Published:Updated:

பணத்தை பலமடங்கு பெருக்கும் முதலீட்டு ஃபார்முலா! - பணவளக்கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

வங்கி எஃப்.டி மூலம் 7% வட்டி கிடைக்கிறது எனில், நாம் போட்ட பணம் இரட்டிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாகும்.

ணத்தைக் கொண்டு பணம் பண்ணுவது ஒரு முதலீட்டுக் கலை. பணத்தைப் பல மடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற முதலீட்டுச் சூத்திரம் தெரிந்தால்தான், பணவளக்கலையில் நாம் வல்லவராக மாற முடியும்.

ஒருவர் உங்களிடம், ‘நீங்கள் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தால், இத்தனை நாள்களில் அதை இரு மடங்காகத் தருகிறேன்’ எனச் சொன்னால் நமக்கு பூரிப்பாக இருக்கும். ஆனால், அவர் சொல்வது போன்று நடக்க வேண்டுமெனில், அது எவ்வளவு வருமானம் தர வேண்டும் என்பதை நாம் கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம். இந்தக் கேள்வியை நம்மில் பெரும்பாலோர் கேட்காமல் இருப்பதன் விளைவே, பொன்சி (Ponzi) எனச் சொல்லப்படும் ஏமாற்று பேர்வழிகளிடம் மாட்டிக்கொள்கிறோம்.

பணத்தை பலமடங்கு பெருக்கும் முதலீட்டு ஃபார்முலா! - பணவளக்கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசு மற்றும் அரசிடம் பதிவு பெற்ற தனியார் நிறுவனங்கள் என எந்தவொரு நிதி சார்ந்த நிறுவனமும் பணத்தைப் பல மடங்காகத் திரும்பத் தருகிறோம் என உத்தரவாதம் அளிக்கக் கூடாது. அவ்வாறு சொல்வது ரிசர்வ் வங்கி அளித்துள்ள விதிமுறைகளின் படி குற்றமாகும். அரசு சார்பில் மற்றும் அரசின்கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சீட்டு நிறுவனம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் வருமானம் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. நாம் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணும் வங்கி டெபாசிட்டிலும் நமக்கு ஒரே மாதிரியான வட்டி கிடைப்பதில்லை. அப்படியிருக்க, ஒரே ஆண்டில் பணத்தை இருமடங்காகத் திரும்பத் தருகிறேன் என்று யாராவது சொன்னால், நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரி, பணத்தை நேர்மையான முறையில் இரு மடங்காகப் பெருக்க முடியாதா? நிச்சயம் முடியும். சில திட்டங்களில் ஒரே ஆண்டில் இரட்டிப்பா ஆக்க முடியும். இன்னும் சில திட்டங்களில் 3 - 8 ஆண்டுகள் ஆகும். சில திட்டங்களில் 20 ஆண்டுகள்கூட ஆகலாம். ஒரு திட்டத்தில் நாம் போடும் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் என்ன என்பதைப் பொருத்தே நம் வருமானத்தின் அளவு அமையும்.

முதலீடு
முதலீடு

அப்படியானால், நம் முதலீடு எவ்வளவு வேகத்தில் வளர்ந்தால், இரு மடங்காக, மூன்று மடங்காக, நான்கு மடங்காகப் பெருக்க முடியும் என்பதைக் கணக்கிட ஏதேனும் ஒரு ஃபார்முலா இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால், நிச்சயம் இருக்கிறது என்பதே பதில். பள்ளியில் நாம் படித்த கூட்டுவட்டி கணக்குதான் அது.

72 என்ற எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ‘Rule of 72’ என இதை ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதனுடன் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் அல்லது வட்டி விகிதம் (Expected Returns %), முதலீட்டுக் காலம் (Investment Period) ஆகிய இரண்டையும் மனதில் வைத்திருங்கள்.

உதாரணமாக, உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் இரட்டிப்பாக மாற எத்தனை ஆண்டுக் காலம் தேவைப்படும் அல்லது எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைத்தால், நமது முதலீடு இரண்டு மடங்காகப் பெருகும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் எனில், நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதத்தை விதி எண் – 72 உடன் வகுக்க வேண்டும். அதாவது, 72-ஐ 8-ல் வகுத்தால் 9 வருடங்கள் என்ற விடை கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நமக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் 12% எனில், ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6% எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.

முதலீடு
முதலீடு

72-க்குப் பதிலாக 114 என்ற எண்ணுடன் வகுத்தால், நம் பணத்தை மூன்று மடங்காக்க நாம் எவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்பது புரியும். இதேபோல, நம் பணத்தை நான்கு மடங்காக உயர்த்த 144 என்ற எண்ணுடன் வகுக்க வேண்டும்.

வங்கி எஃப்.டி மூலம் 7% வட்டி கிடைக்கிறது எனில், நாம் போட்ட பணம் இரட்டிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேலாகும். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டு கூட்டுவட்டி அடிப்படையில் 12% கிடைத்தால் நல்ல வருமானம்தான். இந்த வருமானம் கிடைத்தாலே ஆறு ஆண்டுகளில் நம் முதலீடு இரட்டிப்பாகிவிடும். இதை விடுத்து, ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக ஆக்க வேண்டும் என்று நினைத்து கண்ட திட்டங்களில் பணத்தைப் போட்டால், முதலுக்கே மோசம் வரும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பணவீக்கத்தை விட 3 - 5% அதிக வருமானம் ஆண்டுதோறும் கிடைத்தால் போதும் என்று நினைத்து, என்றும் நிம்மதியாக இருப்பதே சரி. அதிக எதிர்பார்ப்பு, அதிக ஆபத்துதான்!