எதிர்காலச் சேமிப்புக்காக ஒரு கிலோ தங்கம் வாங்க விரும்புகிறேன். தங்கக்கட்டி, இ.டி.எஃப், தங்கப் பத்திரம் போன்ற தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளில் எது பாதுகாப்பானதாக, நல்ல வருமானம் தரக்கூடியதாக இருக்கும்?

முருகேஸ்வரி அன்பரசன், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“தங்கத்தில் முதலீடு செய்வதற்குத் தங்கக் கட்டிகளாக வாங்கினால், வாங்கும்போதும் பிரீமியம் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதைப் பாதுகாப்பாக வைக்கவும் நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். திருட்டு பயமும் இருக்கும். அதேபோல, விற்க நினைக்கும்போது விலையிலும் சரி, தரத்திலும் சரி, நீங்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதற்குப் பதிலாக, தங்கத்தை இ.டி.எஃப்மூலம் வாங்கினால், மின்னணுப் பங்குகளாக உங்கள் டீமேட் கணக்கில் பாதுகாப்பாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கியதுபோலவே எளிய முறையில் விற்று, பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்குக் கொண்டுவரலாம். மேலும், இ.டி.எஃப் வகையில் வாங்கும்போது உங்கள் பணக் கையிருப்பு மற்றும் தேவைக்கேற்ப சிறிது சிறிதாக வாங்கலாம் அல்லது விற்கலாம்.”

அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பு படிக்க வாங்கிய வங்கிக் கடனின் வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியுமா?

செந்தில்வேலன், சென்னை-24

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது, வருமான வரிச் சட்டம் 80-இ பிரிவின்படி வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு மட்டும் வரிச்சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் அசல் தொகையை வரிச் சலுகைக்குக் காட்ட முடியாது. ஒருவர் தனது கல்விக்காகவோ, அவரின் மனைவி அல்லது குழந்தைகளின் கல்விக்காகவோ கடன் பெற்றிருந்தால் அதை வரிச் சலுகைக்குக் காட்டலாம். வரிச் சலுக்கைக்கான வட்டித் தொகைக்கு எந்த வரம்பும் கிடையாது.”

தங்கத்தை இ.டி.எஃப் மூலம் வாங்கினால், மின்னணுப் பங்குகளாக உங்கள் டீமேட் கணக்கில் பாதுகாப்பாக இருக்கும்!

என்.ஆர்.ஐ-ஆக இருக்கும் நான், இந்தியாவுக்கு வரவிருக்கிறேன். என்னிடம் பணமதிப்பு நீக்கப்பட்ட பணத்தாள்கள் சில உள்ளன. அவற்றை செல்லத்தக்கதாக மாற்ற வாய்ப்பிருக்கிறதா?

ராஜேஷ்குமார், முகநூல் வழியாக...

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

“பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப் பட்டபின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தாள்களை மாற்ற ரிசர்வ் வங்கி பலமுறை கால அவகாசம் வழங்கியது. குறிப்பாக, என்.ஆர்.ஐ-களுக்காகவே கால அவகாசத்தை நீட்டித்தது. தற்போது அந்தக் கால அவகாசம் முடிந்து பல மாதங்களாகிவிட்டன. இனி அந்தப் பணத்தாள்களை மாற்ற வாய்ப்பில்லை.”

என் வயது 26. திருமணமாகவில்லை. என் எதிர்காலத் தேவைக்காக மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதற்கு ஆலோசனை கூறவும்.

பிரேம் ஆனந்த், முகநூல் வழியாக...

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், PrimeInvestor.in

“இந்த இளம் வயதில் தொலைநோக்குடன் சேமித்து, முதலீட்டுத் திட்டம் தொடங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்களின் மாதாந்தர சேமிப்பை ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கவும்.

பராக் பாரிக் லாங் டேர்ம் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் இதற்கு உகந்தது. இந்த ஃபண்ட், இந்தியப் பங்குச் சந்தை மற்றும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறது. நீண்டகால முதலீட்டுத் திட்டங்களுக்கு இது உகந்தது.”

என் மாமியார், அவர் பெயரிலுள்ள வீட்டு மனையை விற்பனை செய்து அவருடைய மகனுக்கும் மகளுக்கும் அதில் ஒரு பகுதி பணத்தைக் கொடுக்கவிருக்கிறார். அவருக்கு இதுவரை வருமான வரி செலுத்தும்படியான எந்த வருமானமும் கிடையாது. இந்த விற்பனையால் கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு அவர் வரி செலுத்த வேண்டுமா... மகனும் மகளும் பெற்ற தொகையை வருமானத்தில் காட்டி வரி செலுத்த வேண்டுமா?

ராம்குமார், முகநூல் வழியாக...

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“உங்கள் மாமியாரின் வீட்டு மனையை விற்றுவரும் தொகைக்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அந்த நிலத்தை வாங்கிய ஆண்டிலிருந்து இண்டெக்ஸேஷன் படி, மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். அதிலிருந்து அந்த நிலத்துக்காகவும் (வேலி அமைத்தல், நிலத்தைச் சீர்ப்படுத்துதல்), பத்திரப் பதிவுக்காகவும் செய்யப்பட்ட செலவுகளைக் கழித்ததுபோக வரும் தொகைக்கு 20% மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். வாரிசுகளுக்குத் தரப்படும் தொகை, அன்பளிப்பு என்ற வகையில் வருவதால், அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.”

நீண்டகால முதலீட்டுக்கு யெஸ் பேங்க் பங்குகளை வாங்கலாமா?

ஃப்ராங்க்ளின், முகநூல் வழியாக...

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“தற்போதுள்ள சூழலில் யெஸ் பேங்க் பங்குகளில் முதலீடு செய்வது உகந்ததல்ல. அந்த வங்கி தற்போது பிரச்னைகளில் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீளும்வரை அதன் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.”

மென்பொருள்துறையில் பணியாற்றும் எனக்கு வயது 28. திருமணமாகவில்லை. மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் குரோத் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் டாக்ஸ்ஷீல்ட் குரோத் ஆகியவற்றில் தலா 1,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறேன். எனது முதலீட்டை மேலும் 2,000 ரூபாய் அதிகரிக்கவிருக்கிறேன். மிதமான ரிஸ்க்குள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆலோசனை கூறவும்.

ராமராஜன் சுப்புராஜ், முகநூல் வழியாக...

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“நீங்கள் இதுவரை முதலீடு செய்துவரும் இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் நன்றாகவே செயல்படுகின்றன. உங்களுக்கு இளம் வயது என்பதால், நீண்டகாலம் சேமிக்க வாய்ப்புள்ளது. அதனால் அதிக ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இதைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 2,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.”

கடந்த 2010-ம் ஆண்டில் என் தந்தை காலமானார். என் அம்மாவின் பெயரில் என் தந்தை வாங்கிய நிலம் ஒன்று உள்ளது. அதை நானும் என் சகோதரியும் ஃபர்ஸ்ட் கிளாஸ் நோட்டரி அக்ரிமென்ட் மூலமாக எங்கள் இருவருக்கும் சம உரிமை இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்தச் சொத்தில் பங்கிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். எனவே, அவர்களுக்குரிய பங்கைப் பெறுவதற்கு வழக்கு போடலாமா?

முத்துராஜ், முகநூல் வழியாக...

கே.வைத்தீஸ்வரன், வழக்கறிஞர் & ஆடிட்டர்

“அந்த நிலம் உங்கள் தந்தையால் வாங்கப்பட்டு, உங்கள் அம்மாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டி ருந்தால், அந்தச் சொத்து, உங்கள் அப்பாவின் சுய சம்பாத்தியமாகவே கருதப்படும். நீங்கள் போட்டிருக்கும் நோட்டரி அக்ரிமென்டுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது. உங்கள் அம்மாவின் காலத்துக்குப்பிறகு உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கும் அந்த நிலத்தில் சம உரிமை உண்டு.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:  கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com