Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : லாபம் காண உதவும் சூப்பர் மேனேஜர்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

திறமைசாலிகள் தேவை!

நாணயம் புக் ஷெல்ஃப் : லாபம் காண உதவும் சூப்பர் மேனேஜர்!

திறமைசாலிகள் தேவை!

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

ரு நிறுவனத்தில் திறமையாகப் பணியாற்றி, அந்த நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித் தருகிறார் ஒருவர். அவரை இன்னொரு நிறுவனம் அழைத்து பணியிலமர்த்தி, அதன் மூலம் அந்த நிறுவனமும் அதே போன்ற லாபத்தை ஈட்ட முடியும் என்று நிலவும் எண்ணம் கட்டுக்கதையா அல்லது நிஜமா? இந்த கேள்விக்கான பதிலைச் சொல்லும் புத்தகத்தைத்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். போரிஸ் கிராய்ஸ்பெர்க் (Boris Groysberg) எழுதிய ‘சேஸிங் ஸ்டார்ஸ்’ என்ற புத்தகம் சூப்பர் மேனேஜர்கள் பற்றிய பல உண்மைகளை நமக்குச் சொல்கிறது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

`` `திறமையான தலைமை அதிகாரி’ என்று அறியப்பட்ட ஒருவரை அழைத்து வந்து பணியமர்த்துவதன் மூலம் நஷ்டத்திலிருக்கும் ஒரு நிறுவனத்தை லாபம் ஈட்டுவதாக்கிவிட முடியுமா... ஒரு நிறுவனத்தில் திறமையாக செயல்படும் ஒருவர் மற்றொரு நிறுவனத்துக்கு பணி மாறிச் செல்லும்போது அதே அளவிலான திறனுடன் செயல்பட முடியுமா... போன்ற கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய பொதுவான புத்தியிலிருக்கும் விடை நிச்சயமாக ‘முடியும்’ என்பதாகத்தான் இருக்கும்.

நடைமுறையில் எந்த நிறுவனத்திலும் ஒருவர் தனியாக வேலை பார்ப்பதில்லை. தனிமரம் தோப்பாகாது. கொஞ்சம் யோசித்தால், `கூட்டுமுயற்சிதான் நிறுவனத்தின் செயல்பாடு’ என்பது அனைவருக்குமே தெளிவாக விளங்கிவிடும். ஆனாலும் நிர்வாகிகளின் மனதிலிருப்பவர்களில் திறமை அதிகம்கொண்ட நபர்களைப் பணிக்கு அமர்த்தினால் மட்டும்தான் சூப்பர் வெற்றிகளைக் குவிக்க முடியும். `சூப்பர் பர்ஃபாமர்களைத் தவிர்த்துவிட்டு, இரண்டாம்நிலைத் திறன் கொண்ட நபர்களைப் பணிக்கு அமர்த்தினால் நடுத்தரமான செயல்பாடு/லாபம் மட்டும்தான் எதிர்பார்க்க முடியும்’ என்ற எண்ணம் நிறுவன நிர்வாகிகளின் மத்தியில் இருக்கிறது. அதனால்தான் அதிக சம்பளம் கொடுத்தும், பணியில் சேர்வதற்கான ஊக்கத்தொகை (Signing Bonuses), ஸ்டாக் ஆப்ஷன்களைக் கொடுத்தும் ஆட்களை வளைத்துப்போட நினைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஒரு தனிநபரின் பர்ஃபாமன்ஸை எது நிர்ணயிக்கிறது...’ என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், அதற்கான பதில் நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல மேனேஜ்மென்ட் குருக்களும் இந்தவித நட்சத்திர அந்தஸ்துகொண்ட பணியாளர்களைப் பணியில் அமர்த்தும் யோசனையை காலம் காலமாக நிறுவனங்களின் மனதில் விதைத்திருக்கிறார்கள். இந்த ஐடியா ஆலமரமாக நிறுவனங்களின் மனதில் வேரூன்றியும்விட்டது. இதனாலேயே திறமையான பணியாளர்களுக்கான சந்தையில், நல்ல பணியாளர்களுக்கான யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது. மேலேழுந்தவாரியாகப் பார்த்தால், `நட்சத்திர அந்தஸ்து பணியாளர்களைக்கொண்டு செயல்படுவது பயனளிக்கும்’ என்பதுபோலத் தோன்றும். ஏனென்றால், `கடுமையான போட்டிச் சூழலில் செயல்படும் நிறுவனங்கள் அதற்கேற்ப திறமையான பணியாளர் களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சரியான வாதம் தானே...’ என்று நமக்குத் தோன்றும். ஆனால், இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்தும்போது சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

`ஒரு தனிநபரின் பர்ஃபாமன்ஸை எது நிர்ணயிக்கிறது...’ என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், அதற்கான பதில் நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. தனிமனிதர்கள் ஏன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பது குறித்த ஆதாரங்களைத் தேடினால் அவை சுலபத்தில் நமக்குப் புலப்படாதவையாகவே இருக்கின்றன. இந்தவித நட்சத்திர அந்தஸ்துகொண்ட பணியாளர்களைப் பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணங்களாக நினைப்பவை என்னென்ன தெரியுமா... அவர்களுடைய இயல்பான உள்ளார்ந்த திறமையும், அவர்கள் கொண்டிருக்கும் உயர்ந்த கல்வித்தகுதியும்தான்.

