சிக்காமல் சிட் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? - நாணயம் விகடனின் ஆன்லைன் நிகழ்ச்சி!
சிட் ஃபண்ட் என்கிறபோது நம் ஊரில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தீபாவளி சிட் ஃபண்ட் தொடங்கி பலவற்றில் நம்மவர்கள் பணம் கட்டி வருகிறார்கள். அதில், கிடைக்கும் தள்ளி கவர்ச்சிகரமாக மற்றும் லாபகரமாக இருக்கிறது.
நாணயம் விகடன் & தமிழ்நாடு சிட் பண்ட் கம்பேனீஸ் அசோசியேஷன் இணைந்து நடத்தும் ‘சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 5, சனிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
சோம. வள்ளியப்பன்
நிதி நிபுணர் மற்றும் சொற்பொழிவாளர், பயிற்றுனர் சோம. வள்ளியப்பன், சிறப்புரையாற்றுகிறார்.
ஏ. சிற்றரசு (பொதுச்செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம், நிர்வாக இயக்குநர் – குறிஞ்சி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை),
எம். கிருஷ்ணபாரதி (பிரசிடெண்ட், தமிழ்நாடு சிட் பண்ட் கம்பேனீஸ் அசோசியேஷன், நிர்வாக இயக்குநர் – சிம்மவாஹினி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், பொள்ளாச்சி) ஆகியோர் பேசுகிறார்கள்.
முழுமையான வழிகாட்டி
சிட் ஃபண்ட் என்கிறபோது நம் ஊரில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தீபாவளி சிட் ஃபண்ட் தொடங்கி பலவற்றில் நம்மவர்கள் பணம் கட்டி வருகிறார்கள். அதில், கிடைக்கும் தள்ளி கவர்ச்சிகரமாக மற்றும் லாபகரமாக இருக்கிறது. அதேநேரத்தில், அதில் பல சிக்கல்களை நம் மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

பல நேரங்களில் முதலுக்கே மோசமாகிவிடுகிறது. இது போன்ற சிக்கலில் மாட்டாமல் சிட் ஃபண்ட் போடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடன் & தமிழ்நாடு சிட் பண்ட் கம்பேனீஸ் அசோசியேஷன் இணைந்து `சிட் ஃபண்ட் A to Z - முழுமையான வழிகாட்டி’ என்கிற தலைப்பில் ஆன்லைன் நடத்துகின்றன.
அனுமதி இலவசம். முன் பதிவு அவசியம்.
பதிவு செய்ய: https://bit.ly/33fGW8h