Published:Updated:

கேள்வி - பதில்: வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பும் பணம்...

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி செலுத்த வேண்டுமா?

என் வயது 62. அண்மையில் என் மகன் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். என்.ஆர்.ஐ-ஆக இருக்கும் அவன், தனது என்.ஆர்.ஓ வங்கிக் கணக்கிலிருந்து என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகிறான். இப்படி அனுப்பும் பணத்துக்கு நான் வரி செலுத்த வேண்டியிருக்குமா?

சுபஶ்ரீ, சென்னை-34

பி.கமலேசன், ஆடிட்டர்

கேள்வி - பதில்: வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பும் பணம்...

“உங்கள் மகனின் என்.ஆர்.ஓ வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் பணத்துக்கு எவ்வித வரியையும் நீங்கள் செலுத்தத் தேவையில்லை. உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பும் பணம் ‘கிஃப்ட்’ என்ற வகையில் சேர்வதால், அதற்கு வரி கிடையாது. ஒருவேளை அந்தத் தொகையிலிருந்து நீங்கள் வட்டி வருமானம் பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யவிருக்கிறேன். இறக்குமதியாளர் 25% தொகையை முன்பணமாக தந்துவிட்டார். `75% தொகையை ஏற்றுமதி செய்து, அவருக்குப் பொருள் வந்து சேர்ந்த பிறகு தருகிறேன்’ என்கிறார். இப்போது இ.சி.ஜி.சி இன்ஷூரன்ஸ் எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்... ஏற்றுமதி இன்ஷூரன்ஸ் வகைகள் பற்றி விளக்கிச் சொல்லவும்.

முகேஷ், சென்னை-24

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

“இறக்குமதியாளர் தந்திருக்கும் முன்பணம் போக மீதமுள்ள தொகைக்கு மட்டும் இ.சி.ஜி.சி (Export Credit Guarantee Corporation of India)-வில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் போதும். ஏற்றுமதி இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை பொலிட்டிகல் ரிஸ்க், கமர்ஷியல் ரிஸ்க் என இரண்டு வகைகள் உள்ளன. நீங்கள் ஏற்றுமதி செய்யும் நாட்டில் போர், பொருளாதாரத் தடை போன்ற ரிஸ்க்குகளுக்கான பாலிசி இது. கமர்ஷியல் பாலிசியில் இறக்குதியாளர் ரிஸ்க், வங்கி ரிஸ்க் என உள்பிரிவுகள் உள்ளன.”

கேள்வி - பதில்: வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பும் பணம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு 52 வயது. ஆயுள் காப்பீடு எடுக்கும்போது என் மருமகளையும், மூன்று வயது பேரனையும் என் வாரிசுதாரர்களாகச் சேர்க்க முடியுமா?

ஜெயலஷ்மி, சென்னை-45

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

“நீங்கள் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது வாரிசுதாரரைச் சேர்ப்பதற்கு பாலிசியின் விண்ணப்பத்தில் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தப் பகுதியில் உங்கள் மருமகளையும் பேரனையும் வாரிசாக நியமிக்கலாம். அத்துடன், உங்கள் மருமகளுக்கு எவ்வளவு சதவிகிதம், உங்கள் பேரனுக்கு எவ்வளவு சதவிகிதம் என்பதையும் குறிப்பிடலாம். உதாரணமாக, உங்கள் மருமகளுக்கு இழப்பீட்டுத் தொகையில் 60 சதவிகிதமும், உங்கள் பேரனுக்கு மீதமுள்ள 40 சதவிகிதமும் சேர வேண்டும் என்று குறிப்பிடலாம். உங்கள் பேரன் 18 வயதுக்கு உட்பட்டிருந்தால் பாதுகாவலர் பெயரைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.”

பி.கமலேசன், கே.எஸ்.கமாலுதீன், எஸ்.ஶ்ரீதரன்
பி.கமலேசன், கே.எஸ்.கமாலுதீன், எஸ்.ஶ்ரீதரன்

2012-ம் ஆண்டு ஒரு விவசாய நிலத்தை வாங்கினேன். நான் வாங்கியதற்கான கிரயப் பத்திரம் நோட்டரி கையெழுத்திடப்பட்டது. தற்போது அந்த நிலத்தை மீண்டும் நோட்டரி கிரயப் பத்திரம் முறையில் விற்கப் போகிறேன். இந்த விற்பனையில் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரிக்கழிவு பெற இன்னொரு நிலத்தில் முதலீடு செய்யலாமா?

தினேஷ், கோயமுத்தூர்-3

டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“நிலத்தின் விற்பனையிலிருந்து கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயத்தை வருமான வரிக் கணக்கில் காட்டுவதற்கும், நோட்டரி கிரயப் பத்திரத்துக்கும் தொடர்பில்லை. அந்த விவசாய நிலத்துக்கு உரிமை கேட்டு வேறொருவர் புகாரளித்தால்தான் அது குறித்துப் பரிசீலிக்கப்படும். ஒரு நிலத்தில் விவசாயம் செய்தால் மட்டும்தான் அது விவசாய நிலம் என்ற கணக்கில் வராது. அதற்கென சில வரையறைகளை அரசு வகுத்திருக்கிறது. அவற்றைப் பூர்த்தி செய்தால் மட்டும்தான் அது விவசாய நிலமாகக் கருதப்படும். நீங்கள் வைத்திருக்கும் நிலம் விவசாய நிலம் என்ற வகையில் வந்தால், அதை விற்றுவரும் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு முழுமையான வரிவிலக்கு உண்டு. விவசாய நிலமாக இல்லாதபட்சத்தில் அந்த மூலதன ஆதாயத்தை இன்னொரு விவசாய நிலத்தில் முதலீடு செய்தால், நீண்டகால மூலதன ஆதாய வரிவிலக்குப் பெறலாம்.”

டாக்டர்.கோபால்கிருஷ்ண  ராஜு, எஸ்.சிவராமன்
டாக்டர்.கோபால்கிருஷ்ண ராஜு, எஸ்.சிவராமன்

இறக்குமதி லைசென்ஸ் மற்றும் ஏற்றுமதிக்கான மானியம், சலுகைகள் ஆகியவற்றைப் பெறுவதற்காக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் விண்ணப்பிப்பதற்கு யாராவது பயிற்சியளிப்பார்களா... விண்ணப்பிக்கும் வழிமுறையைத் தெரிந்துகொள்வது எப்படி?

வசந்த், இ-மெயில் வழியாக...

எஸ்.சிவராமன், ஏற்றுமதி ஆலோசகர்

“ஏற்றுமதியாளர்களுக்கு அரசுத் தரப்பில் தரப்படும் மானியம் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் விண்ணப்பிக்க தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.  நீங்களே ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு dgft.gov.in இணையதளத்துக்குச் சென்று, அதில் `சர்வீசஸ்’ என்ற மெனுவழியாக online ECOM application என்ற மெனுவை கிளிக் செய்து, அதிலுள்ள ஹெல்ப் மெனுவில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம். உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால் ஏற்றுமதி ஆலோசகர்கள், ஆடிட்டரை அணுகி ஆலோசனை பெறலாம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள்

செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com