நடப்பு
மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தை
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் 2020... துணிந்தவர்கள் ஜெயித்தனர், ஒதுங்கியவர்கள் இழந்தனர்!

மியூச்சுவல் ஃபண்ட் 2020
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் 2020

முதலீட்டாளர்கள் கற்க வேண்டிய பாடம்!

MUTUAL FUND 2020

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, 2020-ம் வருடம் நன்றாகதான் பிறந்தது. முதலிரண்டு மாதங்கள் நன்றாகச் சென்றுகொண்டிருந்தன. அதற்குப் பின் எல்லாமே தலைகீழ்.

நாம் ஊரடங்கு என்ற வார்த்தையைக் கேள்விப் பட்டிருக்கிறோமே தவிர, யாரும் அதை அனுபவித்ததில்லை. அதனால் அது எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே மார்ச் மாதம் முதல் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்துவிட்டது. அதுவும் பிரதமர் நரேந்திர மோடி பேசிய அடுத்த நாள் சந்தை ஒரே நாளில் 4000 புள்ளிகள் வீழ்ந்தது. பலரும் அந்த ஒரு நாள் வீழ்ச்சியில் பயந்துவிட்டனர். அதற்கடுத்த நாளிலிருந்து சந்தை ஏறத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் 30-ம் தேதி மீண்டும் சென்செக்ஸ் 33700 புள்ளிகளைத் தொட்டது. அடுத்த ஒரு மாதம் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகியது. ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஏறத் தொடங்கிவிட்டது.

பா.பத்மநாபன்  fortuneplanners.com
பா.பத்மநாபன்  fortuneplanners.com

மார்ச் வரை நல்ல ஏற்றத்தில் இருந்த தங்கம், அதன்பிறகு இறக்கம் காண ஆரம்பித்தது. கடந்த ஒன்பது மாதங்களில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் 65% முதல் 100% வரை விலை ஏற்றம் கண்டன. இந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் விலை 25% மட்டுமே ஏறியது.

நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறோம். இனிமேல் தங்கம் விலை உயர வாய்ப்பு குறைவு. மேலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் அதை விற்று பணமாக்குவதில் தயக்கம் காட்டுவதால் அது நீண்டகால அடிப்படையில் பெரிதாக ஏற்றம் காண்பதில்லை.

செப்டம்பர் மாதம் செபி அமைப்பு, மல்டிகேப் ஃபண்ட் திட்டத்துக்கான புதிய வடிவத்தைக் கொடுத்தது. அதன் பேரில் ஸ்மால், மிட் மற்றும் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு குறைந்தது தலா 25% இருக்க வேண்டும். மீதமுள்ள 25% ஃபண்ட் மேனேஜர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப முதலீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதைத் திட்டத்தை பல திட்டங்கள் பின்பற்றவில்லை. மேலும், அதிக தொகையை நிர்வகிக்கும் திட்டங்கள் மிக குறைவாக ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்திருந்தனர். பிப்ரவரி 2021-க்குள் செபியின் புதிய விதிமுறையைச் செயல்படுத்த வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் 2020... துணிந்தவர்கள் ஜெயித்தனர், ஒதுங்கியவர்கள் இழந்தனர்!

புதிதாக ஃப்ளெக்ஸ் கேப் (Flexi Cap) என்ற ஃபண்ட் பிரிவை செபி உருவாக்கியுள்ளது. அதைப் பின்பற்றினால் வெறும் பெயரை மட்டும் மாற்றினால் போதுமானது. பங்குகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை. முதலீட் டாளர்கள் வேறு ஃபண்டுக்கு மாற வேண்டிய தேவை இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு மற்றுமொரு பிரிவில் புதிய திட்டத்தை வெளியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் 2020... துணிந்தவர்கள் ஜெயித்தனர், ஒதுங்கியவர்கள் இழந்தனர்!

கடந்த ஒன்பது மாத காலத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் இவ்வளவு வருமானம் கொடுக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. சந்தை இனி இறங்கிவிடும் என்று நினைத்து, முதலீடு செய்யாமல் விட்டவர்கள் நஷ்டப்பட்டதுதான் மிச்சம். இப்போதுபோலவே எப்போதும் வேடிக்கை மட்டுமே அவர்கள் பார்க்கலாம். நம்முடைய இலக்குகள் நீண்டகால அடிப்படையில் இருக்கும் போது, குறுகியகால நிகழ்வுக்கு அளவுக்கதிகமாக அக்கறைப்பட்டால், நம்மால் பெரிய அளவுக்கு பணத்தை ஈட்ட முடியாது என்பது மட்டும் நிச்சயம்!

அதிரவைத்த ஸ்மால்கேப் ஃபண்டுகள்!

டந்த சில ஆண்டுகளாகவே ஸ்மால்கேப் ஃபண்டுகள் பெரிய அளவில் லாபம் தராமலே இருந்தன. பொருளாதார பாதிப்புகளால் ஸ்மால்கேப் பங்கு நிறுவனங்கள் பாதிப்பு அடைந்ததே இதற்குக் காரணம். ஆனால், 2020-ம் ஆண்டு ஸ்மால்கேப் பங்கு நிறுவனங்களுக்கான ஆண்டாகவும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருந்த ஸ்மால் கேப் ஃபண்ட் நிறுவனங்களுக்கான ஆண்டாகவும் இருந்து, அபரிமிதமான லாபத்தைத் தந்து, முதலீட்டாளர்களை அதிரச் செய்தது.

அதிலும் குறிப்பாக, ஸ்மால்கேப் ஃபண்டுகள் கடந்த 2019 டிசம்பர் 31 முதல் இந்த 2020 டிசம்பர் 21-ம் தேதி முதல் அதிகபட்சமாக 44.32% முதல் குறைந்தபட்சமாக 12.88% வரை வருமானம் தந்துள்ளது. ஆனால், 2020 மார்ச் 23 முதல் 2020 டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள் அதிகபட்சமாக 86.81% முதல் குறைந்தபட்சமாக 60.70% வரை வருமானம் தந்தன.

இதேபோல, மிட்கேப்பும் கடந்த ஓராண்டுக் காலத்தில் தந்த வருமானத்தைவிட, கடந்த ஒன்பது மாதங்களில் அபரிமிதமான வருமானம் தந்தது!

பிட்ஸ்

டுத்த ஆண்டில் ரூ.6,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை செய்ய பேடிஎம் பேமென்ட்ஸ் கேட்வே நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது!

பிட்ஸ்

பொருள்களைப் பாதுகாக்க உதவும் கிடங்குகளில் 3.45 மில்லியன் சதுர அடிக்கான இடம் கடந்த மூன்றாம் காலாண்டில் அதிகரிக்கப் பட்டுள்ளது. கிடங்குகளில் இடங்களுக் கான தேவை அதிகரித்தும் சப்ளை குறைந்தும் காணப் படுகிறது!