Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்‘கட் ஆஃப்’ நேரம் மாற்றம்! - செபி நடவடிக்கை ஏன்..?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

ஒரு குறிப்பிட்ட நாளின் முடிவு என்.ஏ.வி மதிப்பில், குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்!

மியூச்சுவல் ஃபண்டில் நாம் செய்யும் முதலீடு, நிகர சொத்து மதிப்பு என்ற என்.ஏ.வி-ன்படி (Net Asset Value) யூனிட்டுகளாக ஒதுக்கப்படும். முதலீட்டுத் தொகைக்கு ஏற்றவாறு யூனிட்டுகள் எண்ணிக்கை இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்‘கட் ஆஃப்’ நேரம் மாற்றம்! - செபி நடவடிக்கை ஏன்..?

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை நொடிக்கு நொடி மாறும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளின் விலை அப்படி மாறாது. ஒரு குறிப்பிட்ட நாளின் முடிவு என்.ஏ.வி மதிப்பில், குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த நேரத்தை ‘கட் ஆஃப் டைம்’ (Cut-off time) என்பார்கள்.

உதாரணமாக, ஒரு ஃபண்டின் ‘கட் ஆஃப் டைம்’ மதியம் 12.30 மணி என வைத்துக்கொள்வோம். மதியம் 12.30 மணிக்குள் முதலீடு செய்தால் மட்டுமே, அன்றைய நாளின் என்.ஏ.வி மதிப்பில் முதலீடு செய்யமுடியும். மதியம் 12.30 மணியைத் தாண்டி முதலீடு செய்தால், அடுத்த வணிக நாளின் என்.ஏ.வி மதிப்பில்தான் யூனிட்டுகள் ஒதுக்கப்படும். திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு முதலீடு செய்தால், செவ்வாய்க்கிழமை என்.ஏ.வி மதிப்பின் அடிப்படையில் யூனிட் டுகள் ஒதுக்கப்படும். இதுவே, வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு முதலீடு செய்தால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், திங்கள் கிழமையின் என்.ஏ.வி மதிப்பில்தான் யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதலீடு
முதலீடு

சமீபத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் போது ரிசர்வ் வங்கி, நாட்டின் பணச் சந்தைகளுக்கான வர்த்தக நேரத்தைக் குறைத்தது. இதன் காரணமாக மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டுக்கான முதலீட்டு நேரத்திலும் செபியால் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான ‘கட் ஆஃப் டைம்’ மதியம் 1.30 மணியிலிருந்து 12.30 மணியாகக் குறைக்கப்பட்டது. மற்ற ஃபண்டுகளுக்கான ‘கட் ஆஃப் டைம்’ மாலை 3 மணியிலிருந்து மதியம் 1 மணியாகக் குறைக்கப் பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புதிய ‘கட் ஆஃப் டைம்’

செபி அமைப்பின் அறிவுறுத்தலின்படி, அக்டோபர் 19 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு மற்றும் யூனிட்டுகளை விற்பனை செய்வதற்கான ‘கட் ஆஃப் டைம்’ மாற்றப் பட்டிருக்கிறது. இதில், லிக்லிட் ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்டுகளில் கொரோனா பாதிப்பால் மாற்றப்பட்ட ‘கட் ஆஃப் டைம்’ அப்படியே இருக்கிறது. அதன் விவரம் வருமாறு...

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

கட் ஆஃப் டைம்: வாங்குவதற்கு

லிக்விட் ஃபண்ட்: மதியம் 12.30 மணி வரை கடன் சார்ந்த ஃபண்ட், கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்ட்: மதியம் 1 மணி வரை.

அக்ரஸிவ் ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் இதர ஃபண்டுகள்: மாலை 3 மணி வரை.

கட் ஆஃப் டைம்: விற்பதற்கு

லிக்விட் ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்டுகள், கன்சர்வேட்டிவ் ஹைபிரிட்: மதியம் 1 மணி வரை.

அக்ரஸிவ் ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் இதர ஃபண்டுகள்: மாலை 3 மணி வரை.

ஃபண்டுகளுக்கு இடையே பரிமாற்றம் (Switch in / out scheme):

பங்கு சார்ந்த ஃபண்டிலிருந்து பங்கு சார்ந்த ஃபண்டுக்கு: மாலை 3 மணி வரை.

பங்கு சார்ந்த ஃபண்டிலிருந்து கடன் அல்லது லிக்விட் ஃபண்டுக்கு: மதியம் 1 மணி வரை.

கடன் சார்ந்த ஃபண்டிலிருந்து கடன் அல்லது பங்கு அல்லது லிக்விட் ஃபண்டுக்கு: மதியம் 1 மணி வரை.

லிக்விட் ஃபண்டிலிருந்து பங்கு அல்லது கடன் அல்லது லிக்விட் ஃ பண்டுக்கு: மதியம் 1 மணி வரை.