Published:Updated:

தங்கத்தில் இப்போது முதலீடு செய்வது சரியா? - சிறப்பு ஆலோசனைகள்

தங்கம்
தங்கம்

கொரோனா முடிவுக்கு வந்ததும் மீண்டும் தங்கத்தின் விலை இறங்கும். ஆனால், தொடக்க நிலையில் இருந்த விலைக்கு வராது.

கொரோனாவோடு வாழக்கூடப் பழகிக் கொண்டோம். தங்கமில்லாமல் வாழ்வதென்பதுதான் சாமானிய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும்போல... தங்கத்தின் விலை இன்னும் இறங்குமா, இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா, காத்திருந்து வாங்கலாமா?

``கொரானா பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. வர்த்தகமும் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கிறார்கள் பலரும். நிறுவனங்கள், பங்குகளை விற்றுவிட்டு, அதைப் பணமாக்கி தங்கத்தில் முதலீடு செய்கின்றன. மீண்டும் சூழ்நிலை சரியாகும்போது இதைப் பணமாக்கி வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள்.

கொரோனா முடிவுக்கு வந்ததும் மீண்டும் தங்கத்தின் விலை இறங்கும். ஆனால், தொடக்க நிலையில் இருந்த விலைக்கு வராது. அதைவிட சற்று கூடுதலான விலையில் விற்கப்படும். 33,000-ல் இருந்து 43,000-க்குச்சென்றது. 38,000 ரூபாயில் நிற்கலாம். அதிலேயே சில ஆண்டுகளுக்குக்கூட தொடரலாம். நிதானமான விலை வரும்போது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். முதலீடு என்றால், யோசித்து செய்யுங்கள்'' என்கிறார் நிதி ஆலோசகர் சோம.வள்ளியப்பன்.

``கோவிட்-19 பரவத் தொடங்குவதற்கு சற்று முன்பிருந்தே தங்கத்தின் விலை உயரத்தொடங்கிவிட்டது. இப்போது சற்று குறைந்திருப்பது போல் தோன்றினாலும் மீண்டும் அது உயரத் தொடங்கும். கோவிட்-19 பரவல் காரணமாக மட்டுமல்ல, இந்தியா, சீனா, அமெரிக்கா இடையிலான அரசியல் மற்றும் புவிசார் விவகாரங்கள் எனப் பல விஷயங்களில் பல்வேறு நிலையற்ற தன்மை தொடரும் வரை தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும்.

தங்கம்
தங்கம்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும் தங்கத்தின் விலையேற்றத்தில் எதிரொலிக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறையாது, அதிரிக்கவே செய்யும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நேரத்தில் தங்கத்தில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டாம். மொத்த முதலீட்டில் 5 சதவிகிதம் மட்டுமே தங்கத்தில் செய்தால் போதுமானது.

முதலீட்டுக்காக நகைக்கடைகளில் சீட்டு போடுவது, தங்கக் காசு வாங்கிச் சேமிப்பது எல்லாமே பண விரயம்தான். வாங்கும் தங்கத்தில் செய்கூலி, சேதாரம் என்று கணிசமான அளவு பணம் வீணாகும். தங்கத்தில் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் அரசின் தங்கப் பத்திரத்தில் (Gold Bond) முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத்தில் ஆண்டுக்கு 2 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இடையில் அதை விற்க நினைத்தாலும் பங்குச் சந்தையில் விற்கலாம். சிறுகச் சிறுகச் சேமிக்க நினைப்பவர்கள் தபால் அலுவலகம், வங்கிகளில் அமலிலிருக்கும் சிறிய சேமிப்புத் திட்டங்களில் சேரலாம்" என்கிறார் முதலீட்டு ஆலோசகர் ரேணு மகேஸ்வரி

- நிபுணர்கள், மக்கள் பார்வையை முழுமையாக அவள் விகடன் இதழில் வாசிக்க > தங்க மோகம் சரியா? https://bit.ly/313pwey

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு