Published:Updated:

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

நல்ல இ.எஸ்.ஜி ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்துவந்தால், நீண்டகாலத்தில் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும்!

பிரீமியம் ஸ்டோரி

அண்மைக் காலத்தில் இ.எஸ்.ஜி (ESG) ஃபண்டுகள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. நீண்ட கால இலக்குக்கு அவற்றில் முதலீடு செய்யலாமா அல்லது ஏற்கெனவே இருக்கும் வேறு எந்த வகை ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

- சுரேஷ்குமார், மயிலாடுதுறை

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

‘‘இ.எஸ்.ஜி (ESG) என்பது சுற்றுச்சூழல், சமூக அக்கறை மற்றும் நல்ல நிர்வாகம் என்பதாகும். இ.எஸ்.ஜி மியூச்சுவல் ஃபண்ட், நீண்டகாலத்தில் இதர வகை மியூச்சுவல் ஃபண்டுகளைப் போல முதலீட்டு லாபத்தை வழங்கக் கூடும். அதே நேரத்தில், மேற்கூறிய மூன்று அம்சங்களையும் கூடுதலாகக் கொண்டிருப்பதால், நீண்டகாலத்தில் தொடர்ந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல இ.எஸ்.ஜி ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்துவந்தால், நீண்டகாலத்தில் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும்.”

நான் பங்குச் சந்தையில் சாவரின் தங்கப் பத்திரத்தை வாங்க விரும்புகிறேன். என் 1 வயது மகளுக்காக எனது முதலீட்டில் 10% ஒதுக்கீடு வைக்க விரும்புகிறேன். பங்குச் சந்தையில் வாங்கிய பின், ஒவ்வோர் ஆண்டும் 2.5% வட்டி கிடைக்குமா, பங்குச் சந்தையில் வாங்கிய இந்தத் தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா, பங்குச் சந்தையில் வாங்கிய இந்தப் பத்திரத்தை முதிர்வுக் காலத்தில் எப்படிப் பெறுவது?

- சா.ஸ்ரீதர், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

“தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கினாலும் சரி, அரசாங்கம் வெளியிடும்போது முதலீடு செய்யப்பட்டாலும் சரி, ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். ஒவ்வோர் ஆண்டும் கொடுக்கப்படுகிற வட்டித் தொகைக்கு வரி உண்டு. இந்தப் பத்திரங்களை வைத்து வங்கிகளில் அடமானக் கடன் பெற இயலும். பத்திரத்தின் முதிர்வுக்காலத்தில், பத்திரம் எங்கு வாங்கப்பட்டதோ, (தபால் நிலையமோ, வங்கிகளிலோ அல்லது பங்குச் சந்தையிலோ) அதே இடத்தில் கொடுத்தால், முதிர்வுத் தொகையை உங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிடுவார்கள்.

அரசாங்கம் வெளியிடுகிற தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து எட்டு வருடங்கள் வரை காத்திருந்து முதலீட்டுக்கான ஆதாயத்தைப் பெறுபவராக இருந்தால், தனிநபருக்கு மூலதன ஆதாய வரி விலக்கு உண்டு. பங்குச் சந்தையின் மூலம் இந்தத் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது, இதைப் பட்டியலிட்டப் பிறகுதான் வாங்க முடியும். அந்த வகையில், இந்தப் பத்திரத்தின் முழுமையான முதிர்வுக் காலமான எட்டு ஆண்டுகள், முதலீட்டுக் காலமாக இருக்க வாய்ப்பில்லாததால் மூலதன ஆதாய வரிவிலக்கு கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் 65 வயதான தந்தை, பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் மாதம் ரூ.10,000 கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

சையத் ரசூல், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

“உங்கள் தந்தை பி.எம்.வி.வி.ஒய் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் அவருக்கு ரூ.9,250 பென்ஷனாகக் கிடைக்கும்.

வீட்டின் கூரையை உயரமாக வைத்தால், வீடு நல்ல காற்றோட்டமாக இருக்குமா... இப்படிச் செய்யும்போது மின் விசிறிகளின் பயன்பாடு குறைவாக இருக்குமா?

- அ.செந்தில்குமார், திருச்செந்தூர்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

“கூரை உயரம் அதிகமாக வைக்கும்போது அறையின் வெப்பநிலை கணிசமாகக் குறையும். மேலும், அறையின் மேல்மட்டத்தில் வெப்பக்காற்று வெளியேறுமாறு சிறிய அளவிலான வென்டிலேட்டர்கள் அமைத்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.’’

ஷேர் டிரேடிங் கணக்கைப் பயன்படுத்தி எவ்வளவு காலம் டிரேடிங் எதுவும் செய்யவில்லை என்றால், அது ‘இன்ஆக்டிவ்’ ஆகும், அதை மீண்டும் எப்படிச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது?

- மகேஷ்வரன், பொன்மலை, திருச்சி

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

“தொடர்ந்து 12 மாத காலத்துக்கு எந்தவொரு பங்கு வர்த்தக நடவடிக்கையும் (வாங்குவது மற்றும் விற்பது) மேற்கொள்ளாவிட்டால், ஷேர் டிரேடிங் கணக்கு செயலற்றதாக மாறிவிடும். இந்தச் செயலற்ற நிலை, ஷேர் டிரேடிங் கணக்குக்கு மட்டும்தான்; டீமேட் கணக்குக்கு அல்ல. செயலற்ற கணக்கை பங்கு முதலீட்டாளர் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர, புதிதாக உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) கொடுக்க வேண்டும். பொதுவாக, நேரில் சென்று இந்த கே.ஒய்.சி நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். வெப் கேமரா மூலமும் ஆன்லைன் மூலமும் இ.கே.ஒய்.சி செய்யப்படும். ஷேர் டிரேடிங் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர எந்தவொரு கட்டணமும் கிடையாது.”

என் மகனின் மேல்படிப்புக்காகக் கல்விக் கடன் வாங்கலாமா அல்லது சுலபமாகக் கிடைக்கும் தனிநபர் கடன் வாங்கலாமா, எது நல்லது?

- மதன்குமார், தேனி

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? - வழிகாட்டும் ஆலோசனை

“கல்விக் கடனுடன் ஒப்பிடும்போது தனிநபர் கடனுக்கான வட்டி குறைந்தபட்சம் 0.25% முதல் அதிகபட்சம் 4% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வித்தியாசம், கடன் வாங்கும் மாணவர் மற்றும் பெற்றோரின் கிரெடிட் வரலாறு, சிபில் ஸ்கோர், வாங்கும் கடனுக்குக் கொடுக்கப்படும் சொத்து ஜாமீன் ஆகியவற்றைப் பொறுத்து மாறும். உதாரணத்துக்கு, 8.5% வட்டியில் 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக ரூ.5 லட்சம் கல்விக் கடன் வாங்கினால் மாதத் தவணை ரூ.10,258 ஆகும். கடன் தவணைச் சலுகை (moratorium) இல்லாதபட்சத்தில் வட்டியாக மட்டும் ரூ.1,15,500 கட்ட வேண்டிவரும்.

தங்கம்
தங்கம்

இதுவே, 9.5% வட்டியில், 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக ரூ.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மாதத் தவணை ரூ.10,500 ஆகும். கடன் தவணைச் சலுகை இல்லாதபட்சத்தில் வட்டியாக மட்டும் ரூ.1,30,056 கட்ட வேண்டிவரும். இது 1% வட்டி வித்தியாசத்தில் கிட்டத்தட்ட ரூ.15,000 கூடுதலாகக் கட்ட வேண்டியுள்ளது. இதுவே, தனிநபர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும்போது, அதிக தொகை வட்டிக்குச் செல்லும். தனிநபர் கடன்களை நீண்ட காலத்துக்கு அனுமதிக்க மாட்டார்கள்.

கல்விக் கடன் 8-10 ஆண்டுகளில்கூட திரும்பச் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், கல்விக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கு வரிச் சலுகை உள்ளது. 80 இ பிரிவின்கீழ் 8 ஆண்டுகள் வரைக்கும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. இதில், எவ்வளவு வட்டி என்றாலும் வரிச் சலுகை உண்டு. தனிநபர் கடனில் இந்தச் சலுகை கிடையாது. கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. எனவே, படிப்பு முடியும் வரைக்கும் தவணை சலுகைக் காலம் இருக்கக்கூடும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு