நிலத்தை விற்று வங்கியில் முதலீடு செய்யும்போது வருமான வரி செலுத்த வேண்டுமா?

சாரல் சுரேஷ்குமார், முகநூல் வழியாக...

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“நிலத்தை விற்று வந்த நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு, இண்டெக்ஸேஷன் சரிக்கட்டலுக்கு 20% வரி செலுத்த வேண்டும். வரியைத் தவிர்க்க விரும்பினால், என்.ஹெச்.ஏ.ஐ பாண்ட் (NHAI Bond) மற்றும் ஆர்.இ.சி பாண்ட் (REC Bond) போன்றவற்றில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதற்கு அதிகமான லாபம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

இதைத் தவிர, அந்தத் தொகையைக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள் வீடு வாங்குவதாக இருந்தால் வரிக்கழிவு கிடைக்கும். அந்த இரண்டாண்டு காலத்துக்கு, அதற்கென இருக்கும் தனி வங்கிக் கணக்கில் அந்தத் தொகையை டெபாசிட் செய்து பயன்படுத்த வேண்டும். இதில் முடிவெடுப்பதற்கு ஆறு மாதகால அவகாசம் மட்டும் உண்டு.”

ஒரு வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படும்போது, அதன் புத்தக மதிப்பு / வர்த்தக மதிப்பு இதில் எதன் அடிப்படையில் பங்குகள் பிரித்து வழங்கப்படும்?

சார்லஸ் தினகரன், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் இணையும்போது, தனித்தனியே மதிப்பீடு செய்யப்படும். தற்போது கேள்வியானது வங்கி குறித்து இருப்பதால், அதன் தற்போதைய புத்தக மதிப்பு கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வர்த்தக மதிப்பு எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், வங்கியின் வாராக்கடன் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, என்டர்பிரைசிங் மதிப்பு கணக்கிடப்படும். இதையெல்லாம் தாண்டி, ஸ்வாப் ரேஷியோ என்பதுதான் கடைசியில் முதலீட்டாளருக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ முடியலாம்.”

என் பேரனுக்கு 19 வயது இருக்கும்போது, அவன் பெயரில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் 3,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தோம். தற்போது 4 வருடங்களுக்குப் பிறகு, அவசரத் தேவைக்காக ரெடெம்ஷன் பாரத்தைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டுக் கொடுத்தால், கையொப்பம் பொருத்தமாக இல்லை என இரு முறை தெரிவித்திருக்கிறார்கள். பேரனைக் கேட்டால், `அப்போது எப்படிக் கையொப்பமிட்டேன்னு சரியாக ஞாபகமில்லை’ என்கிறான். இதற்கு என்ன வழி... தகுந்த ஆலோசனை கூறுங்கள்.

திருஞானசம்பந்தம், சிவகங்கை

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“பொதுவாக இளைஞர்களுக்குக் கையெழுத்து மாறிக்கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் வெப்சைட்டிலிருந்து கையொப்பம் சரிபார்த்தல் படிவத்தை (Signature Verification Form) டவுன்லோடு செய்து பேரனின் பெயர், பான் நம்பர், இ-மெயில், தொலைபேசி எண், வீட்டு முகவரி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பெயர், ஃபோலியோ நம்பர், வங்கி சேமிப்புக் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி கோட், எம்.ஐ.சி.ஆர் எண் ஆகிய தகவல்களை அந்தப் படிவத்தில் பூர்த்திசெய்து, வங்கி மேலாளரின் முன்னிலையில் பேரன் கையொப்பமிட்டுச் சமர்ப்பித்தால், வங்கியின் சீல் வைத்து கையொப்பமிட்டுத் தருவார். அதனுடன் ரெடெம்ஷன் படிவத்தைப் பூர்த்திசெய்து, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்திலோ அல்லது கேம்ஸ் (CAMS) அலுவலகத்திலோ சமர்ப்பித்தால் போதும். மூன்று, நான்கு நாள்களில் உங்கள் பேரனுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் ரெடெம்ஷன் தொகையைக் கிரெடிட் செய்துவிடுவார்கள்.”

என் வயது 36. எனக்கும் மனைவிக்கும் உடல்நலம் நன்றாக இருக்கிறது. என் அம்மாவுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. அப்பாவுக்கு இதயநோய். இந்த நிலையில் நான் ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்குவது என் பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்குமா... அல்லது அவர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

கதிரவன், முகநூல் வழியாக...

கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

“உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மட்டும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும். உங்கள் அம்மாவுக்கு சர்க்கரை பாதிப்புக்கான டயாபட்டிக் பாலிசியை எடுக்க வேண்டும். உங்கள் அப்பாவுக்கு இதயநோய் சிகிச்சைக்காக கார்டியா பாலிசி எடுக்க வேண்டும்.

ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கும்பட்சத்தில், பாலிசி எடுக்கும்போது இருக்கும் நோய்க்கு நான்கு வருட காத்திருப்பு காலம் இருக்கும். அதனால் அந்த வியாதிக்கான சிகிச்சைக்குக் காப்பீட்டை நான்கு ஆண்டுகள் பயன்படுத்த முடியாது. உங்களுடைய தாய், தந்தையின் வயதைக் குறிப்பிடவில்லை.

அவர்களுக்கு 60 வயதுக்குமேல் இருக்கும்பட்சத்தில் சீனியர் சிட்டிசன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.”

என் வயது 35. மாதந்தோறும் 25,000 ரூபாய் வரை 20 ஆண்டுக்காலத்துக்கு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து தோராயமாக ரூ.8 கோடி வருமானம் பெற விரும்புகிறேன். எனக்கேற்ற 5 மியூச்சுவல் ஃபண்டுகளை அனைத்து வகையிலும் பரிந்துரைக்கவும். நான் மிதமான ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன்.

ராஜேஷ்குமார், முகநூல் வழியாக...

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப், நிப்பான் இந்தியா லார்ஜ்கேப், ஆக்ஸிஸ் புளூசிப், மஹிந்திரா பதாத் யோஜனா, ஏ.பி.எஸ்.எல் இந்தியா நெக்ஸ்ட் ஜென் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.5,000 எனப் பிரித்து ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 20 ஆண்டுகள் நீண்டகால முதலீடாக இருப்பதால், ஆண்டு வருமானம் 15% எனக் கணக்கிட்டால் ரூ.3.74 கோடி எதிர்பார்க்கலாம்.

நீங்கள் 8 கோடி எதிர்பார்ப்பதால், மேலும் ஐந்து ஆண்டுக்காலத்துக்கு முதலீட்டை நீட்டிக்கும்பட்சத்தில், ஆண்டு வருமானம் 15% என்ற அடிப்படையில் ரூ.8.1 கோடி வரை எதிர்பார்க்கலாம். அல்லது 20 ஆண்டுக் காலத்துக்கு முதலீடு செய்த பிறகு வருமானத்தை எடுக்காமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அப்படியே வைத்திருந்து பின்னர் எடுத்தால், ரூ.7.52 கோடி வரை எதிர்பார்க்கலாம்.”

சென்னையில் வசித்துவரும் நான், சுற்றுலா சென்றபோது பெங்களூரு அருகே என் கார்மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. கார்மீது மோதிய வேன் கர்நாடகாவைச் சேர்ந்தது. என் கார் சேதத்துக்கான செலவை இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்வதற்கு கர்நாடகாவிலுள்ள நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது உண்மையா?

கிருஷ்ணா, முகநூல் வழியாக...

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“தேவையில்லை. நீங்கள் சென்னையிலுள்ள நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடரலாம். பொதுவாக வாகன விபத்துக் காப்பீட்டுக்கான வழக்கை விபத்து நடந்த இடம், விபத்தில் சிக்கிய வாகன உரிமையாளரின் வசிப்பிடம், விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளரின் வசிப்பிடம், இன்ஷூரன்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் இடத்தை உள்ளடக்கிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறலாம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com