Published:Updated:

ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டமிடல்: `30 - 30 சவால்' தெரியுமா உங்களுக்கு?

ஓய்வுக்காலம்... இதை எதிர்கொள்ளத்தான் பலரும் பயப்படுகிறார்கள். 'பணியிலிருந்த காலத்தில் கிடைத்த வருமானம் செலவுக்கே சரியாக இருந்தது; கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த பணம் சின்னதாக ஒரு வீடு; மகன்/மகளுக்கான கல்விச் செலவு-திருமணம் அகியவற்றை நிறைவேற்ற செலவாகிவிட்டது

ஓய்வுக்காலம்
ஓய்வுக்காலம்

தனியார் அல்லது அரசு வேலையிலிருந்து ஓய்வுபெறுவது உண்மையில் ஓய்வல்ல. எப்போது மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய ஆரம்பிக்க இருக்கிறீர்களோ அதுதான் உண்மையான ஓய்வுக்காலம்.

ஓய்வுக்காலம் என்பது ஓர் இடத்தை அடைவது அல்ல. அது ஒரு தொடர் பயணம். வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றுகூடச் சொல்லலாம். அதற்கு பக்கப்பலமாக உங்களுக்கு போதிய அளவுக்கு தொகுப்பு நிதி இருக்க வேண்டும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37ESjav

நீங்கள் உங்கள் பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம் போன்றவற்றுக்குக் கடன் வாங்கலாம். ஆனால், ஓய்வுக்கால செலவுக்குக் கடன் வாங்குவது கஷ்டத்தை ஏற்படுத்தும்; மேலும், கடன் கிடைப்பதும் கஷ்டம். எனவே, சம்பளத்தில் சுமார் 10-15 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்துக்கு என முதலீடு செய்துவருவது அவசியம்.

30 - 30 சவால்...

இந்தியர்கள் சம்பாதிக்கும் சராசரிக் காலம் 30 ஆண்டுகள். பணி ஓய்வுக்கால வாழ்க்கை 30 ஆண்டுகள். சம்பாதிக்கும் 30 ஆண்டுகளில், ஓய்வுக்காலமான 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால்தான் அது கஷ்டமில்லாததாக அமையும். தற்போதைய நிலையில் படிப்பு முடிந்து, ஐ.டி நிறுவனங்களில் வேலைக்குச் சேர்பவர்கள் ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் வாங்குகிறார்கள்; மாறிவரும் பணிச்சூழல் காரணமாக சுமார் 50-55 வயதிலேயே பணி ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டமிடல்: `30 - 30 சவால்' தெரியுமா உங்களுக்கு?

அந்த வகையில் 25 வயதில் வேலைக்குச் சேர்ந்து 55 வயதில் ஓய்வுபெற்றால் 30 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். 55 முதல் 85 வயது வரை ஆயுள் என்றால் 30 ஆண்டுகள் வருமானமில்லாமல் ஓய்வுக்காலத்தைக் கழிக்க வேண்டிவரும். அதற்கேற்ப ஓய்வுக்கால தொகுப்பு நிதிக்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

60 வயதில் தேவைப்படும் ஓய்வுக்கால தொகுப்பு நிதி ரூ.1 கோடி என வைத்துக்கொள்வோம். ஒருவர் 25 வயதில் வேலைக்குச் சேர்கிறார். அவர் தன் 28-வது வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறார். முதலீடு செய்யும் காலத்தில் எதிர்பார்க்கும் ஆண்டு சராசரி வருமானம் 12% என்றால், தேவையான மாத முதலீடு 2,835 ரூபாய்தான்.

இதுவே அவர் 10 ஆண்டுகள் கழித்து அவரின் 38 வயதில் ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பிக்கிறார் எனில், மாதந்தோறும் செய்ய வேண்டிய முதலீட்டுத் தொகை 10,010 ரூபாயாக இருக்கும். 10 ஆண்டுகள் காலதாமதத்தால் முதலீட்டுத் தொகை சுமார் 3.5 மடங்கு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், முதலீட்டை இளம் வயதில் ஆரம்பிப்பது மிக நல்லது.

ஓய்வுக்காலம்... இதை எதிர்கொள்ளத்தான் பலரும் பயப்படுகிறார்கள். 'பணியிலிருந்த காலத்தில் கிடைத்த வருமானம் செலவுக்கே சரியாக இருந்தது; கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த பணம் சின்னதாக ஒரு வீடு; மகன்/மகளுக்கான கல்விச் செலவு-திருமணம் அகியவற்றை நிறைவேற்ற செலவாகிவிட்டது. இந்த நிலையில், ஓய்வுக்காலத்தை எப்படி எதிர்கொள்வது?' என்ற கவலை பலருக்கும் இருக்கிறது.

ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டமிடல்: `30 - 30 சவால்' தெரியுமா உங்களுக்கு?

கடந்தகாலத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், கவலையில்லாத ஓய்வுக்காலம் எல்லோருக்குமே சாத்தியமாகியிருக்கும். ஆனால், பணியிலிருக்கும் நாள்களில் பலருக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டுச் செயல்பட்டால், நிம்மதியான ஓய்வுக்காலத்தை நிச்சயம் பெற முடியும்.

ஆனால், 'ஓய்வுக்காலத்தைப் பற்றி இப்போதே திட்டமிட்டுச் செயல்படத் தேவையில்லை' எனப் பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஓய்வுக்காலத்துக்கு ஏன் திட்டமிட வேண்டும், அப்படித் திட்டமிடும்போது என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்த 10 அம்சங்களை விரிவாகப் பார்ப்போம். - www.aismoney.com நிர்வாக இயக்குநர் எஸ்.மணிகண்டன் வழங்கும் முழுமையான வழிகாட்டுதலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > கவலையில்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்! https://www.vikatan.com/news/investment/10-points-to-consider-before-planning-for-a-retirement-plan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |