைப் பங்களிப்பைக் கொண்ட இரண்டாவது பெரிய உற்பத்தி நிறுவனம் இதுவாகும். ரூ.240 கோடி செலவில் விரிவாக்கம் மேற்கொள்ள இருக்கிறது. இதை அடுத்து இதன் உற்பத்தித் திறன் தற்போது ஆண்டுக்கு 6,36,000 டன்னாக இருக்கிறது. இது, வரும் 2021-22-ம் ஆண்டில். 7,00,000 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவு களிலும் சந்தைப் பங்களிப்பைக் கணிசமாக அதிகரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், மொத்த விற்பனையில் மதிப்புக் கூட்டுப் பொருள்களை அதிகரிக்கவும் உள்ளது. இதன் பங்களிப்பு 2009-10-ல் 25 சதவிகிதமாக இருந்தது. 2019-20-ல் 38 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

பங்கின் செயல்பாடு: இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ.18,770 கோடியாக உள்ளது. பங்கின் விலை அடுத்த ஓராண்டுக்குள் சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

ஓராண்டு இலக்கு விலை: ரூ.1,765

டிஸ்க்ளெய்மர்: இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ள பங்குகள் ஐ.டி.பி.ஐ நிறுவனத்திடமோ அல்லது பரிந்துரை செய்த ஏ.கே.பிரபாகரிடமோ இருக்கக்கூடும். கட்டுரையில் தரப்பட்டுள்ள பங்குகளை நன்கு ஆராய்ந்தபின் வாங்குவது குறித்த முடிவை எடுக்க வேண்டும்.

செபி பதிவு பெற்றுள்ள முதலீட்டு ஆலோசகரிடம் கலந்தாலோசித்து, முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகள் முழுக்க முழுக்க முதலீட்டாளர்களையே சாரும்!

தீபாவளி முகூர்த் டிரேடிங்

தீபாவளி (நவம்பர் 14, சனிக்கிழமை) அன்று என்.எஸ்.இ, பி.எஸ்.இ பங்குச் சந்தைகள் மற்றும் எம்.சி.எஸ் கமாடிட்டி சந்தையில் முகூர்த் டிரேடிங் (Muhurat trading) நடக்கிறது. பங்கு மற்றும் கமாடிட்டி சிறப்பு வர்த்தகம் அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.15 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism