Published:Updated:

கேள்வி - பதில் : வீடு கட்ட எம் சாண்ட் பயன்படுத்தலாமா? - வலிமையாக இருக்குமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

நைஸ் எம் சாண்ட் செங்கல் கட்டுமானம் மற்றும் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது!

நான் வீடு கட்டத் திட்டமிட்டிருக்கிறேன். எம் சாண்ட் வலிமையாக இருக்குமா?

- வி.குமரன், விருதுநகர்

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“மணல் தட்டுப்பாடு காரணமாக தற்போது `எம் சாண்ட்’ என்ற செயற்கை மணல் (Manufacturing Sand என்பதே M-Sand) கவர்ச்சிகரமாக மாறியிருக்கிறது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கரடுமுரடானது. இன்னொன்று, நைஸ் ரகம். கரடுமுரடான எம் சாண்ட் அனைத்துவிதமான கான்கிரீட் கட்டுமானங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நைஸ் எம் சாண்ட் செங்கல் கட்டுமானம் மற்றும் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது எம் சாண்ட் சமமான தரத்தைக் கொண்டிருப்பதால், நாம் கட்டுமான வேலைகளுக்கு தாராளமாக அதைப் பயன்படுத்தலாம்.”

த.பார்த்தசாரதி, ஹசன் அலி
த.பார்த்தசாரதி, ஹசன் அலி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் டெப்ட் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவை யாருக்கு ஏற்றவை?

- எல்.மணிகண்டன், திருச்சி-4

ஹசன் அலி, நிதி ஆலோசகர், Siptiger.com

“முதலீட்டாளர்களின் தேவையை மனதில்கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதிக ரிஸ்க் எடுக்காத முதலீட்டாளர்களுக்கு டெப்ட் ஃபண்டுகள், மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஹைபிரிட் ஃபண்டுகள், ரிஸ்க்கை எதிர்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுகள் சரியானவையாக இருக்கும். குறுகியகாலத்துக்கு டெப்ட் ஃபண்டுகள், நடுத்தர காலத்துக்கு ஹைபிரிட் ஃபண்டுகள், நீண்டகாலத்துக்கு ஈக்விட்டி ஃபண்டுகள் சரியானவையாக இருக்கும். ஒருவரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் போன்றவற்றின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

என் வயது 50. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம். என்னால் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும். பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் எப்படி முதலீடு செய்வது?

- விநாயக மூர்த்தி, விருத்தாசலம்

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், vbuildwealth.com

“தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை ஆகிய மூன்று சொத்துப் பிரிவுகளையும் நீண்டகால முதலீட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வயது 50 என்பதால் அவசரகால நிதி, ஆயுள் காப்பீடு (டேர்ம் பிளான்) போன்றவற்றை வைத்திருப்பதோடு, அடிப்படை நிதித் திட்டத்தையும் செய்திருப்பீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் சம்பளம் 8 லட்சம் ரூபாயில் குறைந்தபட்சம் 30% முதலீடு செய்யலாம். இது ஒரு வருடத்தில் 2.4 லட்சம் ரூபாய். பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் மற்றும் தங்கத்தில் கலந்து முதலீடு செய்தால் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தங்கம் எனும்போது கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது கோல்டு இ.டி.எஃப்-ஆக முதலீடு செய்வதன் மூலம் எளிதில் பணமாக்க முடியும். மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டை மேற்கொள்வது கடினம்.’’

என்.விஜய குமார், ஸ்ரீகாந்த் மீனாட்சி
என்.விஜய குமார், ஸ்ரீகாந்த் மீனாட்சி

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளிலிருந்து எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்க முடியும்... அதன் வருமானத்துக்கு எப்படி வரி செலுத்த வேண்டும்?

- சுரேஷ் கிருஷ்ணா, தல்லாகுளம், மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், primeinvestor.in

“ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் சந்தையில் நிலவும் விலை ஏற்றத் தாழ்வு மாற்றங்களில் வர்த்தகம் செய்து லாபம் ஈட்ட முயல்பவை. சந்தையில் நிலையான வர்த்தகம் நிலவும்போது, இந்த ஃபண்டுகள் அதிகம் லாபம் தராது. எனவே, இவற்றில் கொஞ்சம் கவனமாகவே முதலீடு செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும் இவற்றிலிருந்து 6-8% வரை மட்டுமே லாபம் காண முடியும். வருமான வரியைப் பொறுத்தவரை, இவை ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு நிகராகக் கணக்கிடப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு மேற்பட்ட லாபம் நீண்டகால மூலதன ஆதாயமாகக் கொள்ளப்படும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com