Published:Updated:

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

கோல்டு பாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டு பாண்ட்

2020 டிசம்பர் 28 முதல் 2021 ஜனவரி 1-ம் தேதி வரையில் சாவரின் கோல்டு பாண்டில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்!

பாரத ரிசர்வ் வங்கி வெளியிடும் மத்திய அரசின் சாவரின் கோல்டு பாண்ட் தற்போது வாங்க வாய்ப்புள்ளதா?

அரங்கநாதன் ஜெயந்தி, சிதம்பரம்

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘2020 டிசம்பர் 28-ம்தேதி முதல் 2021 ஜனவரி 1-ம் தேதி வரையிலான சாவரின் கோல்டு பாண்டில் (Sovereign Gold Bond - SGB)் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

இதில் ஒரு கிராம் விலை டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் அதாவது, முதலீடு ஆரம்பத் தேதியிலிருந்து மூன்று வேலை நாள்களுக்குமுன் ரிசர்ச் வங்கி அறிவிக்கும்.

இது தவிர, நடப்பு நிதியாண்டில் (2020-2021) 2021 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் ரிசர்வ் வங்கி தங்கப்பத்திரங்களை வெளியிட இருக்கிறது. இதில் முதலீடு செய்ய வேண்டுமெனில் பணத்தை இப்போதே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பங்குச் சந்தை மார்ச் இறக்கத்துக்குப் பிறகு இரண்டு பார்மா ஃபண்டுகள் மற்றும் மூன்று ஐ.டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் தலா ரூ.5,000 முதலீடு செய்துவருகிறேன். இப்போது அவை 25 - 30 சதவிகிதத்துக்குமேல் லாபத்தில் இருக்கின்றன. இந்த லாபத்தை வெளியே எடுத்துவிடலாமா, தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடரலாமா?

கே.சத்யா, கல்லிடைக்குறிச்சி

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘பார்மா ஃபண்டுகள் மற்றும் ஐ.டி ஃபண்டுகள் உங்கள் போர்ட் ஃபோலியோவில் 20 சதவிகிதத்துக்குள் இருந்தால் முதலீட்டைத் தொடரலாம். 20 சதவிகிதத்துக்குமேல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் 20 சதவிகிதத்துக்கு மட்டும் வைத்துக்கொண்டு மீதியுள்ள யூனிட்டுகளை விற்று வெளியேறிவிடுங்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செக்டார் ஃபண்டுகள் மிகவும் ரிஸ்க்கானவை. தவறான நேரத்தில் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் அல்லது அதிகமாக அந்தத் துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சி கண்டால், அதிக இழப்பை சந்திக்க வேண்டிவரும். எனவே, இனி செக்டார் ஃபண்டுகளில் அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நிறுவனத்தின் பங்கை நிறுவனத்தின் பெயரில், தனிநபர் பெயரில் வாங்கினால் வருமான வரியை எப்படி அதிகம் மிச்சப்படுத்த முடியும்?

முருகன் ஆறுமுகம், முகநூல் மூலம்

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘நிறுவனத்தின் பெயரில் அல்லது தனிநபரின் பெயரில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு எந்தவிதமான வரியும் கிடையாது. ஆனால், பங்குகளை விற்கும்போது, லாபம் ஈட்டினால் நிறுவனம் அல்லது தனிநபர் வரி கட்ட வேண்டிவரும். அதாவது, இருதரப்பினரும் மூலதன ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டும். அந்த வரியில் இரு தரப்பினருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.’’

நான் கல்லூரி மாணவி. பகுதிநேர வேலை மூலம் மாதம் ரூ.5,000 சம்பாதிக்கிறேன். நான் மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்தப் பணம் எனக்கு எட்டு ஆண்டுகள் கழித்துக் கிடைத்தால் போதும். எனக்கு ஏற்ற ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.

பொன்னரசி, காரைக்குடி

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘மாணவப் பருவத்திலேயே சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்ற உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ரூ.2,000–ஐ தலா ரூ.1,000 வீதம் லார்ஜ்கேப் ஃபண்ட் பிரிவைச் சேர்ந்த ஆக்சிஸ் புளூசிப் ஃபண்ட் மற்றும் மல்ட்டிகேப் ஃபண்ட் பிரிவைச் சேர்ந்த கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம். இந்த வகை ஃபண்டுகள் மற்ற பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது ரிஸ்க் குறைவானது என்பதால், உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.’’

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், வங்கிகளில் உள்ள சேமிப்புத் திட்டங்கள் - இவற்றில் எது அதிக பாதுகாப்பானது?

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘வங்கிச் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகை (ஃபிக்ஸட் டெபாசிட்) என்பது வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தால் (டி.ஐ.சி.ஜி.சி) ஒரு டெபாசிட்தாரருக்கு ரூ.5 லட்சம் வரை டெபாசிட் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்பு, ஒரு தனிநபர், வங்கி ஒன்றின் அனைத்துக் கிளைகளிலும் அனைத்து வகையான அதாவது, சேமிப்பு, எஃப்.டி, ஆர்.டி கணக்குகளின் முதலீடு மற்றும் வட்டி வருமானம் சேர்ந்ததாக உள்ளது. முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி வருமானம் சேர்ந்து ரூ.5 லட்சத்தைத் தாண்டும்போது ரிஸ்க்கைக் குறைக்க வேறு ஒரு வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

அனைத்து வணிக மற்றும் கூட்டுறவு வங்கி வைப்புகளும் இந்தத் திட்டத்தின்கீழ் வருகின்றன. ஆனால், முதன்மைக் கூட்டுறவு சங்கங்களில் (Primary Cooperative Societies) செய்யப்படும் டெபாசிட், இந்த டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்தின்கீழ் வராது. எனவே, நீங்கள் உங்கள் பணத்தை எந்த வகையான வங்கிகளில் டெபாசிட் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

மறுபுறம், தபால் அலுவலகச் சேமிப்பு மற்றும் டேர்ம் டெபாசிட் ஆகியவற்றுக்கு மத்திய அரசு உத்தரவாதம் (sovereign guarantee) அளிக்கிறது. எனவே, தபால் அலுவலகத்தில் ஒரு டெபாசிட்தாரர் செய்யும் டெபாசிட் தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. எனவே, ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்வதாக இருந்தால் வங்கிக்குப் பதில் தபால் அலுவலகம் பாதுகாப்பானதாக இருக்கும்.’’

நான் பாட்டா இந்தியா (வாங்கிய விலை ரூ1,610), சி.இ.எஸ்.சி (வா. வி. ரூ.760), டாக்டர் ரெட்டீஸ் லேப் (வா. வி. ரூ. 5,210), ஐ.ஓ.எல் (வா. வி. ரூ.730) ஆகிய பங்குகளை வைத்திருக்கிறேன். இந்தப் பங்குகளில் உள்ள முதலீட்டைத் தொடரலாமா?

பி.எஸ்.செல்வம், கோயம்புத்தூர் -24

கேள்வி பதில் : அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு... எது பாதுகாப்பானது..? - முதலீட்டு ஆலோசனை

‘‘தற்போதைய நிலையில், நீங்கள் இந்த நான்கு பங்குகளையும் தொடர்ந்து வைத்திருக்கலாம்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com