Published:Updated:

பேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்!

பேப்பர் கோல்டு

தங்கத்தில் முதலீட்டு வாய்ப்புகள்!

பேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்!

தங்கத்தில் முதலீட்டு வாய்ப்புகள்!

Published:Updated:
பேப்பர் கோல்டு

ங்கத்தை நகையாகவோ, பாராகவோ, நாணயமாகவோ வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீட்டின் பலன்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ‘பேப்பர் கோல்டு’-ஆக வாங்குவது பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடியது.

`பேப்பர் கோல்டு’ என்பது தங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்யப்பட்டு அந்த முதலீட்டின் பயனை முதலீட்டாளர்களுக்கு அளிப்பது. இந்த முதலீட்டின் வருவாய் தங்கத்தின் விலைப்போக்கை ஒட்டியே இருக்கும். தவிர, செய்கூலி, சேதாரம் கிடையாது; தரம் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை; பாதுகாக்க லாக்கரும் வேண்டியதில்லை. ஆனால், தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கு நிகரான பலன்கள் இதில் உண்டு. பேப்பர் கோல்டு முதலீட்டை நாம் மூன்று வகைகளில் மேற்கொள்ள முடியும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்!

கோல்டு இ.டி.எஃப்

இ.டி.எஃப் என்பது `எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்’ என்பதன் சுருக்கம். தங்கத்தின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் இந்த வகை முதலீடு, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால் டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முதலீட்டுக்கேற்ப, நமக்கு தங்கம் யூனிட்டுகளாகப் பிரித்தளிக்கப்படும். அதாவது, ஒரு யூனிட் என்பதை ஒரு கிராம் எனக் கணக்கில்கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு யூனிட் முதல் எத்தனை யூனிட் வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும். நம் வசதிக்கேற்ப மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையிலும் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த முதலீட்டில் புரோக்கரேஜ் சார்ஜ், ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ் ஆகியவை உண்டு. ஆனால், இவை இரண்டுமே மிகவும் குறைவானவை (0.5% -1% அளவு மட்டுமே இருக்கும்). இந்த முதலீட்டின் மூலம் ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கப்பெறும் லாபம் வருமான வரிக்கு உட்பட்டதாக இருந்தாலும், நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் செலுத்தினால் போதும். மேலும், தங்கத்தைப் போலவே, அவசரத் தேவைக்கு கோல்டு இ.டி.எஃப்-களையும் அடமானம் வைத்து வங்கிகளிலிருந்து பணம் பெற முடியும்.

சாவரைன் கோல்டு பாண்டு

நாம் வாங்கும் தங்கம் நமக்கு வட்டி ஈட்டி தருமா... சாவரைன் கோல்டு பாண்டு திட்டத்தில் இது சாத்தியமே. சாதாரணமாக, நாம் வாங்கும் ஆபரணத் தங்கத்தின் மூலம் நமக்கு வருமானம் எதுவும் கிடைக்காது. ஆனால், `சாவரைன் கோல்டு பாண்டு’ எனும் பேப்பர் கோல்டை வாங்கினால் நாம் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியை அரசு வழங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`சாவரைன் கோல்டு பாண்டு’ எனும் பேப்பர் கோல்டை வாங்கினால் நாம் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியை அரசு வழங்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வட்டி, ஆறு மாதகால இடைவெளியில் ஆண்டுக்கு இரு தவணைகளாக நம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நம் நாட்டில் சுமார் 25,000 டன் அளவு தங்கம் வீடுகளில் நகையாகவும் நாணயமாகவும் முடங்கிக்கிடக்கிறது. ஆனாலும், தங்க ஆபரணங்களின் மீதான இந்தியர்களின் முதலீடு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. எனவே, அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய நாம் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் அந்நியச் செலாவணிச் சுமையைக் குறைக்க, அரசு சார்பாக, ரிசர்வ் வங்கி சாவரைன் கோல்டு பாண்டுகளைப் பொதுமக்களின் எதிர்காலத் தேவைக்காக வழங்குகிறது. இதன் மூலம் ஆபரணத் தங்கம் வாங்கும் பழக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை பாண்டுகளும் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆவதால், டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தங்கம்
தங்கம்

பொதுமக்கள் இந்தத் திட்டத்தில் ஒரு கிராம் முதல் நான்கு கிலோ வரை யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். ஆன்லைனில் வாங்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு முகமதிப்பில் ரூ.50 தள்ளுபடியும் கிடைக்கிறது. உதாரணமாக, ரூ.4,070 முகமதிப்பு கொண்ட பாண்டுகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடி போக ரூ.4,020-க்குத் தரப்படும். ஆனால், இந்த யூனிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டியோ ரூ.4,070 மதிப்பிலேயே கிடைக்கும். அதாவது, ரூ.4,070 முகமதிப்பு கொண்ட பாண்டுகளை ஒருவர் 10 யூனிட்டுகள் ஆன்லைனில் வாங்குகிறார் எனில், அவர் தள்ளுபடி போக ரூ.40,200-க்கு (4,070-50=4,020 x 10) வாங்கியிருப்பார். அதே சமயம், அவருக்கு 2.5% வட்டியாக ஆண்டுக்கு ரூ.1,017.5 (4,070 x 10= 40,700 x 2.5%) கிடைக்கும். இது ஆறு மாத இடைவெளியில் இரண்டு தவணையில் ரூ.5,08.75-ஆக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பேப்பர் கோல்டு முதலீடுகள் நிச்சயம் பயனுள்ளவை. அவற்றை தேவைக்கேற்ப உங்களுடைய மொத்த முதலீட்டில் 10%-12%-க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பாண்டுகள், 24 கேரட் தங்கத்தின் தரத்தை அடிப்படையாகக்கொண்டவை. எட்டு ஆண்டுகள் முதிர்வுத்தன்மைகொண்ட இந்த பாண்டுகளை முதிர்வின்போது அரசே அன்றைய விலையின் அடிப்படையில் நம்மிடமிருந்து வாங்கிக்கொள்ளும். வாங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் விற்று லாபம் கிடைத்தால், அதற்கு மூலதன ஆதாய வரி உண்டு. 5, 6 மற்றும் 7-ம் ஆண்டுகளில் இந்த பாண்டுகளை விற்று வெளியேற (வட்டி வழங்கும் தேதிகளில்) அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் வர்த்தகமாவதால், விலை குறையும்போதெல்லாம் சிறுகச் சிறுக வாங்கி சேர்த்துக்கொண்டால் கூடுதல் லாபம் பார்க்க முடியும். இந்திய அரசின் சாவரைன் உத்திரவாதத்துடன் வருவதால், இந்த பாண்டுகளையும் தங்கம்போல, அவசரத் தேவைக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.

பேப்பர் கோல்டு
பேப்பர் கோல்டு

கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்)

இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். இது பெரும்பாலும் மேலே குறிப்பிட்டப் பட்டிருக்கும் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்யும். பெயருக்கு ஏற்ப, ஏற்கெனவே இருக்கும் பல ஃபண்டுகளில் இந்த ஃபண்ட் முதலீடு செய்வதால், இதற்கு ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ என்று பெயர்.

இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமில்லை. அதே சமயம், இது இ.டி.எஃப் திட்டத்தைவிட சற்றே கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும். இந்தத் திட்டங்களைத் தவிர, சில சர்வதேச தங்கச் சுரங்கங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களிலும் இந்த ஃபண்ட் முதலீடு செய்யும். இதன் விலையும் கிராம் அடிப்படையில் தங்க நகையாகவோ, நாணயமாகவோ வாங்குவதைவிடக் குறைவு.

பேப்பர் கோல்டு முதலீடுகள் நிச்சயம் பயனுள்ளவை. அவற்றை தேவைக்கேற்ப உங்களுடைய மொத்த முதலீட்டில் 10%-12% மிகாமல் பார்த்துக்கொள்வது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism