தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.

என்.சி.டி வெளியீடு!

பிரபல நிதி நிறுவனங்களில் ஒன்றான ஜே.எம் ஃபைனான்ஷியல், என்.சி.டி வெளியீடு மூலம் 100 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. முதலீட்டாளர்களிடமிருந்து இதற்கான வரவேற்பு நன்றாக இருக்கும்பட்சத்தில் கூடுதலாக ரூ.200 கோடியாக மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான என்.சி.டி-களை வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இந்த என்.சி.டி-களுக்கு மார்ச் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு என்.சி.டி-ன் விலை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முகமதிப்பு ரூ.1,000. குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000. 24 மாதங்கள், 40 மாதங்கள், 60 மாதங்கள் மற்றும் 120 மாதங்கள் என முதலீட்டுக் காலம் உள்ளது. `அதிகபட்ச வட்டி 10% கிடைக்கும்’ என்று இந்த நிறுவனம் சொல்கிறது!

ஹெல்த் இன்ஃபினிட்டி!

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘ஹெல்த் இன்ஃபினிட்டி’ என்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வரம்பற்ற காப்பீட்டுத் தொகையுடன் அறிமுகமாகியிருக்கும் முதல் பாலிசி என்பதால், மக்கள் இந்த பாலிசியின் மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்துவிதமான வியாதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

இந்த பாலிசியை ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு என எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாள் மருத்துவமனை அறை வாடகையாக ரூ.3,000 முதல் ரூ.50,000 வரை க்ளெய்ம் செய்ய முடியும். மேலும், இந்த பாலிசியின் மூலம் 60 நாள்களுக்கு முந்தைய மருத்துவமனை மருத்துவச் செலவுகள், 90 நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், ஆம்புலன்ஸ் செலவு ரூ.5,000 போன்றவற்றை க்ளெய்ம் செய்துகொள்ளலாம்.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘ஹெல்த் இன்ஃபினிட்டி’ பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் - சீரிஸ் 87 - 1156 நாள்கள் பிளான் டி’ (ICICI Prudential Fixed Maturity Plan - Series 87 - 1156 Days Plan D) என்ற ஃபண்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குளோஸ்டு எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு பிப்ரவரி 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இந்த முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்பதால், வயதானவர்கள் மற்றும் குறைந்த அளவு ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.

ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம்!

முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், புதிதாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. 3 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை கவரேஜ்கொண்ட பாலிசி இது. ஓராண்டு மற்றும் இரண்டாண்டுகளுக்கு என எடுத்துக்கொள்ள முடியும். ஓராண்டு பாலிசிக்கு ஒரு மாதமும், இரண்டாண்டு பாலிசிக்கு இரண்டு மாதங்களும் கருணைக் காலமாக இந்த பாலிசி வழங்குகிறது. இந்த பாலிசியின் மூலம் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளையும் க்ளெய்ம் செய்துகொள்ளலாம்.

யுனானி, சித்தா, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவச் செலவுகளுக்கும் இந்த பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசியின் மூலம் 60 நாள்களுக்கு முந்தைய மருத்துவமனை மருத்துவச் செலவுகள், 90 நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் ஆகிய செலவுகளையும் க்ளெய்ம் செய்துகொள்ளலாம்!