அதை விடுங்கள்... இந்த ஸ்டார் பர்ஃபாமர்களை நம்பிச் செயல்படும் செயல்முறையிலிருக்கும் மிகப்பெரிய மூடநம்பிக்கை என்ன தெரியுமா.. ஒரு நிறுவனத்தில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நபரை மற்றொரு நிறுவனம் தேடிப் பிடித்து பணியில் அமர்த்துவதன் மூலம், அவருடைய சிறப்பான செயல்பாடு அந்த நிறுவனத்துக்கும் வந்துசேரும் என்பது.

இந்த ‘போர்ட்டபிலிட்டி ஆஃப் டேலன்ட்’ என்பதில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. நிஜமாகவே தரமான, சிறப்பான திறமைகளைக் கொண்டிருக்கும் விஞ்ஞானி ஒருவர் சூப்பர் கண்டுபிடிப்புகளை ஒரு நிறுவனத்துக்காகச் செய்து தருகிறார். அந்த நிறுவனமும் போட்டியாளர்களைத் துவம்சம் செய்து வெற்றி பெற்றுவருகிறது. அந்த ஸ்டார் விஞ்ஞானியை மற்றொரு நிறுவனம் பணிக்கு அழைத்து, அவர் போகாமல் பழைய நிறுவனத்திடமே விசுவாசமாக இருந்தால்தானே அந்த நிறுவனத்தால் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட முடியும். அதை விட்டுவிட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவர் பணிமாறிக்கொண்டேயிருந்தால் நிறுவனங்களால் போட்டியாளர்களை எப்படிச் சமாளிக்க முடியும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவதாக, அவர் கொண்டிருக்கும் திறமையின் ‘போர்ட்டபிலிட்டி’ (ஒரு நிறுவனத்தில் செயல்படும் அதே செயல்திறனுடன் மற்றொன்றில் செயல்படுவது) என்பது எந்த அளவுக்கு சாத்தியமான ஒன்று என்பது. ஒரு ஸ்டார் பர்ஃபாமரோ, சாதாரண பர்ஃபாமரோ ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அதே திறனுடன் இன்னொரு நிறுவனத்தில் அவர் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது எது... ஒரு நிறுவனம் வைத்திருக்கும் அதே இயந்திரத்தை மற்றொரு நிறுவனம் வாங்கினால் அதே அளவிலான செயல்திறனை எதிர்பார்க்கலாம். ஆனால், மனிதர்கள் இயந்திரங்கள் அல்லர்...’ என்ற ஆணித்தரமான வாதத்தை வைக்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

`` `ஒரு பணியிடத்தில் ஒருவருக்கிருக்கும் திறமை என்பதை அதே அளவுக்கு மற்றொரு நிறுவனத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. ஏனென்றால், அவருடைய பணி செய்யும் திறனில் ஒரு பகுதி, அந்த நிறுவனத்தின் உள்ளே நிலவும் சூழல்களால் உருவாவது’ என்ற கருத்து 50 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது’’ என்று சொல்லும் நூலாசிரியர், அந்தக் கருத்து குறித்து ஆய்வுகள் செய்து, அதன் மூலம் கிடைத்த விடைகளை இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

ஜவுளித்துறை அனலிஸ்ட் ஒருவரின் திறமை குறித்த விவாதங்களுடன் ஆரம்பிக்கும் புத்தகம், வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை அனலிஸ்ட்களை அலசுவதன் மூலம் வேலைத் திறமையை எந்த அளவுக்கு போர்ட்டபிளாக வைத்துக்கொள்ள முடியும் என்று விவாதிக்கிறது.

``தனிநபர் (அனுபவம், பின்புலம், அந்தத் துறையிலிருக்கும் பொதுவான பணியாளர்களின் நிலவரம், அந்த நிறுவனத்தில் பணி செய்யும் பணியாளர்கள் நிலவரம்), உடன் (சமநிலை மற்றும் கீழே/மேலே) பணிபுரிபவர்களின் தன்மை, நிறுவனத்தின் தன்மை, நிறுவனத்தின் கைவசமிருக்குமிருக்கும் வளங்கள், நிறுவனத்தில் தற்சமயம் (தொன்று தொட்டு) நிலவும் கலாசாரம், ஏற்கெனவே இருக்கும் மற்ற பணியாளர்களுடன் சுலபத்தில் பழகி இணைந்துகொள்வதற்கான இணக்கமான சூழல் போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கியதே ஒரு திறமைமிக்க பணியாளர் தன் திறனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு சென்று (Portability of Talent) பரிமளிக்கச் செய்வதற்கு ஏதுவானவை யாக இருக்கின்றன’’ என்று சொல்லி, நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

திறமைசாலிகளைத் தேடும் நிறுவன நிர்வாகி களும், வேறு நிறுவனத்துக்கு மாறினால் நன்றாக இருக்குமே என்று நினைக் கும் அனைத்துப் பணியாளர் களும் படித்து, பயன் பெற வேண்டிய புத்தகம்!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism