அண்மைக் காலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தனிநபர்கள் முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி அமைப்பு தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் செய்துவரும் விளம்பரம். தவிர, வங்கிகளின் எஃப்.டி, ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவை நீண்டகாலமாக நல்ல வருமானம் தரவில்லை என்பதால் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (எஸ்.ஐ.பி) முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

2019, செப்டம்பர் இறுதி நிலவரப்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் ரூ.25.60 லட்சம் கோடியில், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் இணைந்த தனிநபர்களின் பங்களிப்பு 54.1 சதவிகிதமாக அதிகரித்து, ரூ.13.85 லட்சமாக இருக்கிறது. இது, ஓராண்டுக்கு முன் ரூ.12.96 லட்சம் கோடியாக இருந்தது. அண்மைக் காலமாக தனிநபர்களின் முதலீடு கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளிலும் அதிகரித்துவருகிறது. இந்தப் பிரிவில் தனிநபர்களின் பங்களிப்பு ஓராண்டுக்கு முன் 44 சதவிகிதமாக இருந்தது. அது, இப்போது 46 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் தனிநபர்களின் பங்களிப்பு சுமார் 87 சதவிகிதமாக அதிக மாற்றமில்லாமல் தொடர்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் நிறைய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.