நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கோல்டு இ.டி.எஃப் முதலீடு... கவனிக்க வேண்டியது என்ன?

கோல்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டு

இ.டி.எஃப் யூனிட்டுகளை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற முடியாது!

கோல்டு இ.டி.எஃப்-களில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்யவிருக்கிறேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு யூனிட்டுகளை விற்றுப் பணமாக்குவது சுலபமாக இருக்குமா?

- ஏ.செந்தில்வேலன், தஞ்சாவூர்

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

“பத்துக்கும் மேற்பட்ட கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் சந்தையில் வர்த்தகமாகிவருகின்றன. இந்த இ.டி.எஃப்-களின் மதிப்பு தங்கத்தின் பிசிக்கல் விலையை ஒட்டியே இருக்க வாய்ப்பிருக்கிறது.

இருந்தபோதிலும் டிராக்கிங் எரர் (இ.டி.எஃப் நிறுவனங்கள் தங்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் முதலீடு செய்யும்போது, அதன் ஒட்டுமொத்த மதிப்பில் வரக்கூடிய விலை வித்தியாசம்) குறைவாக இருக்கக்கூடியதும், அதிக வர்த்தக அளவைக் கொண்டதுமான கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

இ.டி.எஃப் யூனிட்டுகளை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற முடியாது; பத்து வருடங்கள் கழித்துப் பெறப்படும் முதலீட்டு ஆதாயத்துக்கு இண்டக்ஸேஷன் முறையில் கணக்கிடப்பட்டு மூலதன ஆதாய வரி செலுத்த நேரிடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.’’

ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு சால்வன்ஸி விகிதம் (Solvancy Ratio) எந்த அளவுக்கு இருக்க வேண்டும், அது பாலிசி எடுத்தவருக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பைத் தரும்?

- கணேஷ்.மா, பொள்ளாச்சி

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், wealthladder.co.in

‘‘சால்வன்ஸி விகிதமானது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிதித்திறனைக் குறிப்பிடும் விகிதம். இதைக்கொண்டு ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை சீராக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு இன்ஷூரனஸ் நிறுவனத்துக்கு சால்வன்ஸி விகிதமானது ஐ.ஆர்.டி.ஏ.ஐ -வின் விதிமுறைப்படி, குறைந்தபட்சம் 150 சதவிகிதத்துக்கு இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் திவாலாகும் தறுவாயிலும், பாலிசிதாரர்களுக்கு உரிய செட்டில்மென்ட்டைத் திறம்படத் திருப்பிச் செலுத்தும் திறனை அறிய முடியும்.

உதாரணமாக, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ.300 கோடிக்கு பாலிசிகளை விநியோகித்திருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனம் ரூ.450 கோடிக்கு முதலீடு செய்திருக்க வேண்டியது அவசியம்.’’

எஸ்.ஸ்ரீதரன், ரெஜி தாமஸ், ஜி.ரமேஷ்,
எஸ்.ஸ்ரீதரன், ரெஜி தாமஸ், ஜி.ரமேஷ்,

புதிய பங்கு வெளியீடு ஒன்றில் எனக்கு ஒரு லாட் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில மாதங்களாகியும் எனது டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படவில்லை. நான் என்ன செய்வது?

- வி.ஐயப்பன், ஸ்ரீரங்கம்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு டிபி சேவை அளிக்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும், உங்கள் கணக்குக்கு ஏன் பங்கு வரவு வைக்கப்பட வில்லை என இந்தப் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பதிவாளருக்கு இ-மெயில் ஒன்றை அனுப்புங்கள்.’’

கோல்டு
கோல்டு

அதிக டிவிடெண்ட் யீல்டு உள்ள பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா?

- மகேஷ்குமார். புதுக்கோட்டை

ஜி.ரமேஷ், பங்குச் சந்தை நிபுணர், Todaytrading.com

“அதிக டிவிடெண்ட் யீல்டு உள்ள பங்குகளில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு நிறுவனம் கடந்த காலத்தில் அதிக டிவிடெண்ட் தந்திருக்கிறது என்பதற்காக எதிர்காலத்திலும் அப்படிக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. சில நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டம் அல்லது வேறு சில காரணங்களுக்காக சில வருடங்களுக்கு டிவிடெண்ட் தராமல் போகக்கூடும் என்பதை மனதில்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கம்பெனிகளில் முதலீடு செய்தால், நீண்டகால முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com