Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : போர்ட்ஃபோலியோ மேனேஜர்களின் அனுபவங்கள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

முதலீட்டுப் பாடங்கள்..!

ணத்தை நிர்வாகம் மட்டுமே செய்யாமல், லாபம் தரும் வகையில் பங்குகளை வாங்கி விற்கும் முடிவுகளை எடுத்த 17 போர்ட்ஃபோலியோ மேனேஜர்களின் முதலீடு செய்யும் ஸ்டைல்கள் குறித்து அலசுகிறது ஜான் டிரெயின் (John Train) எழுதிய ‘மணி மாஸ்டர்ஸ் ஆஃப் அவர் டைம்’ (Money Masters of Our Time) புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

முதலீட்டில் மூன்று பிரிவுகள்

குரோத், வேல்யூ, டெக்னாலஜி, எமெர்ஜிங் மார்க்கெட், ஸ்பெஷாலிட்டி கம்பெனீஸ், மைக்ரோ-கேப்ஸ், டர்ன் அரவுண்ட்ஸ், டாப்-டவுன், பாட்டம்-அப் போன்ற பல்வேறு முதலீட்டுத் திட்ட எண்ணங்கள் குறித்துத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்த முதலீட்டுத் திட்ட எண்ணங்களைப் பின்வரும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சொல்கிறார் ஆசிரியர்.அவை... மற்ற முதலீட்டாளர்கள் பார்க்கும் எல்லைகளைத் தாண்டி எதிர்காலத்துக்குள் சென்று பார்க்கும் திறனுடன் செயல்படுதல்; பிற முதலீட்டாளர்கள் யாருமே கவனிக்காத நுண்ணிய விஷயங்களைக்கூட கவனிக்கும், கூர்ந்துநோக்கும் ஆய்வகப் பகுப்பாய்வு; இதுவரை இல்லாத புதியதொரு தொழில் பிரிவைக் கண்டுபிடிப்பது. ``இந்த மூன்று பெரும் பிரிவுகளில்தான் இந்த முதலீட்டு மாஸ்டர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

போர்ட்ஃபோலியோ நிர்வகிப்பு

``ஒரு சில முதலீட்டு நிர்வாகிகள்தான் அதிர்ஷ்டவசமாக சூப்பர் வருமானம் பெறுகிறார்களே தவிர, மற்ற முதலீட்டு நிர்வாகிகள் செய்யும் புரொஃபஷனல் போர்ட்ஃபோலியோ முதலீடுகளில் அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று சொல்லும் நூலாசிரியர், ``புரொஃபஷனல் போர்ட்ஃபோலியோ முதலீடு என்பது ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பானது’’ என்கிறார்.

``திறமையான ஒரு கைவினைக் கலையாகத்தான் புரொஃபஷனல் போர்ட்ஃபோலியோ முதலீடு இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் பல்வேறு முடிவுகளை இந்த நிர்வாகிகள் எடுக்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வளரும் நிறுவனம் எது?

``குரோத் ஸ்டாக் முதலீடுகளை வழிமுறையாகக் கொண்ட போர்ட்ஃபோலியோ மேனேஜர் டி.ரோவ் ப்ரைஸ் (T.Rowe Price). மைக்ரோசாஃப்ட், இன்டெல், சிஸ்கோ, ஏ.ஓ.எல் போன்ற வளர்ச்சி தரும் பங்குகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முதலீடு செய்த பெருமைக்குரியவர். 1983-ம் ஆண்டு மறைந்த இவர், பெஞ்சமின் கிரஹாம் அளவுக்குப் புகழ் பெற்றவர். ‘டி.ரோவ் ப்ரைஸ் அப்ரோச்’ என்ற நடைமுறை, வால் ஸ்ட்ரீட்டில் பிரசித்தி பெற்ற நடைமுறையான ‘பெஞ்சமின் கிரஹாம் சூழல்’ அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது. `எதிர்காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய கம்பெனி எது...’ என்ற கேள்விக்கு அவருடைய பதில், ‘ஒவ்வொரு பிசினஸ் சுழற்சியின் உச்சத்திலும் தொடர்ந்து புதிய விலை உச்சத்தை அடையும் நிறுவனங்கள்தான், எதிர்காலத்தில் வரப்போகும் பிசினஸ் சுழற்சியின் உச்சத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களாகத் திகழும் குரோத் கம்பெனி’ என்பது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

இதைக் கண்டறிவது சாமான்ய முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான ஒன்றா என்று தோன்றலாம். அதற்கான ஐந்து அம்சங்களைச் சொல்லியிருக்கிறார் அவர்.

ஐந்து அம்சங்கள்

முதலாவதாக, அந்த நிறுவனம் புதிய தயாரிப்புகள் மற்றும் சந்தைகளைக் கண்டறிவதற்காக ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி வசதியைக் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த நிறுவனம் இயங்கும் துறையில் கடுமையான போட்டி என்பது இருக்கக் கூடாது. மூன்றாவதாக, அரசாங்கக் கட்டுப்பாடுகளிலிருந்து சற்று விலகியிருக்கும் நிலை அந்த நிறுவனத்துக்கு இருக்க வேண்டும். நான்காவதாக, அந்த நிறுவனப் பணியாளர்களுக்கான செலவு குறைவானதாகவும், அதே சமயம் பணியிலிருக்கும் நபர்களுக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும். ஐந்தாவதாக, அந்த நிறுவனத்தில் போடப்பட்ட மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 10% லாபத்தை ஈட்டுவதாகவும், அதிக லாபத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதும், மேம்பட்ட வளர்ச்சியைக் கொண்ட ஏர்னிங்ஸ் பெர் ஷேரைக் (Earnings Per Share-EPS) கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.’’

தேவைக்கு அதிகமாக லாபம் சம்பாதிக்க நினைத்தால், அதற்காகக் கொடுக்கும் விலையும் அதிகமாகவே இருக்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த முதலீட்டு நடைமுறையில் எந்த விலையில் வாங்க வேண்டும், எப்படி அந்த விலையைக் கண்டறிவது, எப்போது விற்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். இரண்டாவது அத்தியாயத்தில், வாரன் பஃப்பெட்டின் முதலீட்டு தத்துவத்தைச் சொல்லும் ஆசிரியர், பின்னர் ஜான் டெம்பிள்டன், ரிச்சர்டு ரெயின்வாட்டர், பால் கபோட் (Paul Cabot), பிலிப் ஃபிஷர், பெஞ்சமின் கிரஹாம், மார்க் லைட்பவுன் (Mark Lightbown), ஜான் நெஃப், ஜூலியன் ராபர்ட்சன், ஜிம் ரோஜர்ஸ், ஜார்ஜ் சோரோஸ், பிலிப் காரெட், மிஷேல் ஸ்டெயின்ஹார்ட், ரால்ஃப் வாங்கர், ராபர்ட் வில்சன், பீட்டர் லிஞ்ச் போன்ற போர்ட்ஃபோலியோ மேனேஜர்களின் முதலீட்டுத் தத்துவங்களை 40 அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்திருக்கிறார். கடைசியாக இந்த முதலீட்டு மாஸ்டர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

Money Masters of Our Time
Money Masters of Our Time

முதலீட்டில் ஒற்றுமை

``மேற்சொன்ன அனைவருமே செயல்படுவதிலிருக்கும் ஒற்றுமை என்னவென்று பார்த்தால், தொடர்ந்து வளர்ச்சியைச் சந்திக்கும் வகையில் நன்கு மேலாண்மை செய்யப்படும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றில் மட்டுமே முதலீடுகளை செய்வது; எப்போதாவது அவற்றின் வளர்ச்சி குறைய ஆரம்பித்தால், அவற்றை விற்றுவிட்டு வேறு அதே குணாதிசயம்கொண்ட பங்குகளை வாங்குவது; திரும்பத் திரும்ப நிறுவனத்தின் மதிப்பைவிட சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கும்போது மட்டுமே முதலீடு செய்வது; சந்தையில் நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி ஓரளவுக்கு அதிக விலை கிடைக்கும்போது விற்றுவிட்டு வெளியேறுவது; புதுமையான பாதையில் பயணிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து முதலீடு செய்வது. இந்த குணாதிசயங்கள்தான் இந்த பிரசித்திபெற்ற மற்றும் வெற்றிகரமான முதலீட்டு நிர்வாகிகளிடம் இருக்கிறது’’ என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

போர்ட்ஃபோலியோ மேனேஜர்களின்
போர்ட்ஃபோலியோ மேனேஜர்களின்

லாபம்... ஓர் எச்சரிக்கை!

`` `அதிக வருமானம் வேண்டும்’ என்ற எண்ணத்தில் உங்களை வருத்திக்கொண்டு செயல்படாதீர்கள். ஏனென்றால், முதலீட்டில் அதிக நஷ்டம் அடைபவர்கள், `தலைசிறந்த லாபத்தைப் பெற வேண்டும்’ என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்களே. தொடர்ந்து கிடைக்கும் சராசரியான லாபங்கள்தான் நீண்ட நாள்கள் அடிப்படையில் உங்கள் முதலீடுகளின் லாபத்தை நீங்கள் நினைக்கும் இடத்துக்கு கொண்டுசேர்க்க ஏதுவானவையாக இருக்கும். தேவைக்கு அதிகமாக லாபம் சம்பாதிக்க நினைத்தால், அதற்காகக் கொடுக்கும் விலையும் அதிகமாகவே இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி முடித்திருக்கிறார் ஆசிரியர்.

முதலீடு செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

-நாணயம் விகடன் டீம்