பங்குச் சந்தையின் கடுமையான ஏற்ற இறக்கங்களால் அனைத்து வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வருமானமும், அவற்றின் செயல்திறனும் குறைந்திருப்பதை முதலீட்டாளர்கள் அறிவார்கள். இவற்றில் ஸ்மால்கேப், மிட்கேப் ஃபண்டுகள் மட்டுமல்லாமல், சில லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளும் அடங்கும்.

இந்த அசாதாரணமான சூழ்நிலையில், `நெகட்டிவ் வருமானம் தரும் அதிக ரிஸ்க்குள்ள ஃபண்டுகள்’ என செபியால் அறிவுறுத்தப்படும் செக்டார் ஃபண்ட் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகளின் செயல்திறனும் வருமானமும் எப்படி இருக்கின்றன?

ஓரளவுக்கு நல்ல வருமானமும் செயல்திறனும் கொண்டிருக்கும் இத்தகைய திட்டங்களை, `ஏன் அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகள் என்கிறார்கள்?’ என்ற கேள்வி எழலாம். அதுமட்டுமல்லாமல், இது போன்ற முதலீடுகளை மேற்கொள்ளும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.

ஈக்விட்டி ஃபண்டுகளில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், இந்தத் திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்வது நல்லது; அவசியமும்கூட. ஏனென்றால், வரும் நாள்களில், இது போன்ற திட்டங்களில் பங்கு பெறவோ அல்லது தள்ளி நிற்கவோ முடிவு செய்தால், அதைத் தீர்க்கமாகச் செயல்படுத்தப் பின்வரும் வழிமுறைகள் உதவியாக இருக்கும். அந்த வகையில். முதலில் செக்டார், தீமெட்டிக் திட்டங்களில் முதலீடு என்பது ஏன் அதிக ரிஸ்க் கொண்டது என்பதைப் பார்க்கலாம்.

செக்டார் / தீமெட்டிக் ஃபண்ட்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின், தொகுப்பு நிதியிலிருந்து 80 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதியை, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்திருக்கும் திட்டங்கள் `செக்டார் ஃபண்ட் திட்டங்கள்’ எனப்படும். அதாவது, இந்தியப் பொருளாதாரத்தில் பங்குவகிக்கும் பல துறைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை மட்டும் தேர்வுசெய்து, அதில் மட்டும் முதலீட்டைத் தொடர்வது.

உதாரணமாக பார்மா, வங்கித் துறை, டெக்னாலஜி, உள்கட்டமைப்பு, மின்சாரம், எஃப்.எம்.சி.ஜி போன்ற துறைகளைச் சொல்லலாம். இவற்றில் ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதுசார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்வதைத்தான் `செக்டார் ஃபண்ட் திட்டங்கள்’ என்று அழைக்கிறார்கள்.

இந்தத் திட்ட முறையிலிருந்து சற்று மாறுபடுவது `தீமெட்டிக் ஃபண்ட் திட்டங்கள்.’ ஒரு துறையைக் கண்டறிந்து, அந்தத் துறை பங்குகளில் மட்டும் முதலீடு செய்வதுடன் நின்றுவிடாமல், அதனுடன் ஒன்றிணைந்த மற்றும் தொடர்புடைய பங்குகளிலும் முதலீடு செய்ய அனுமதிப்பதே `தீமெட்டிக் ஃபண்ட் திட்டங்கள்’ எனப்படுகின்றன. செக்டார் ஃபண்ட் திட்டங்களைவிட கொஞ்சம் பன்முகப்படுத்தப்பட்டவைதான் (Diversify) இந்த வகைத் திட்டங்கள்.

அதிக ரிஸ்க் ஏன்?

இன்றைய முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதன்முறையாக முதலீட்டை ஆரம்பிப்பதற்கு முன்னர், அவற்றின் கடந்தகால செயல்திறனையும் அந்தத் திட்டங்கள் பெற்றுத் தந்த வருமானத்தையும் நிச்சயம் கவனிப்பார்கள். அவை திருப்திகரமாக இருந்தால் மட்டும்தான் அந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அதேபோல், கடந்தகாலச் செயல்திறனை மட்டும் முக்கியக் காரணியாக எடுத்துக்கொண்டு, இந்த வகை ஃபண்டுகளைத் தேர்வு செய்வது தவறான அணுகுமுறை என்பதுதான், `இந்த வகைத் திட்டங்கள் அதிக ரிஸ்க் கொண்டவை’ என்பதற்கான முக்கியக் காரணம்.

செக்டார் / தீமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் இடம்பெற்றிருக்கும் பங்குகளின் வளர்ச்சி, அந்தக் குறிப்பிட்ட துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் அதன் தேவைகளைப் பொறுத்தே அமையும். எதிர்காலத்தில் அந்தத் துறையின் தேவை அதிகமிருந்தால், அதன் உற்பத்தி பெருகி, அதனால் அதன் லாபமும் அதிகரிக்கும். அதன்மூலம் அந்தப் பங்குகள் சார்ந்த திட்டங்கள், அதிக வளர்ச்சியைப் பெற முடியும். எனவே, முதலீட்டாளர்களும் அதிவேக லாபமடைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அதற்கு நேர்மாறாக, அதே துறையில் தற்போதைய பயன்பாட்டில் இருப்பதைவிட சிறந்த தொழில்நுட்பம் புதுப்புது கண்டுபிடிப்புகளின் மூலமாக எதிர்காலத்தில் புகுத்தப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அதன் நுகர்வுத்தன்மை எளிதாகி, அதன் தேவைகள் குறைந்தால் அல்லது அது ஈட்டும் வருமானமானது ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் தொடர்ந்து சரிந்தால், அந்தத் துறை சார்ந்த பங்குகள் நாளடைவில் அவற்றின் மதிப்பை இழப்பதற்கு வாய்ப்பு அதிகம். அப்போது அந்த செக்டார்/தீமெட்டிக் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எதிர்மறை வருமானம் தர அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் இத்தகைய திட்டங்களில், முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் மொத்த முதலீடும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் முதலீடு செய்யலாமா?

கண்டிப்பாகக் கூடாது. செக்டார் / தீமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பதற்குச் சமம். கூடை விழுந்தால், எல்லா முட்டைகளும் உடைந்துவிடும். அதுபோல துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கினால், அதை உணருவதற்கு முன்பே இழப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டைத் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்பநிலை முதலீட்டாளர்கள், தங்கள் இலக்கு சார்ந்த முதலீட்டில் இன்னும் பன்முகத் தன்மையைக் கடைப்பிடிக்காதவர்கள் சற்று ஒதுங்கியிருக்கலாம் அல்லது முதலீடு செய்வதற்கு முன்னதாக நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம்.

ஏனென்றால், முதலீட்டைப் பொறுத்தவரை, ரிஸ்க் என்பதன் அளவுகோல் வேறுவிதமானது. ஆழம் தெரியாமல் காலைவிடுவதற்குப் பெயர் ரிஸ்க் அல்ல. அலையாடும் கடலை நீந்திக் கடப்பதற்குப் பெயர்தான் ரிஸ்க். இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

யாரெல்லாம் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

செக்டார் / தீமெட்டிக் ஃபண்டுகளின் தீவிரத் தன்மையை உணர்ந்திருக்கும் அதி தீவிர முதலீட்டாளர்கள், துறை சார்ந்த அறிவோடு அதன் எதிர்காலத்தை ஓரளவு கணிக்கத் தெரிந்தவர்கள், வழக்கமான நிதித் திட்டங்களை (லார்ஜ்கேப், மிட்கேப், மல்டிகேப், ஹைபிரிட் ஃபண்ட்) கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பவர்கள், ஒரு துறையின் கடந்தகால வருமானத்தை எண்ணாமல், அதன் முன்னாலுள்ள வாய்ப்புகளைப் பார்க்கத் தெரிந்தவர்கள், துறை சார்ந்த திட்டங்களில் உள்ளே நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் நேரங்களை மிகச் சரியாகப் பயன்படுத்த அறிந்தவர்கள் ஆகியோர் தங்கள் முதலீட்டின் தன்மைக்கேற்ப, போர்ட்ஃபோலியோவின் மொத்த மதிப்பில், அதிகபட்சம் 10% வரை துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

செக்டார் / தீமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, ஃபண்ட் மேனேஜர்கள் துறை சார்ந்த எல்லாப் பங்குகளையும் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதில்லை. நம் நாட்டில் அதிகரித்துவரும் நுகர்வுமுறை, அதில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை அவர்கள் கண்காணிக்கிறார்கள். பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுதான் பங்குகளைத் தேர்வு செய்கிறார்கள்.

மேலும், பங்குகளின் வலுவான விலை சக்தி (Strong Pricing Power), பணப் புழக்கங்களின் தெரிவுநிலை (Visibility of Cash Flows) உள்ளிட்ட பல அளவீடுகளின் மூலமே போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய பங்குகளை இறுதிசெய்கிறார்கள்.

செக்டார் / தீமெட்டிக் ஃபண்டுகளில் இப்படி ஆயிரம் காரணிகள் சாதகமாக இருந்தாலும், இந்தத் திட்டங்கள் பெற்றுத் தரும் வருமானம் அதிக ரிஸ்க் பிரிவைச் சேர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முதலீடு செய்வதா, வேண்டாமா என்ற முடிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்.