ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் நான், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சில குடும்பங்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலமாகப் பண உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன். இதற்கு வருமான வரி கணக்குத் தாக்கலின்போது வரிச் சலுகை பெற முடியுமா?

டேனியல், சென்னை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்தப் பணத்தை நேரடியாக அளிக்கும்பட்சத்தில், அதற்கு வருமானவரிக் கழிவு கிடையாது. பிரதமரின் நிவாரண நிதித் திட்டங்கள் / பி.எம் கேர்ஸ் திட்டங்களுக்கு நிதி அளித்தால், வருமான வரிச் சட்டம் 80G செக்ஷன்படி, வரிச் சலுகை உண்டு.

மேலும், வருமானவரிச் சட்டம் 80G(5) செக்ஷன்படி வருமானவரிச் சலுகை பெறுவதற்கான ஒப்புதல் பெற்ற அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி செய்தாலும் வரிச் சலுகை பெறலாம்.”

நான் கடந்த 2015, ஆகஸ்ட் மாதத்தில் ஓர் அடுக்குமாடி வீட்டை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். அதைக் கடந்த 2019, டிசம்பரில் 28 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். இதில் எனக்கு ஏற்பட்டுள்ள மூலதன இழப்பை எப்படிக் கணக்கிடுவது... இந்த இழப்புக்கு வருமானவரிச் சலுகை கிடைக்குமா?

ரெங்கராஜன், கோயமுத்தூர்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“அது, 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்த வீட்டை நீங்கள் வைத்திருந்ததால், அது நீண்டகால மூலதனமாகக் கணக்கில் கொள்ளப்படும். நீங்கள் மாதாந்தர சம்பளதாரராக இருக்கும்பட்சத்தில், வரும் ஜூலை மாதத்துக்குள் வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

உங்களுடைய வீட்டு விற்பனையில் நீண்டகால மூலதன ஆதாயம், இண்டெக்ஸேஷன்படி கணக்கிடப்படும். அதில் நீண்டகால மூலதன இழப்பு இருந்தால், அதை வருமானவரிக் கணக்கில் கொண்டுவர வேண்டும்.

உங்களுக்கு வேறு ஏதேனும் வருமானத்தில் நீண்டகால மூலதன ஆதாயம் இருந்தால், அத்துடன் இந்த இழப்பை நேர்செய்து வரிச் சலுகை பெறலாம். இதற்கான வாய்ப்பு எட்டு ஆண்டு காலத்துக்கு உள்ளது.”

அரசு ஊழியரான நான், கூட்டுறவு வங்கி மூலம் வங்கிக் கடன் பெற்றிருக்கிறேன். இந்த வங்கிக் கடனுக்கு மூன்று மாதத் தவணை தள்ளிவைப்புத் திட்டம் பொருந்தாது என்கிறார்கள். இது உண்மையா?

தேவராஜ், சேலம்

ஆர்.செல்வமணி, கனராவங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

“கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கடன் பெற்றுள்ளவர்களுக்கும் மத்திய அரசு அறிவித்திருக்கும் மூன்று மாதத் தவணையைத் தள்ளிவைக்கும் சலுகை பொருந்தும்.

கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசும் இந்தச் சலுகையைச் செயல்படுத்தும்படி பரிந்துரை செய்திருக்கிறது. அதன்படி செயல்படுத்துவார்கள். எனவே, உங்களுக்குச் சலுகை தேவைப்பட்டால் முறையாக வங்கிக்கு மெயில் மூலமாகத் தெரியப்படுத்துங்கள்.”

ரூ.15 விலையில் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனப் பங்குகள் 1,000, ரூ.155 விலையில் ஐ.டி.சி நிறுவனத்தின் 500 பங்குகள், ரூ.35 விலையில் யெஸ் பேங்க் பங்குகள் 1,000 கைவசம் உள்ளன. எனக்கு எந்தப் பண நெருக்கடியும் தற்போது இல்லை. இவற்றை அப்படியே தொடரலாமா, விற்கலாமா என்று கூறவும்.

கேசவன், திருச்சி

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“டி.ஹெச்.எஃப்.எல்: இந்தப் பங்கை விற்று வெளியேறுவதே புத்திசாலித்தனமானது. தற்போது மதிப்பான பல்வேறு பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருந்து ரிஸ்க்கைச் சந்திப்பதைவிட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதிப்பான பங்குகளில் முதலீடு செய்வதே நல்லது.

ஐ.டி.சி: நுகர்வோர் விற்பனைப் பொருள்கள் துறையில் இந்த நிறுவனப் பங்கு, வருங்காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்போதிருக்கும் நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் அப்படியே வைத்திருக்கலாம்.

யெஸ் பேங்க்: இந்த வங்கிப் பங்கு பல்வேறு சவால்கள் காரணமாக பாதிப்படைந்துள்ளது. எனினும், ஓரளவு மூலதன நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த நிறுவனப் பங்கு பாதிப்பிலிருந்து மீண்டு மேம்படுவதற்குச் சிறிது காலம் எடுக்கும். உங்களுக்கு வேறெந்த அவசரத் தேவையும் இல்லாதபட்சத்தில் இந்த முதலீட்டை மேலும் சிறிது காலத்துக்கு வைத்திருந்து பார்க்கலாம்.”

70 ஆண்டுகளுக்கு முந்தைய வின்டேஜ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறேன். அதற்கு வாகனக் காப்பீடு வாங்க முடியுமா?

கிரிதரன், சென்னை

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“வாகனக் காப்பீட்டு விதிப்படி, டிசம்பர் 1940-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கார் வகைகள் `வின்டேஜ் கார்’ என்றும், டிசம்பர் 1940-க்குப் பிறகு மற்றும் டிசம்பர் 1970-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கார்கள் `கிளாசிக் வகை’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வகையான கார்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு என்பது கட்டாயம். ஆனால், இந்த வகையான கார்களுக்கு விரிவான வாகனக் காப்பீடு எனப்படும் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் கொடுப்பது குறித்து அந்தந்த வாகனக் காப்பீட்டு நிறுவனம்தான் முடிவு செய்யும்.’’

எனக்குச் சொந்தமாக உள்ள ஒரு காரை கால் டாக்ஸி நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். அப்படிக் கொடுக்கும்போது, ஒப்பந்தத்தில் எதையெல்லாம் குறிப்பிட வேண்டும்?

ராம்குமார், சென்னை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“காரின் உரிமையாளர் ஒப்பந்த அடிப்படையில் தன் காரை அளிக்கும்போது, எத்தனை வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப் படுகிறது, காரின் பராமரிப்புப் பொறுப்பு எவருடையது, காரின் இன்ஷூரன்ஸ் யார் எடுக்க வேண்டும், காருக்கான ஃபிட்னெஸ் சான்றிதழ் செய்யும் பொறுப்பு யாருடையது, காரால் விபத்து ஏற்படும்போது வழக்கு உள்ளிட்ட சட்டச் சிக்கல்களுக்கு யார் பொறுப்பு, மாதந்தோறும் எவ்வளவு தொகை அளிக்கப்பட வேண்டும் போன்றவற்றைத் தெளிவாக, சட்டத்துக்கு உட்பட்டு வரையறுக்க வேண்டும்.”

குறுகியகால முதலீடாக ஆர்.பி.எல் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் மற்றும் முத்தூட் கேப்பிட்டல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனது தேர்வு சரியானதா?

மதனகோபால், சென்னை

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“குறுகியகால முதலீடு என்றால், நாம் டெக்னிக்கல் அனாலிசிஸ் வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனங்களில் ஆர்.பி.எல் பேங்க் இன்னும் வலிமையான இறக்கத்தில்தான் இருக்கிறது. இதன் விலை 128 ரூபாயைத் தாண்டும்போது சற்றே வலிமை பெறும். அப்போது வாங்கலாம். ஸ்டாப்லாஸாக 108 ரூபாயை வைக்கலாம். விற்கும் இலக்காக 160 ரூபாயை வைக்கலாம்.

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நல்ல இறக்கத்துக்குப் பிறகு பக்கவாட்டு நகர்வில் இருக்கிறது. இதன் விலை 104 ரூபாயைத் தாண்டும்போது வலிமை பெறும். அப்போது 84 ரூபாயை ஸ்டாப்லாஸாக வைத்து வாங்கலாம். விற்பதற்கு இலக்காக 132 ரூபாயை வைத்துக்கொள்ளலாம். முத்தூட் கேப்பிட்டல் இன்னும் தொடர் இறக்கத்தில்தான் உள்ளது. ஆகவே, உடனடியாக வாங்குவதைத் தவிர்க்கவும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:  கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com