என் வயது 30. மாதம் ரூ.70,000 சம்பளம் வாங்குகிறேன். என் 50 வயதில் ரூ.1 கோடி சேர்க்க விரும்புகிறேன். நான் எந்தெந்த ஃபண்டுகளில், மாதம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
- நிவேதா குமார், சென்னை-17
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்
“உங்கள் இலக்குக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருப்பதால், நீங்கள் உங்கள் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டில் மேற்கொள்ளலாம். உங்கள் முதலீட்டை 20 வருடங்களுக்குக் கீழ்க்கண்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் மொத்தம் ரூ.13,000 மேற்கொள்ள வேண்டும். ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் (ரூ.5,000-லார்ஜ்கேப்) ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் (ரூ.5.000– மல்டிகேப்) எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் (ஸ்மால்கேப்-ரூ.3,000) ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளில் 10% வருமானம் கிடைத்தால், உங்கள் இலக்கான ரூ.1 கோடியை அடையலாம். இதுவே 12% வருமானம் கிடைத்தால், கூடுதலாக ரூ.26 லட்சம் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், உங்கள் முதலீட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே மொத்த பணத்தையும் எடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் மாற்றிவிடவும். அப்போதுதான் பங்குச் சந்தையின் திடீர் இறக்கத்திலிருந்து முதலீட்டைப் பாதுகாக்க முடியும்.”

சவுத் இந்தியன் பேங்க் பங்கின் பி.இ விகிதம் 5.14, புத்தக மதிப்பு ரூ.28.16, டிவிடெண்ட் யீல்டு 2.75% மற்றும் பங்கு விலை ரூ.9.05 எனக் கவர்ச்சிகரமாக உள்ளது. இப்போது முதலீடு செய்யலாமா?
- தே.ரவி, மெயில் மூலமாக
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட்
“எந்தவொரு நிறுவனப் பங்கிலும் பாதுகாப்பாக முதலீடு செய்ய, அடிப்படையாகப் பங்கு விலை புத்தக மதிப்புக்குக் கீழே இருக்கக் கூடாது. பங்கு விலை, புத்தக மதிப்பைவிடக் குறைவாக இருந்தால், அது குறைவான மதிப்பைக்கொண்ட பங்கு (Undervalued Stock) என்று அழைக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வங்கியின் நிகர லாபம் குறைந்துவருகிறது. அதாவது, அதன் வணிகம் மோசமாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கான லாப வளர்ச்சி நெகட்டிவ்வாக உள்ளது. வங்கியின் இதர வருமானம் பாசிட்டிவ்வாகவும், முக்கிய வணிகம் மோசமாகவும் உள்ளன. இந்த நிலை பங்கு முதலீட்டுக்கு நல்லதல்ல. ஆனால், டெக்னிக்கல்படி, ரூ.8-ல் நல்ல சப்போர்ட் இருப்பதால், இனி ரூ.11.45-க்கு மேலே உயர வாய்ப்புள்ளது. அந்த வகையில் இது ஒரு வர்த்தகப் பங்கு மட்டுமே. டெக்னிக்கல்படி, ரூ.4.85-ல் இரட்டை பாட்டம் (Double Bottom) பேட்டர்ன் உருவாக்கியிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
என் தந்தை உயில் எழுதாமல் இறந்துவிட்டார். என் அம்மா உயிருடன் இருக்கிறார். அப்பாவுக்குச் சொந்தமான வீட்டில் யாருக்கு உரிமை உள்ளது?
- அருணா அன்பரசன், முகநூல் மூலம்
என்.ரமேஷ், வழக்கறிஞர்
“இது எளிய மற்றும் நேரடியான வழக்கு. உயில் எழுதாமல் உங்கள் தந்தை இறந்ததால், நீங்களும் உங்கள் தாயும் வீட்டின்மீது சம உரிமை பெறுவீர்கள். இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போதுமானது. நீங்கள் இருவரும் விரும்பியபடி வீட்டை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம். உங்கள் உரிமையை நிலைநாட்டத் தனி ஆவணம் தேவை இல்லை.”

கரூர் வைஸ்யா பேங்க் பங்கு விலை ஏன் குறைந்துவருகிறது... ஏதேனும் சிக்கல் இருக்கிறதா..?
- ரமேஷ் ராயன், மெயில் மூலம்
ரெஜி தாம்ஸ், பங்குச் சந்தை நிபுணர்
“ஆமாம். வாராக்கடனுக்கான அதிக ஒதுக்கீடு, வங்கிக்கு வரும் டெபாசிட் தொடர்ந்து குறைந்து வருவது, சரியான தலைமை இல்லாதது, வங்கியின் எதிர்கால வளர்ச்சி மிகவும் மோசமாக இருப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com