என் வயது 26. அடுத்த 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தோராயமாக ரூ.1 கோடி சேர்க்க வேண்டுமென்றால், எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்... வருமான வரிச் சேமிப்புக்கான ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.
லோகேஷ், முகநூல் வழியாக...
பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்
“15 வருடங்களில் சுமார் ரூ.1 கோடி சேர்க்க, ஆண்டு வருமானம் தோராயமாக 14% என்ற கணக்கீட்டில் மாதந்தோறும் சுமார் ரூ.25,000 முதலீடு செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் சுமார் 12% கிடைத்தால், மாதந்தோறும் சுமார் ரூ.32,000 முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீட்டை நான்கு திட்டங்களில் சமமாகப் பிரித்து முதலீடு செய்யலாம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் கோட்டக் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகிய இரண்டு வரிச் சேமிப்புத் திட்டங்களிலும், டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய இரண்டு டைவர்சிஃபைடு ஈக்விட்டி திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். அவ்வப்போது வருமானம் மற்றும் வரிச் சேமிப்பு மாற்றங்களை கவனித்து, தேவைப்பட்டால் திட்டத்தை மாற்றவும்.”
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநான் பணிபுரியும் நிறுவனத்தில் தரப்பட்டிருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் எனது மூன்று வயது குழந்தைக்கு கவர் ஆகவில்லை. நான் வேறு நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாமா?
நித்தியானந்தன், முகநூல் வழியாக...
எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்
“உங்கள் நிறுவனத்தை அணுகி, உங்களுடைய குழந்தையை நிறுவனத்தின் பாலிசியில் இணைத்துக்கொள்வது நல்லது. உங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி குழந்தையை பாலிசியில் சேர்த்துக்கொள்வதில் சிக்கலிருந்தால், பாலிசியின் தன்மை, நிறுவனத்தின் பின்புலம், பாலிசியின் காப்பீடு இழப்பு வழங்கிய விகிதம், நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் பிரீமியம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு பாலிசியைத் தேர்வு செய்யவும்.”
ஆண்டு வருமானம் சுமார் 12% கிடைத்தால், மாதந்தோறும் சுமார் ரூ.32,000 முதலீடு செய்ய வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ரூ.60,000 மதிப்புள்ள பங்குகளின் மதிப்பு தற்போது ரூ.2 லட்சமாக உள்ளது. அந்தப் பங்குகளை என் மகளுக்கு அன்பளிப்பாகத் தர விரும்புகிறேன். வரிச் சலுகைகள் பெற பங்குகளாகத் தருவது நல்லதா அல்லது விற்பனை செய்து பணமாக வழங்கலாமா?
கிஷோர், முகநூல் வழியாக...
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்
“உங்கள் மகளுக்கு அன்பளிப்பாகத் தரலாம். இதை ‘ஆஃப் மார்க்கெட் டிரான்ஸ்ஃபர்’ என்னும் முறையில் உங்கள் டீமேட் கணக்கிலிருந்து மகளின் டீமேட் கணக்குக்கு மாற்றலாம். இதற்கு உங்கள் பங்குத் தரகர் உதவுவார். உடனடியாக எந்த வருமான வரிப் பிரச்னையும் இல்லை. ஆனால், உங்கள் மகளுக்குப் பங்குகளை மாற்றும் தேதியிலுள்ள விலையைக் குறிப்பிட்டு, ‘கிஃப்ட் அக்ரிமென்ட்’ கொடுக்கவும். இது பின்னாளில், உங்கள் மகள் அந்தப் பங்குகளைக் குறிப்பிட்ட விலையில் விற்க நேரிட்டால், லாபக் கணக்கு போட்டு வருமானத்தில் காட்டவும், லாபத்துக்கு வரி செலுத்தவும் உதவும்.’’
கடந்த ஆண்டு பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் மானியத்துடன் வீடு கட்டி முடித்தேன். அதற்கான வட்டி செலுத்தி வருகிறேன். என் மனைவியின் பெயரில் வீட்டுமனை இருக்கிறது. அவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எனவே, அவரது வருமானத்திலிருந்து இதே திட்டத்தில் இன்னொரு வீடு கட்டலாமா?
முத்துவேல், கோயமுத்தூர்
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி
“பிரதமரின் ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வீட்டுக்கு மட்டுமே மானியம் அனுமதிக்கப்படும். உண்மையை மறைத்து வாங்க நினைப்பது சட்டப்படி தவறு. வங்கிக் கடன் வழங்கும் முன்னர் உங்கள் கே.ஒய்.சி.யைப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.”
கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com