நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் சார்பில், ‘கனவு, முதலீடு, முன்னேற்றம்’ என்கிற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்றது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் க்ளஸ்டர் மேனேஜர் வினோத்குமார் பேசும்போது, தங்கம், ரியஸ் எஸ்டேட், ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட சில முதலீடுகளுடன் ஒப்பிட்டு, மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நல்லதொரு முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது என்பதை விளக்கினார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டுப் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், நீண்டகாலத்தில் கூட்டுவட்டி அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதைக் கடந்தகால உதாரணங்களுடன் விளக்கினார். “ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமில்லை; கொஞ்சமாவது ரிஸ்க் எடுத்தால்தான் எதிர்கால இலக்குகளுக்கான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றவர் அதை எளிய சில உதாரணங்களுடன் விளக்கினார். ரிஸ்க்கை எதிர்கொண்டு முதலீட்டில் எப்படிச் சிறப்பாகச் செயல்படலாம் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ஃபண்ட் முதலீடு குறித்த பல சந்தேகங்களை வாசகர்கள் கேட்க, நிபுணர்கள் இருவரும் சளைக்காமல் பதில் அளித்தார்கள்.