Published:Updated:

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் நாமினேஷனை எப்போது வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்ற முடியும்!

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் நாமினேஷனை எப்போது வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்ற முடியும்!

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர் இறந்துவிட்டால், புதிதாக ஒருவரை நாமினியாக நியமிக்க முடியுமா? அதற்கான நடைமுறை என்ன என்பதை விளக்கிச் சொல்ல முடியுமா?

சுரேஷ் லோகநாதன், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

‘‘நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர் இறந்துவிட்டால் புதிதாக ஒருவரை நாமினியாக நியமிக்க முடியும். முதலீட்டாளர்கள், தங்களது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் நாமினேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றவும் முடியும். நாமினேஷனை புதிதாகப் பதியவோ, மாற்றவோ, ஃபண்ட் நிறுவனங்களிடமிருந்து அதற்கான நாமினேஷன் படிவத்தைப் பெற்று புதிய நாமினேஷன் பெயர்களைப் பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருக்கும் எல்லா முதலீட்டாளர்களும் கையொப்பமிட்ட பின் ஃபண்ட் நிறுவனத்திடம் தர வேண்டும். அல்லது பூர்த்தி செய்த படிவத்தை கேம்ஸ் (CAMS) அல்லது கேஃபின் டெக் (KFinTech - பழைய கார்வி) நிறுவனத்துக்குத் தர வேண்டும். இரண்டு, மூன்று வாரங்களில் நாமினி மாற்றப்பட்ட விவரம் உங்களுக்கு இ-மெயில் அல்லது கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்படும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் வயது 30. என்னால் நடுத்தர அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும். மாதச் சம்பளம் வாங்கும் நான் 15 ஆண்டுகளுக்கு அதாவது, மிக நீண்டகால முதலீட்டு மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படித் தேர்வு செய்வது, எந்த வகை ஃபண்ட் பொருத்தமாக இருக்கும்?

முனிபாலா, முகநூல் மூலம்

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

‘‘நீண்டகால முதலீட்டுக்குச் செலவு குறைந்த மற்றும் சிறந்த வழி ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு இண்டெக்ஸ் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகும். யூ.டி.ஐ நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்டின் நேரடி திட்டத்தில் (UTI Nifty Index Fund- Direct) நீங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வயது 54. என் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்) கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது. நான் டெல்லியில் ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்கள் (2017 ஜனவரி வரை) வேலை பார்த்தேன். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த கம்பெனியை மூடிவிட்டார்கள். இப்போது யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. என் பி.எஃப் கணக்கில் ‘பணியில் சேர்ந்த தேதி’யும் சரியாகக் குறிப்பிடவில்லை. அதனால் என் பணத்தை எடுக்க முடியவில்லை. மற்றபடி என்னுடைய ஆதார் எண், பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது?

கே.வடிவேல், சென்னை - 37

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

‘‘உறுப்பினர் www.epfindia.gov.in என்ற வலைதளத்தில் தன் யூ.ஏ.என் (UAN) எண்ணைப் பெற்று, ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசியின் உதவியுடன் உறுப்பினர் பாஸ்புக் (Member Passbook) என்ற இணைப்பைத் தேர்வு செய்து, தன் பி.எஃப் சந்தா எப்போது தொடங்கியுள்ளது என்பதைப் பார்த்து ‘சேர்ந்த நாளை’ (Date of joining) தெரிந்துகொண்டு, பிறகு இணையதளம் மூலம் தன் பணத்தைப் பெற விண்ணப்பிக்கலாம். அப்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலவில்லை எனில், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளரிடம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்று டெல்லியில் உள்ள பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.’’

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

மிகக் குறுகியகால முதலீடு, குறுகியகால முதலீடு என்பது எவ்வளவு காலம்? இந்தக் காலகட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்கள் எவை?

மலர்விழி, பீளமேடு, கோயம்புத்தூர்

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

“மூன்று மாதங்களுக்கு உட்பட்ட முதலீடு மிகக் குறுகியகால முதலீடு எனப்படும். மூன்று மாதங்களுக்குமேல் ஓராண்டுக்கு உட்பட்ட முதலீடு குறுகியகால முதலீடு எனப்படும். மிகக் குறுகிய கால முதலீட்டில் லிக்விட் ஃபண்ட், 90 நாள்களுக்குள் முதிர்வு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்றவை வரும்.

குறுகியகால முதலீட்டில் 90 நாள்களுக்குமேல் 365 நாள் களுக்குள் முதிர்வடையும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் குறுகியகால மியூச்சுவல் ஃபண்டுகள் (அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட், லோ டியூரேஷன் ஃபண்ட்) போன்றவை வரும்.’’

ஒரு நாட்டில் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்பதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

அ.கலையரசி, மதுரை -2

கேள்வி பதில் : நாமினி இறந்தால் புதிய நாமினியை நியமிக்க என்ன வழி..? - ஒரு வழிகாட்டல்..!

“ஒரு நாட்டின் கிராமப் பொருளாதார வளர்ச்சி என்பது அவர்களின் வாங்கும் திறன் வளர்வதைப் பொறுத்தே அமையக்கூடும். இதைப் பங்குச் சந்தை கோணத்தில் அணுகினால், கிராமப் பொருளாதாரம் வளரும்போது, இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கூடும். அதுபோல், அதிவிரைவு நுகர்வோர் பொருள் (எஃப்.எம்.சி.ஜி) துறை வேகமாக வளரும். இதன் அடிப்படையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இந்த வகை துறைகளைச் சேர்ந்த பங்குகளைத் தேர்வு செய்வார்கள். மேலும், சரியான பருவமழை பெய்யும்போது, விவசாயம் சூடு பிடிக்கும். அப்போது டிராக்டர் மற்றும் விவசாய இடுபொருள்கள் விற்பனையும் கூடுவதற்கு வாய்ப்புண்டு. இந்த விற்பனை எண்களையும் கிராமப்புறப் பொருளாதாரம் மேம்படுவதற்கான அறிகுறிகளாகப் பார்க்கலாம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism