Published:Updated:

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நீங்கள் மாதாந்தர முறையில் முதலீடு செய்வதாக இருந்தால், உங்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுதான் ஏற்றதாக இருக்கும்.

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

நீங்கள் மாதாந்தர முறையில் முதலீடு செய்வதாக இருந்தால், உங்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுதான் ஏற்றதாக இருக்கும்.

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

ஐந்து ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ளூர் நகராட்சி அப்ரூவல் வீட்டு மனை வாங்கினேன். இந்த மனைக்கு இதுவரை பட்டா வாங்கவில்லை. பட்டாவுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

மதன், மதுரை

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

“உங்களுக்கு இந்தச் சொத்தை விற்ற நபர், அவர் பெயருக்கு ஏற்கெனவே பட்டா வைத்திருந்தால், அதைப் பெயர் மாற்றம் செய்வது சுலபம். சில நேரங்களில் உங்கள் மனையுடன் சேர்த்து மொத்தமாக இதர சொத்துகளுக்கும் கூட்டுப் பட்டா வழங்கப்பட்டிருக்கும். அப்படி இருப்பின், முதலில் உங்கள் கிரயப்பத்திரம், பழைய பட்டா, கள வரைபடம் (FMB sketch), சொத்தின் பேரில் வேறு வில்லங்கங்கள் எதுவுமில்லை என்ற சான்று (Encumberance Certificate) ஆகிய ஆவணங்களை இணைத்து, உங்கள் பெயரில் பட்டா வேண்டி ஒரு விண்ணப்பத்தை தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புல எண் பிரிவுக்கான (Sub Division) கட்டணம் செலுத்தி, அந்த ரசீதையும் இணைத்தால், உங்கள் சொத்தை கள ஆய்வு செய்து, உங்கள் பெயரில், உங்கள் சொத்துகான பட்டா வழங்கப்படும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டது. கடந்த மூன்றாண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இப்போது வருமானம் நெகட்டிவ்வாக இருக்கிறது. இந்த ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விட்டு வெளியேறிவிடலாமா?

- சுரேஷ்குமார், தூத்துக்குடி

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய எஸ்.ஐ.பி முதலீட்டில் வருமானம் தற்போது நஷ்டத்தில் உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 மியூச்சுவல் ஃபண்ட் கடந்த சில ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்படவில்லை என்பது உண்மைதான். இந்தக் காலகட்டத்தில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில பங்குகள் காரணமாக மட்டுமே பங்குச் சந்தை உயர்ந்துள்ளது. மீதமுள்ள சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. பல மியூச்சுவல் ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் குறியீட்டை வெல்ல போராடியது. நிதி மேலாளரான பிரசாந்த் ஜெயின், எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பினால், எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரலாம். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் வெளியேறினாலும், இந்தச் செயல்திறன் குறைபாடு இல்லாமல் முதலீடு செய்யக்கூடியது, சென்செக்ஸ் அல்லது நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன். இப்போது என்னால் இந்தியாவுக்கும் வரமுடியாது. இந்தியாவில் வீடு (சி.எம்.டி.ஏ அப்ரூவல்) என் பெயரில் உள்ளது. இந்த வீட்டை வீட்டுக் கடன் வாங்கி, கடனை அடைத்துவிட்டேன். என்‌ மனைவி இந்தியாவில் இருக்கிறார். நான் இந்தியா வராமல் வீட்டின்மீது அடமானக் கடன் பெறுவது எப்படி?

- வி.சுரேஷ், இ-மெயில் மூலம்

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

“நீங்கள் இந்தியாவுக்கு வராமலே வீட்டுக் கடன் வாங்க முடியும். வழக்கறிஞரின் அதிகாரம் (Notarized Authorising) வழக்கப்பட்டால் மற்றும் கடன் வாங்க உங்கள் மனைவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் (power of attorney) கடன் பெற முடியும்.”

யெஸ் பேங்க் பங்குதாரர்கள், தாங்கள் வைத்திருக்கும் மொத்த ஷேர்களில் 25% பங்குகளை மட்டும் விற்க முடியும். மீதம் 75% பங்குகளை மூன்று வருடங்கள் வரை விற்க முடியாது (லாக்-இன்- பீரியட்) எனத் தடைவிதித்துள்ளது. முதலீட்டாளர்களின் வர்த்தகச் சுதந்திரத்தில் தலையிட யெஸ் பேங்க் நிறுவனத்துக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கிறதா?

- கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

“முதலீட்டாளர்களின் பங்குகளை விற்கும் உரிமையைக் கட்டுப்படுத்த யெஸ் பேங்க்குக்கு எந்த அதிகாரமும் இல்லை. 100 பங்குகளுக்குமேல் வைத்திருக்கும் முதலீட்டாளர்களின் பங்குகளில் 75 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகள் விற்க முடியாது என்பது மத்திய அரசாங்கம் விதித்ததாகும். யெஸ் பேங்க் விலையில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்தவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதை மீறி அந்தப் பங்கு அண்மைக் காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்கின் விலை ஒரு நாளில் 60 சதவிகிதத்துக்கு விலை இறக்கம் கண்டிருக்கிறது. இன்னொரு நாளில், 30 சதவிகிதத்துக்குமேல் ஏற்றம் கண்டுள்ளது. 2020 மார்ச் 5-ம் தேதி ஒரே நாள் பங்கின் விலை 85% வீழ்ச்சி கண்டது. 2019 அக்டோபர் 31-ம் தேதி பங்கின் விலை 38% ஏற்றம் கண்டது. இதேபோல், பலமுறை அதிக ஏற்றமும் இறக்கமும் நடந்திருக்கின்றன என்பதால், இந்த மூன்றாண்டுக் கால லாக் இன் ஆகும். அதிக ஏற்றம் மற்றும் அதிக இறக்கம் என்பது பங்குச் சந்தை மற்றும் முதலீட்டாளருக்கு ஏற்றதல்ல. முதலீட்டாளர்கள், யெஸ் பேங்க், பங்குச் சந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இந்தத் தடை கொண்டுவரப்பட்டிருக்கிறது.”

என் வயது 30. மாதச் சம்பளம் பிடித்தம் போக ரூ.25,000. நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவன். இ.டி.எஃப் அல்லது இண்டெக்ஸ் ஃபண்ட் - இதில் எது எனக்கு ஏற்றதாக இருக்கும்?

- சக்தி, சென்னை-18

அப்ரூவல் வீட்டு மனைக்கு பட்டா..! - எப்படி வாங்குவது..?

“நீங்கள் மாதாந்தர முறையில் (SIP) முதலீடு செய்வதாக இருந்தால், உங்களுக்கு இண்டெக்ஸ் ஃபண்டுதான் ஏற்றதாக இருக்கும். அதில் உங்களால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து முழுப்பலனும் பெற முடியும். நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்தால் பரவலான முதலீடு செய்ததற்கு இணையாக இருக்கும். ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில் இந்த இண்டெக்ஸ் ஃபண்ட் கிடைக்கிறது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism