இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை இதுவரைக்கும் இல்லாத உச்சமாக 2020 நவம்பர் மாதத்தில் ரூ.29.83 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ரூ.17.42 லட்சம் கோடி பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகவும், மீதி ரூ.12.41 லட்சம் கோடி கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகவும் உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 42% கடன் சார்ந்த ஃபண்டுகளாக இருக்கிறது. கடன் சார்ந்த முதலீட்டில் ரூ.9 லட்சம் கோடி அதாவது, 72 சதவிகிதத்துடன் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் இருக்கிறது.

இதற்கு அடுத்த இடங்களில் புதுடெல்லி, கர்நாடகா, குஜராத், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1,31,600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த கடன் ஃபண்டுகளின் பங்களிப்பு ரூ.77,644 கோடியாக உள்ளது. அதாவது, மொத்த முதலீட்டில் கடன் ஃபண்டுகளின் முதலீடு 59%-ஆக உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் எனச் சொல்லலாம்.

தமிழ்நாட்டிலிருந்து ரூ.28,746.99 கோடி ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஓரளவுக்கு ரிஸ்க் கொண்ட கடன் ஃபண்டுகளில், ரூ.37,762.48 (லிக்விட் ஃபண்ட் தவிர்த்து) முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. அதிக ரிஸ்க் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.50,348.13 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட ஹைபிரிட் ஃபண்டுகளில் ரூ.6,849.65 கோடி முதலீடு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தக் கணக்கீட்டில் இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் செய்திருக்கும் முதலீடு இடம் பெற வில்லை.

அண்மைக் காலத்தில் தமிழர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இதற்குப் பல காரணங் களைச் சொல்லலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப் புணர்வு அதிகரிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் பெரிய அளவில் வருமானம் கொடுக்காதது; தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பது ஆகியவை முக்கியமான காரணங்களாகும்.

தற்போதைய நிலையில், நீண்டகாலத்தில் செல்வம் சேர்க்க மியூச்சுவல் ஃபண்டின் ஒரு பிரிவான ஈக்விட்டி ஃபண்ட் கைகொடுக்கும் எனலாம்.