நாணயம் விகடன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்... 2020 - படிப்பினைகள்... 2021 நிதித் தீர்மானங்கள்’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சி யில் முதலில் பேசிய கே.எஸ்.ராவ், ‘‘கோவிட் பாதிப்பு நமது அவசரகால நிதியை மூன்று மாதம், ஆறு மாதம் என்பதை 12 மாதங்களாக அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது’’ என்றார். பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன் பேசும்போது, “பங்குச் சந்தையின் முழுமையான பலனை அடைய குறைந்தது எட்டு ஆண்டுகளாவது ஒரு முதலீட்டாளர் சந்தையில் தொடர்ந்து நீடித்திருப்பது அவசியம்” என்றார்.

அடுத்து பேசிய எஸ்.குருராஜ், ‘‘முதலீட்டில் லாபம் ஈட்ட ஒருவர் அவசர கால நிதி, நிலையான வருமானம் வரும் திட்டங்கள், வளர்ச்சி முதலீட்டுத் திட்டங்கள், வருமான வரியை மிச்சப்படுத்தும் திட்டங்கள் என நான்கு பக்கெட் முறையைப் பின்பற்றுவது அவசியம்’’ என்றார். பட்டிமன்றம் ராஜா பேசும்போது, “எல்லா நெருக்கடியிலும் ஓர் ஆதாயம் உண்டு. அந்த வகையில், 2020 நமக்கு நெருக்கடிகளைத் தந்திருந்தாலும் பல நன்மைகளைச் செய்திருக்கிறது. ஒருவரின் செலவில் ஒரு பகுதி சேமிப்பாக இருப்பது அவசியம்’’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.