Published:Updated:

எகிறும் தங்கம் விலை... இப்போது வாங்குவது உகந்ததா?

ஷியாம் சுந்தர்

சர்வதேச விலையுடன் ஒப்பிடும்போது, நம் உள்நாட்டில் 22 காரட் ஒரு கிராம் ரூ.3,000 என்பது ஆதரவு விலையாக இருக்கும். அதற்குக்கீழே பெரிய அளவில் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் தற்போதைய கணிப்பு.

தங்கம் விலை
தங்கம் விலை

குறைந்த வருவாய் உள்ள கீழ்த்தட்டு மக்கள், நடுத்தட்டு மக்கள், பெரிய செல்வந்தர்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வரை, அனைவருமே நம்பத்தகுந்த ஒரு முதலீடாகப் பார்ப்பது தங்கத்தைதான். அப்படிப்பட்ட தங்கத்தைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிற நிலை ஆறு வருடங்களுக்குபின் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. https://bit.ly/2YIGyim

கடந்த சில வருடங்களாக ஏறாமல் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் தேதியன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.3,021. ஆறு மாதம் கழித்து அதாவது, ஜூன் 31-ம் தேதியன்று 22 காரட் தங்கம் விலை ரூ.3,252. இது ஜூலை 31-ம் தேதியன்று ரூ.3,336-ஆக உயர்ந்தது. ஆனால், இந்த ஆகஸ்டில் முதல் ஏழு நாள்களிலேயே 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.3,547-ஆக உயர்ந்தது.

எகிறும் தங்கம் விலை... இப்போது வாங்குவது உகந்ததா?

தங்கத்தின் இந்த விலையேற்றம் மேலும் தொடருமா, இந்த விலையிலும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால், லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா அல்லது கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாமா என்கிற கேள்விகள் பலரின் மனதிலும் இருக்கவே செய்கிறது. காரணம், தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம், அதைப் பெருமளவில் வாங்கி, மீண்டும் விலையை உயர்த்திவிடுகிறார்கள் மக்கள். சரி, இப்போது வாங்கலாமா?

சர்வதேச விலை, 2013-ம் ஆண்டுக்குப்பிறகு 1500 டாலருக்குமேல் வர்த்தகமாகி வருகிறது. ஆகையால், இந்த ஏற்றம் நீண்ட இடை வெளிக்குப்பிறகு அதிகரித்துள்ளது. இந்தத் தருணத்தில் மிகுந்த ஊசலாட்டத்துடன் மிக வேகமாக விலை ஏறவும் அதே வேகத்தில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. விலை அதிகரிக்கும்போது, டிமாண்ட் என்று சொல்லக்கூடிய தேவை குறையும்.

ஆனால், சர்வதேச விலையுடன் ஒப்பிடும்போது, நம் உள்நாட்டில் 22 காரட் ஒரு கிராம் ரூ.3,000 என்பது ஆதரவு விலையாக இருக்கும். அதற்குக்கீழே பெரிய அளவில் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் தற்போதைய கணிப்பு. நீண்ட கால முதலீட்டிற்கு எஸ்.ஜி.பி என்ற அரசு வெளியிடுகிற தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால், 2.5% உத்தரவாதம் உள்ள வட்டியுடன் முதிர்வுத்தொகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது; பாதுகாப்பானதும்கூட.

எகிறும் தங்கம் விலை... இப்போது வாங்குவது உகந்ததா?

ஆபரணத் தங்கத்தைப் பொறுத்தவரை, திருமணத் தேவைக்காகத் தங்கம் வாங்க இருப்பவர்கள் இப்போதைய நிலைமைகளைத் தவிர்த்துவிட்டு, உடனே வாங்கிக்கொள்ளலாம். மற்றவர்கள் கோல்டு இ.டி.எஃப் அல்லது தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை மட்டும் பார்க்காமல், அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கத் தெரிந்துகொண்டால், தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம் என்பது தெளிவாகப் புரியும்!

> அமெரிக்க - சீன வர்த்தகப் போர் முதல் சீனாவின் யுவான் நாணய மதிப்பிறக்கம் வரையில், தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணங்களை, 'உச்சத்தில் தங்கம் விலை... முதலீட்டு நோக்கில் வாங்கினால் லாபமா?' https://www.vikatan.com/news/investment/gold-price-at-peak-is-it-profitable-to-buy-from-an-investment-purpose எனும் நாணயம் விகடன் கவர் ஸ்டோரியில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/