மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக ஒருமுறை அபராதம் செலுத்தியிருக்கிறேன். வாகன விபத்து காப்பீடு க்ளெய்ம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டால், அபராதம் செலுத்தியதைக் காரணம் காட்டி மறுக்க வாய்ப்பிருக்கிறதா?

கணேஷ்குமார், சென்னை-17

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“என்றைக்கோ குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அபராதம் செலுத்தியதைக்கொண்டு விபத்து காப்பீடு க்ளெய்மை மறுக்க வாய்ப்பில்லை. விபத்து நடந்தபோது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகத் தெரியவந்தால்தான் காப்பீடு க்ளெய்ம் செய்யும்போது மறுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.”

என் வயது 24. எஸ்.ஐ.பி முறையில், மாதம் ரூ.3,000 வீதம் ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25, எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் மற்றும் மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஆகிய ஃபண்டுகளில் இரண்டு ஆண்டுகளாக முதலீடு செய்கிறேன். மொத்தம் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்யவிருக்கிறேன். என் முதலீட்டைத் தொடரலாமா?

குணசேகர், சென்னை-47

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“உங்கள் 24 வயதில், ரிஸ்க் அதிகமுள்ள இரண்டு ஃபோகஸ்டு மற்றும் ஒரு மிட்கேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். ஃபண்ட் தேர்வு நன்றாகவே இருக்கிறது. மேலும் மூன்று வருடங்களுக்கு இதே திட்டங்களில் முதலீட்டைத் தொடரவும். ஐந்து ஆண்டுகளோடு முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்வதில் உறுதியாக இருந்தால் நிறுத்திக்கொள்ளலாம். ஃபண்டிலிருந்து வருமானத்தை எடுப்பதற்கு மட்டும் சற்று பொறுத்திருந்து, நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை எட்டும்போது எடுக்கலாம்.”

எனக்கு 32 வயது. இரண்டு குழந்தைகள். என் அம்மா எங்களோடு வசிக்கிறார். புதிதாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவிருக்கிறேன். அதனுடன் இணைந்து எடுக்க வேண்டிய முக்கியமான ரைடர்களைப் பற்றி ஆலோசனை கூறவும்.

ராஜராஜன், முகநூல் வழியாக...

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“உங்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் டாப்அப் பிளானே போதுமானது. உங்கள் அம்மாவையும் உள்ளடக்கிய ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத்தொகை அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான டாப்அப் காப்பீடு செய்துகொள்ளவும். இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மொத்தமாக 10 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்தால் பிரீமியம் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதேவேளையில், அடிப்படையாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொண்டு, அதற்குமேல் டாப்அப் செய்யும்போது பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்.”

எனது நிறுவனத்தின் மூலமாக அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட் திட்டத்தில் பல ஆண்டுகளாக முதலீடு செய்துவருகிறேன். இதை வேறொரு பென்ஷன் திட்டத்துக்கு மாற்ற இயலுமா... அப்படி மாற்றுவதென்றால் எந்தத் திட்டத்துக்கு மாற்றலாம்?

விஜயகுமார், முகநூல் வழியாக...

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட் திட்டம், கடந்த ஐந்தாண்டுகளில் 7.36%, மூன்றாண்டுகளில் 10.07%, ஓராண்டில் 7.67% வருவாயைக் கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் நீங்கள் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்திருக்கிறீர்கள். எனவே, ஒப்பிடுவது மிகவும் கடினம். ஏனென்றால், முதலீடுகள் எப்போதுமே பங்குச் சந்தைச் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, ஒரு முதலீட்டை அடிக்கடி மாற்றுவதைவிட, அதை நீண்டகாலம் செயல்பட அனுமதிப்பது நல்லது. இருப்பினும் நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஹெச்.டி.எஃப்.சி என்.பி.எஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.”

ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே நான் உயில் எழுதிவிட்டேன். புதிதாக வாங்கிய சொத்து ஒன்றை உயிலில் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

சிவா, முகநூல் வழியாக...

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்

“உங்களால் எழுதப்பட்ட முதல் உயில் ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், புதிய சொத்தை அதில் சேர்ப்பதற்காக உயிலின் இணைப்பு எனப்படும் ‘Codicil’ என்ற ஆவணத்தின் மூலமாக, முன்னர் எழுதிய உயிலின் இணைப்பாகப் பதிவுசெய்ய முடியும். முதல் உயிலைப் பதிவு செய்திருக்காத பட்சத்தில், அதை அழித்துவிட்டு (Destroy), அனைத்துச் சொத்துகளையும் சேர்த்து ஒரே உயிலாக எழுதி வைக்கலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதிவைக்கலாம். அவரின் இறுதி உயிலுக்கு முன்னதாக அவர் எழுதியிருந்த அனைத்து உயில்களையும் ரத்து செய்திருக்க வேண்டும்.”

விபத்து நடந்தபோது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகத் தெரியவந்தால் காப்பீடு க்ளெய்ம் மறுக்கப்படலாம்!

கடந்த ஆறு ஆண்டுகளாக என் மகளின் (வயது 6) உயர்கல்விச் செலவை எதிர்கொள்ள மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறேன். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அமெரிக்காவில் வசிக்கவிருக்கிறேன். எனது எஸ்.ஐ.பி முதலீட்டை அப்படியே தொடரலாமா அல்லது என் மனைவி பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டுமா... அமெரிக்காவிலிருந்து எஸ்.ஐ.பி தொகையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நரேஷ் குமார், சென்னை-64

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“நீங்கள் உங்கள் வங்கியிலிருந்து என்.ஏ.சி.ஹெச் இ.சி.எஸ் (NACH ECS) மூலம் மாதந்தோறும் ரூ.12,000 எஸ்.ஐ.பி முதலீட்டைச் செலுத்துங்கள். அமெரிக்கா சென்ற பிறகு உங்கள் மாதச் சம்பளத்தை உங்கள் நிறுவனம் அங்கு உங்கள் வங்கிக்கணக்கில் சேர்க்கும். அதிலிருந்து நீங்கள் மனைவியின் வங்கிச் சேமிப்புக் கணக்குக்கோ, உங்களுடைய சேமிப்புக் கணக்குக்கோ தேவைக்கேற்ப பணப் பரிமாற்றம் செய்யலாம். ஆறு மாதங்கள் கழித்து நீங்கள் கூடுதல் முதலீட்டுக்குப் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும். உங்களுடைய என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ கணக்குகளை உங்கள் வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ தொடங்கி, புதிய சி.கே.ஒய்.சி (CKYC) மற்றும் எஃப்.ஏ.டி.சி.ஏ (FATCA) படிவங்களை ஆலோசகர் உதவியுடன் பூர்த்தி செய்யவும். பின்னர், ஆதித்ய பிர்லா சன் லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், நிப்பான் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, எல் அண்ட் டி, பிரமெரிகா, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டுகளில் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்து கூடுதல் முதலீட்டைத் தொடங்குங்கள்.”

என் வயது 26. முதன்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். மாதந்தோறும் 8,000 ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். ஓரளவு ரிஸ்க் எடுக்க முடியும். குறைந்தது பத்து ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யும்விதத்தில் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

நிதிஷ், சென்னை-22

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

நீங்கள் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்ய விரும்புவதால், ரிஸ்க்குடன்கூடிய பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டை இரண்டாகப் பிரித்து, டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் கோட்டக் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் தலா 4,000 ரூபாயை மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:  கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com