நான் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.2.5 லட்சம் அடமானக் கடன் பெற்றுள்ளேன். மொத்தம் 60 மாதங்கள் கடன் செலுத்த வேண்டும். மாதத் தவணை ரூ.6,630. இதுவரை 19 தவணைகள் கட்டியுள்ளேன். இப்போது இந்தக் கடனை ஒரே நேரத்தில் கட்டிமுடிக்க நினைப்பது சரியா?

என்.விக்னேஷ் இ-மெயில் மூலம்

எம்.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர், Acuwealth.com

‘‘இந்த அடமானக் கடனை நீங்கள் மிக அதிக வட்டிக்கு வாங்கியுள்ளீர்கள். கடனைத் திருப்பிச் செலுத்த உங்களிடம் இப்போது உபரியாகப் பணம் இருந்தால், நீங்கள் கடனை அடைத்துவிடுவது புத்திசாலித்தனம். அதனால் உங்களுக்கு லாபமே கிடைக்கும்.

கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வேறு முதலீடுகளில் நீங்கள் முதலீடு செய்தாலும், ஆண்டுக்கு சுமார் 20% வருமானம் கிடைப்பது கடினம். எனவே, நீங்கள் இந்தக் கடனை அடைப்பது குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. உடனே அடைத்துவிடுங்கள்.’’

ஓய்வுக்கால முதலீட்டில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன என்கிறான் என் நண்பன். சுருக்கமாக விளக்கிச் சொல்ல முடியுமா?

ஆர்.குணசேகரன், மானாமதுரை

ஹசன் அலி, நிதி ஆலோசகர், Siptiger.com

‘‘ஓய்வுக்கால முதலீடு பொதுவாக மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் காலகட்டத்தில் (45 வயது வரை) பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில்தான் அதிகம் முதலீடு செய்யப்படும். இரண்டாவது காலகட்டத்தில் (46 - 55 வயது வரை) பங்கு மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடானது சீராக ஒதுக்கீடு செய்யப்படும். மூன்றாவது காலகட்டத்தில் (55 வயதுக்குமேல்) கடன் சார்ந்த திட்டங்களில் மட்டுமே முதலீடு இருக்க வேண்டும். இந்த நிலைக்கேற்பவே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை அமைத்துக் கொள்வது நல்லது.’’

இந்துக் குடும்பத்தில் நான்கு நபர்கள் குடும்ப வழிவழியாய் வந்த பூர்வீகச் சொத்துகளைப் பொதுவாக அனுபவித்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் காலமாகிவிடுகிறார். அவருக்கு மனைவி, இரு மகன்கள் உண்டு. இவர்கள் மூவரும் மற்ற மூவருக்கு உண்டான நான்கில் ஒரு பாகத்தை விடுதலைப் பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியுமா? அதற்கு கட்டணம் எவ்வளவு?

ருக்மணி, கோவை, இ-மெயில் மூலம்

என்.ரமேஷ், வழக்கறிஞர்

‘‘நான்கில் ஒரு பாகஸ்தர் இறந்த பிறகு, இறந்தவரின் வாரிசுகளுக்கு குடும்பச் சொத்தைப் பிரித்துத் தர வேண்டும் என்றால், சொத்தைப் பாகம் பிரிப்பதுதான் முறை. எனவே, உயிருடன் உள்ள மூன்று பாகஸ்தர்களும், இறந்த பாகஸ்தரின் வாரிசுகளும் சேர்ந்து பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை ஆவணம் மூலம் பாகம் பிரித்துக் கொள்ள லாம். பாகப்பிரிவினை ஆவணத்தில், நான்கில் ஒரு பாகத்தை எல்லைகள் குறிப் பிட்டு இறந்தவரின் வாரிசுகளுக்கு ஒதுக்கி, அந்த ஆவணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களுக்குள் பாகப்பிரிவினை என்பதால், ஒவ்வொரு பாகத்துக்கும் சொத்தின் சந்தை மதிப்பில் 1% முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். அதிகபட்ச வரம்பு ரூ.25,000.

உதாரணமாக, ஒரு பாக சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் எனில், 1% முத்திரைக் கட்டணம் ரூ.5,000 செலுத்த வேண்டும். ஒரு பாக சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், 1% முத்திரைக் கட்டணம் ரூ.50,000 ஆகும். ஆனால், உச்ச வரம்பு ரூ.25,000, செலுத்தினால் போதும்.

ஒவ்வொரு பாகத்துக்கும், சொத்தின் சந்தை மதிப்பில் 1% பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அதிகபட்ச வரம்பாக ரூ.4,000 ஆகும்.

உதாரணமாக, ஒரு பாக சொத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் எனில், 1% பதிவுக் கட்டணம் ரூ.2,000 செலுத்த வேண்டும். ஒரு பாக சொத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் எனில், 1% பதிவுக் கட்டணம் ரூ.20,000 வருகிறது. ஆனால், உச்ச வரம்பு ரூ.4,000 செலுத்தினால் போதும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com