Published:Updated:

Gold லாபகரமான முதலீடா? - தங்க நகை முதல் `கோல்டு பாண்டு' வரை!

Gold
Gold

Gold: இந்தியாவில், தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி நடைபெற்று வருகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் பெரும்பாலும் அடமானம் வைப்பதற்காகவே வாங்குகிறோம். முதலீடு என்கிறபோது பெண்கள் தங்க நகையை மட்டும் முதலீடாகக் கருதக் கூடாது. காரணம், அது ஒரு காலகட்டத்தில் விலை ஏறும். ஒரு காலகட்டத்தில் விலை இறங்கும். பொதுவாக, உலகில் கெட்டது நடந்தால் தங்கம் விலை ஏறும்.

முதலீட்டுக் கோணத்தில் பார்த்தால், ஒருவர் தன் மொத்த முதலீட்டில் 10-15% தொகையைத் தங்கத்தில் வைத்துக்கொண்டால் போதும்.

பங்குச் சந்தை நன்றாகச் செயல்படாதபோதும், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போதும் தங்கம் விலை ஏறும். மேலும், இதன் விலை அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. தங்கத்தின் விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அது சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்து வைக்க ஓர் ஒழுங்குமுறை அமைப்பு கிடையாது.

தங்கத்துக்கு 'அண்டர்லைன் அஸெட்' என்று எதுவும் கிடையாது. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் சேவையால்தான் இதன் விலை ஏற்றம் கண்டுவருகிறது. சில்வர், காப்பர் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அவற்றுக்குத் தொழிற்சாலை சார்ந்த அதாவது பல பொருள்கள் தயாரிக்க இவை மூலப் பொருள்களாக இருக்கின்றன. தங்கத்துக்கு இந்த அளவுக்கு அதிக தேவை இல்லை. எனவே, அதன் விலை எப்போதும் ஏற்றத்தில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

Gold லாபகரமான முதலீடா? - தங்க நகை முதல் `கோல்டு பாண்டு' வரை!

தங்கத்தை ஒரு முதலீட்டு நோக்கத்தில் பார்த்தால் கோல்டு இ.டி.எஃப்., கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்துவரலாம். இந்தத் திட்டங்களில் தங்கமாகத் தர மாட்டார்கள். இவற்றின் யூனிட்டுகளை விற்று நீங்கள்தான் தங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இன்னொரு நல்ல திட்டம் இருக்கிறது. 'கோல்டு பாண்டு' என்பதை மத்திய அரசின் சார்பில் ஆர்.பி.ஐ வெளியிடுகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்துக்கேற்ப இதன் யூனிட்டின் மதிப்பும் உயரும். கூடவே, ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற முடியாது.

- பொதுவாக, நம்மவர்களின் முதலீடு அதிலும் குறிப்பாக, பெண்களின் முதலீடு பாரம்பர்ய முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில்தான் அதிகம் இருக்கிறது. நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வது குறைவாக இருக்கிறது. காரணம், இவை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக இருப்பதுதான்.

பாரம்பர்யமான முதலீடுகளை விட்டுவிட்டு, நவீன முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன, பாரம்பர்யமான முதலீடுகளைவிட நவீன முதலீடுகள் எந்த அளவுக்கு அதிக நன்மை தருபவை, நவீன முதலீடுகளில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் 'பிரைம் இன்வெஸ்டார்' (Primeinvestor.in) நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா.

பெண்கள் மட்டுமின்றி, பாரம்பர்யமான முதலீடுகளைத் தாண்டி, நவீன முதலீடுகள் மூலம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெற நினைக்கும் அனைவருமே தாராளமாகப் பின்பற்ற வேண்டிய யோசனைகளை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3f5hG7M > பெண்களுக்கான சரியான முதலீட்டுத் திட்டங்கள்! - வழிகாட்டும் ஆலோசகர் https://bit.ly/3f5hG7M

தங்கம் விலை ஏற்றம் தொடருமா?

இந்தியாவில், தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி நடைபெற்று வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4,815-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 3,700 கோடி வரை கோல்டு இ.டி.எஃப் மீது இந்திய நுகர்வோர்களால் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முதலீடுகளின் ஆதாயப்பலன் ஒரு வருட காலத்தில் 41%, மூன்று வருட காலத்தில் 19.41%, ஐந்து வருட காலத்தில் 11.90% என்ற அளவில் உள்ளது.

தங்கம்
தங்கம்

சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில், மிகக் குறுகியகாலத்தில், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 'நுகர்வு' என்று சொல்லக்கூடிய தேவையின் அடிப்படையில் இல்லாமல், உலக அளவிலான பொருளாதாரம் சார்ந்த அச்சங்கள் காரணமாகவும், நோய்த் தொற்று மேலும் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும் என்பதில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் இந்த விலையேற்றம் சர்வதேசச் சந்தையில் நிகழ்ந்துவருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி போன்ற சுகாதாரத் தீர்வு எட்டப்படும் வரை தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொடவே செய்யும்!

- இதுகுறித்த விரிவான பார்வைக்கு... க்ளிக் செய்க.. https://bit.ly/30Q1z9d > உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை..! - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? https://bit.ly/30Q1z9d

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு