Published:Updated:

மினி தொடர் - 5 - பழைய கோட்பாடு உங்களுக்கு லாபம் தராது!

மினி தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
மினி தொடர் - 5

பயன்தரும் முதலீட்டுப் பாடங்கள்!

மினி தொடர் - 5 - பழைய கோட்பாடு உங்களுக்கு லாபம் தராது!

பயன்தரும் முதலீட்டுப் பாடங்கள்!

Published:Updated:
மினி தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
மினி தொடர் - 5
ரு நிறுவனம் மிகவும் விவேகத்துடன் முதலீட்டை ஒதுக்கீடு செய்தால், அதற்கு நீண்டநாள் அடிப்படையிலான பலன் எந்த அளவுக்குக் கிடைக்கும் என்பதை பிடிலைட் நிறுவனத்தை ஓர் உதாரணமாகக் கொண்டு கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். தொடர்ந்து, முதலீடு குறித்த கோட்பாடுகள் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் எனப் பார்ப்போம்.

`பங்குச் சந்தையில் வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே கைமாறும் விலை என்பது அந்தப் பங்கு குறித்து வெளிப்படையாகத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் (செய்திகள்/நிகழ்வுகள் - வெளிப்படையாகத் தெரிந்த விஷயங்கள்) உள்ளடக்கிய ஒன்று’ என்று சொல்கிறது முதலீடு குறித்த பழைய கோட்பாடான எஃபீஷியன்ட் மார்க்கெட் தியரி (EMH-Efficient Market Theory).

மினி தொடர் - 5 - பழைய கோட்பாடு உங்களுக்கு லாபம் தராது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே நேரம், கேப்பிட்டல் அஸெட் பிரைஸிங் மாடல் (CAPM-Capital Asset Pricing Model) என்னும் கோட்பாடு, `போர்ட்ஃபோலியோவின் வருமானத்தை அதிக பீட்டா (Beta) கொண்ட ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிகமாகப் பெறலாம்’ என்று சொல்கிறது. வாரன் பஃபெட் அவருடைய முதலீட்டு முறையில் பெற்று காண்பித்த வெற்றியின் மூலம் எஃபீஷியன்ட் மார்க்கெட் தியரியைப் பொய்த்துப்போகச் செய்துவிட்டார். ஆனால், இன்றைக்கும் முதலீடு குறித்த கல்வியிலும், முதலீடு செய்யும் நிறுவனங்களின் நடவடிக்கைகளிலும் `CAPM’ கோட்பாடு புழக்கத்தில் இருக்கவே செய்கிறது. தாங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கேற்ற வருமானம்தான் தங்களுக்குக் கிடைக்கும் என்ற இந்தக் கோட்பாட்டில் முதலீட்டாளர்கள் அதீத நம்பிக்கைகொண்டிருக்கின்றனர். இதனாலேயே அவர்கள் எடுக்கும் ரிஸ்க் குறித்த முழுமையான புரிந்துகொள்ளல் இல்லாமலேயே அவர்கள் அதை எடுக்க முனைகின்றனர்.

இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நல்லதொரு வருமானத்தைப் பெற வேண்டுமென்று நினைத்தால், பின்வரும் நான்கு வகையான ரிஸ்க்குகளை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அந்த ரிஸ்க்குகள் என்னென்ன என்று பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கணக்கியல் ரீதியான ரிஸ்க்குகள் (Accounting Risks)

இந்தியப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பான்மை யானவை ரிசர்வ் வங்கி அஸெட் குவாலிட்டி ரிவ்யூ (கொடுத்திருக்கும் கடன்கள் திரும்பி வரக்கூடியதற்கான வாய்ப்புக்கான நிலை) குறித்த அழுத்தத்தை அதிகரிக்கும் வரை தங்களுடைய வாராக்கடன் குறித்து மறைத்தல் மற்றும் தெளிவற்ற நிலையை வெளிக்காட்டுதல் போன்ற செயல்களையே நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து செய்துவந்தன.

முதலீடு
முதலீடு

ரிசர்வ் வங்கி தந்த அழுத்தத்தினால்தான் வாராக்கடன் என்பது தெளிவாக, வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. இன்றைக்கும் இந்தச் சிக்கல் வீட்டு வசதிக் கடன் (Home loan Fianance Companies) வழங்கும் நிறுவனங்கள் சிலவற்றில் இருக்கவே செய்கிறது (ஏனென்றால், இவை ரிசர்வ் வங்கியின் வாராக்கடன் நடைமுறையின்கீழ் வருவதில்லை).

இது மட்டுமல்ல, இன்றைக்கும் இந்தியாவில் செயல்படும் ஒரு பெரிய சிமென்ட் நிறுவனத்தின் கணக்குவழக்குகள், உள்ளபடி சொல்வதைப் போன்ற அபிப்பிராயத்தைத் தரும் தோற்றத்தில் இல்லை. ஒரு மிகப்பெரிய ரீடெயில் நிறுவனத்தின் கணக்குகளை ஆழமாகப் பார்த்தால், அவை அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை.

அதேபோல, ஒரு மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் கணக்குவழக்கும், பார்மா நிறுவனத்தின் கணக்குவழக்கும் நம்ப முடியாத நிலையிலேயே இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால், பி.எஸ்.இ 500-ல் இருக்கும் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் பலவற்றையும் தீவிரமாக ஆராய்ந்தால், அவை சரியான விடைகளை ஆய்வு செய்பவருக்கு தரவே தராது.

ஒரு சில அக்கவுன்ட்டிங் ரேஷியோக்களையும், எங்கள் நிறுவனத்தின் ஒரு ஃபைனான்ஷியல் மாடலையும் கொண்டு இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கும் 1,300 நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்ததில், வெறும் 20% நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளே முழுமையான நம்பகத்தன்மையுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விற்றுவரவு வளர்ச்சி விகித (Topline) ரிஸ்க்!

இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் என்பது அமெரிக்க டாலர்ரீதியான கணக்கீட்டில் சுமார் 2,000 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது இலங்கையின் அளவில் பாதியாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் மலேசியாவின் அளவில் கால்பகுதியாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, அடிப்படைத் தேவைகளான எஃப்.எம்.சி.ஜி., பார்மா மற்றும் அன்றாடம் உபயோகிக்கப்படும் துணிமணிகள் போன்றவை அத்தியாவசியமான வையாகவும், இவை தவிர ஏனைய அனைத்துப் பொருள்களுமே இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு ஆடம்பரமான பொருள்களாகவும் இருக்கின்றன. இதன் காரணமாகவே சிறிய கார்களைத் தயாரிக்கும் நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவை நீண்டநாள் அடிப்படையில் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

உதாரணமாக, ஐந்தாறு வருடங்கள் மாருதி சுஸூகியின் விற்பனை வளர்ச்சி 15 சதவிகிதத்துக்கு மேலே போனதென்றால், பின்னர் மூன்று, நான்கு வருடங்களுக்கு ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்துவிடுகிறது.

இந்தவித ஏற்ற இறக்க சுழற்சியைச் சந்திக்கும் மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சராசரியாக 12% என்ற அளவில் இருக்கிறது. என்றபோதிலும், சந்தையில் மாருதி சுஸூகி பங்கின் விலை அதன் விற்றுவரவை ஒட்டிய அளவிலான ஏற்ற இறக்கத்துடனேயே (Volatility) காணப்படுகிறது.

அதே நேரத்தில், அத்தியாவசியப் பொருள்களை விற்கும் ஏசியன் பெயின்ட்ஸ், மாரிக்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. இந்தவித நிறுவனங்கள் தங்களுடைய விற்றுவரவில் (Topline) கிட்டத்தட்ட 10-20% அளவிலான தொடர் வளர்ச்சியைக் கொண்டு செயல்படுகின்றன. இதனாலேயே இந்தியாவைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கிறது.

நிகர லாப வளர்ச்சி (Bottom Line) ரிஸ்க்!

முதலீட்டைத் திரட்டுதலுக்கான செலவான காஸ்ட் ஆஃப் கேப்பிட்டல் (Cost of Capital) என்பது இந்தியாவில் அதிகம். இதனாலேயே இந்திய நிறுவனங்கள் பலவும் ஆராய்ச்சி வசதிகளுக்காகப் பெரிய அளவிலான செலவுகளைச் செய்வதேயில்லை. இந்திய நிறுவனங்கள் பலவும் வெற்றி பெற்ற நிறுவனங்களின் உத்திகளைப் பின்பற்றிச் செல்லும் நிலையிலேயே இருக்கின்றன.

உதாரணமாக, தங்க நகை அடகு என்ற வியாபாரத்துக்கான நல்ல வாய்ப்பு தரும் உத்தியை ஒரு நிறுவனம் கண்டறிந்து, அதில் களமிறங்கியவுடன், அதைப் பின்பற்றி நூறு நிறுவனங்கள் அதே துறையில் குதித்துவிடுகின்றன. இப்படிப் பின்பற்றிச் செல்லும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது முதன்முதலாக அந்த வாய்ப்பைக் கண்டறிந்து செயல்பட்ட நிறுவனத்தின் லாபத்தை கணிசமாகக் குறைத்துவிடுகின்றன. இந்தவித லாபக் குறைவு என்பது அந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு ரிஸ்க்கே!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

முதலீட்டில் இந்தவித ரிஸ்க்கைக் குறைக்க வேண்டுமென்றால், நீங்கள் நீண்ட நாள்கள் அடிப்படையில் ஒரு துறையில் (அதில் செயல்படும் அனைத்து நிறுவனங்களின் லாபத்தையும் சேர்த்து) சராசரியாக வரும் மொத்த லாபத்தில் 80% அளவைச் சம்பாதிக்கும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களைக் (இரண்டின் லாபத்தையும் சேர்த்தால், அது துறையின் லாபத்தில் 80 சதவிகிதமாக இருக்கும்) கண்டுபிடித்து அதில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு துறையில் செயல்படும் இந்த மாதிரியான ஒன்றிரண்டு நிறுவனங்கள் லாப சதவிகிதத்தில் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கத்தையே கொண்டிருக்கும்.

பங்கைச் சுலபத்தில் பணமாக மாற்ற முடியாத ரிஸ்க் (Liquidity Risk)

உலகளாவிய அளவில் டாப் 10 சந்தைகளைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இந்த ரிஸ்க் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் புரொமோட்டர்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை தங்கள்வசம் கொண்டிருக்கின்றனர். இதனாலேயே இந்தியாவில் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் டாப் 30 நிறுவனங்களின் பங்குகளைத் தவிர்த்து, சராசரி தினசரி வியாபாரமாகும் பங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவாக இருக்கிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்த நிறுவனங்களின் பட்டியலில் நாம் பி.எஸ்.இ-100-ல் லிக்விடிட்டியில் கடைசி நிலையில் இருக்கும் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் சராசரி தினசரி வியாபாரமாகும் பங்குகளின் அளவு அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஐந்து மில்லியன் டாலர் என்ற அளவிலேயே இருக்கிறது. மிகக்குறைந்த அளவிலான லிக்விடிட்டி இருப்பதாலேயே பாசிட்டிவ்வான காலத்தில் பங்கில் விலையில் வரும் ஏற்றத்தில் ஒரேயடியான விலை ஏற்றமும், நெகட்டிவ்வான காலத்தில் பங்கில் ஒரேயடியான இறக்கமும் வந்துவிடுகின்றன.

CAPM என்ற கோட்பாட்டை வலியுறுத்துபவர்கள், மேலே சொன்ன இந்த நான்கு ரிஸ்க்குகளையும் எடுப்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால், இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டுக்கு இந்தச் சிந்தனையும் கோட்பாடும் ஒத்துவராது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது குறித்து அடுத்த வாரம் இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

(முதலிடுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism