Published:Updated:

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

பிளான் அப்ரூவல்
பிரீமியம் ஸ்டோரி
News
பிளான் அப்ரூவல்

கணிசமான தொகுப்பு நிதியை உருவாக்க லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதே நல்லது!

என்னுடைய நண்பர் 10 ஆண்டுக்குமுன் சென்னை ராமாபுரத்தில் பழைய வீடு ஒன்று வாங்கினார். தற்போது அவருக்கு பணம் தேவைப்படுவதால் தன் பெயரில் உள்ள வீட்டை வங்கியில் அடமானம் வைக்க விரும்புகிறார். வீடு கட்டுவதற்கான அனுமதி (Plan Approval) சான்றிதழைக் கேட்கிறார்கள். அதை இப்போது எப்படி, யாரிடம் வாங்குவது என விளக்கவும்.

ஈஸ்வர், பெரம்பூர். சென்னை-11.

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

“வீடு கட்டுவதற்கான அனுமதி, அதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகள் எல்லாம் நாம் எந்த இடத்தில் வீடு கட்டுகிறோமோ, அந்தப் பகுதியை உள்ளடக்கியுள்ள உள்ளாட்சியின்கீழ் வரும். இங்கே உள்ளாட்சி என்பது மாநகராட்சி ஆகும். உங்கள் நண்பர் வீடு வாங்கியுள்ள ராமாபுரம் பகுதி சென்னை மாநகராட்சியின்கீழ் வருகிறது. எனவே, உங்கள் நண்பர் வசிக்கும் வீட்டுக்கு வழங்கப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதிச் சான்றிதழை (Plan Approval) சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட சான்றிதழ் பெறுவதற்கென உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் இந்தச் சான்றிதழ் பெற உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புதிய தனியார் நிறுவனம் ஆரம்பித்தால், எங்கு நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்?

லைஃப் ஆலோசகர் லயன், மதுரை

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

“நீங்கள் தனியாக ஒரு புது நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தால், அதைச் சில எளிய வழிகளில் பதிவு செய்யலாம். நீங்கள் தொடங்குவது தனி உரிமையாளரைக் கொண்ட (Sole proprietorship firm) நிறுவனமாக இருந்தால், உத்யோக் ஆதார் எண் சான்றிதழ் முறையில் நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்யலாம். மேலும் நாம் தொடங்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும், அதற்கு ஜி.எஸ்.டி சான்றிதழ் பதிவு செய்ய வேண்டும். அதில் இயல்பாகவே நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுவிடும்.

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

நீங்கள் தொடங்குவது பார்ட்னர்ஷிப் நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், சார்பதிவாளர் அலுவலகத்தில் நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்யலாம். ஒரு வழக்கறிஞர், ஆடிட்டர் அல்லது பிசினஸ் கன்சல்டன்டிடம் நீங்கள் ஆரம்பிக்கப்போகும் நிறுவனத்தைப் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அதில் ஈடுபட்டிருக்கும் உறுப்பினர்களின் பெயர்களைக் கூறி ஒரு டிராப்ட்டைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அந்த விவரங்களோடு பத்திரம் தயார் செய்து அதை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது உங்கள் நிறுவனத்தின் பெயருக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.

நீங்கள் தொடங்குவது பிரைவேட் லிமிடெட் கம்பெனி எனில், அதன் பெயரைப் பதிவு செய்ய அதற்கென தனிப் பத்திரம் இருக்கிறது. ஆலோசனை வழங்க ஆலோசகர்களும் இருக்கிறார்கள். அவர்களை அணுகி பெயர் பதிவுக்கான விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வயது 36. மகள் 4-ம் வகுப்பு, மகன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்கள். இரண்டு குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். நான் எந்த வகை முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்?

வி.ஹரிகுமார், இ-மெயில் மூலம்

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

“உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் அடிப்படையில், நீங்கள் முதலீட்டு வழிகளைத் தேர்வு செய்யலாம். உங்களுக்கு முதலீட்டுக் காலம் போதுமானதாக இருப்பதால், கணிசமான தொகுப்பு நிதியை உருவாக்க லார்ஜ்கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை நீங்கள் பரிசீலிக்கலாம். கல்வி இலக்கை அடைய நிலையான வைப்புத் தொகை மற்றும் தொடர் வைப்புக் கணக்கு போன்ற நிலையான வருமானத் திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கலாம். இது கல்வித் தேவைக்கான தொகையை அடைய சிறந்த வழியாகும். உங்கள் இலக்கை நெருங்கும்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான கடன் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்வது அவசியம்.’’

முத்திரைத் தாள்களை விற்பனை செய்வதற்கென்று ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றவா, அதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா, எங்காவது பதிவு செய்ய வேண்டுமா?

பிரபாகரன், இ-மெயில் மூலம்

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

‘‘முத்திரைத் தாள் விற்பனை செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. அதற்குரிய அனுமதி, அரசு விதித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தின் தேவையைப் பொறுத்து காலியிடம் இருப்பின் முறைப்படி விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பிப்பவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். கண் பார்வை தெளிவாக உள்ளவராக, நல்ல உடல்தகுதி கொண்டவராக உள்ளதற்கான அரசு மருத்துவச் சான்று அவசியம். தாசில்தார் வழங்கிய இருப்பிடச் சான்று, சொத்துச் சான்று தேவை. முத்திரைத் தாள் விற்பனையில் உங்களுக்குள்ள முன் அனுபவம் குறித்த தகவல். அதற்குண்டான சான்று, கல்வித் தகுதி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விதவைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முத்திரைச் சட்ட விதி 25(1)(சி)-யின்படி, முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கான பணியிடங்களை அரசு வழங்கும். இதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது செய்தித்தாள்களில் வெளிவரும். சமீபத்தில் ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கான காலியிடங்கள் குறித்த செய்திகள் வெளியாகின. முறைப்படியான சான்றுகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் ஆகலாம்.’’

என் வயது 58. என் தொகுப்பு நிதியாக ரூ.1 கோடி உள்ளது. இதை முதலீடு செய்து, மாதம்தோறும் எவ்வளவு தொகையை அல்லது எவ்வளவு சதவிகித தொகையை எடுத்து செலவு செய்தால் என் 70 வயது வரைக்கும் தொகை கிடைக்கும் எனக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா?

வி.முத்துக்குமார், மதுரை - 2

பழைய வீடு... பிளான் அப்ரூவல் வாங்குவது எப்படி? - நிபுணர் காட்டும் வழி...

‘‘உங்களின் தற்போதைய வயது 58. உங்களிடம் உள்ள பணம் ரூ.1 கோடி. நீங்கள் 70 வயது அடையும் வரை நிச்சயம் விலைவாசியானது ஒரே மாதிரியாக இருக்கும் எனக் கூற முடியாது. எனவே, விலைவாசி ஏற்றம் 6% வரை உயரும் என வைத்துக்கொள்வோம். மேலும், உங்களது பணத்தை நீங்கள் முதலீடு செய்யும்போது அந்த முதலீட்டின் மூலமாக உங்களுக்குக் கிடைக்கும் வட்டி 8% என வைத்துக்கொண்டால், நீங்கள் 70 வயது அடையும் வரை மாதம்தோறும் நீங்கள் ரூ.77,200-ஐ செலவு செய்ய வேண்டும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com