இதோ அடுத்த புது வருடம் பிறக்கக் காத்திருக்கிறது. இந்தப் புது வருடத்தில் முதலீட்டாளர்கள் ஐந்து புதிய உறுதிமொழிகளை அவசியம் எடுக்க வேண்டும். அவை இங்கே...

1) முதலீட்டுத் திட்டங்களைத் தீட்டுங்கள்!

இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் பலரும் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இப்போதும்கூடப் பலரும் `முதலீடு’ என்ற முக்கியமான விஷயத்தைத் தொடங்காமல் காலம் கடத்திவருகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ கடந்த காலத்தில் இந்தத் தவற்றை செய்திருக்கலாம். ஆனால், இனியும் நமக்கே நமக்கென தகுந்த முதலீட்டுத் திட்டம் இல்லாமல் இருக்கக் கூடாது.

முதலீட்டுத் திட்டம் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், உங்கள் சொந்த வீடு கனவு, உங்களின் ஓய்வுக்காலம் என எல்லாவற்றுக்குமான முதலீட்டை நீங்கள் எப்படி செய்துகொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் முதலீட்டுத் திட்டம். சிலருக்கு தங்கத்தின் மீது நாட்டம் இருக்கும். இவர்கள் தங்கள் முதலீட்டை தங்கத்திலேயே போடுவார்கள். இன்னும் சிலர், ரியல் எஸ்டேட்டில் அதிக ஆர்வம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அடுத்தடுத்து வீடு, மனை என்று வாங்கிக்கொண்டே இருப்பார்கள். முதலீடு எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது, நம் ஓய்வுக்காலத்துக்கு மனநிறைவான வருமானத்தைத் தருமா என்பதைப் பார்த்து செய்யும் முதலீட்டுத் திட்டம் நமக்கு வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டத்தை நாமே தீட்டுவதைவிட, நன்கு விஷயம் தெரிந்த ஒரு நிதி ஆலோசகரின் உதவியுடன் செய்துகொள்வது நல்லது.

2) எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குங்கள்!

நம் எதிர்காலத் தேவைகளைக் குறையில்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில், ஒரு விஷயத்தைக் கட்டாயமாக நாம் செய்தாக வேண்டும். அது, இளமையிலேயே சிறுகச் சிறுக முதலீடு செய்யத் தொடங்குவது. இப்படி முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உண்டு என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வது போன்ற அற்புதமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒருவர் 24 வயதில் எஸ்.ஐ.பி மூலம் சிறிய தொகையை முதலீடு செய்தால், ஓய்வுக்காலத்தில் பெரிய தொகையைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. எஸ்.ஐ.பி என்பதெல்லாம் நிறைய சம்பாதிப்பவர்களுக்குத்தான் என்றும் நாம் நினைக்க வேண்டியதில்லை. இன்றைக்கு 500 ரூபாயில் ஒருவர் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். இந்த எஸ்.ஐ.பி முதலீடு நீண்ட காலத்துக்கானதாக இருக்கும்போது, அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் வருமானமும் குறிப்பிடத் தகுந்ததாக இருக்கும் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.

3) ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. காரணம், யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதற்காக ஆகும் செலவும் மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவக் காப்பீடு இல்லையெனில், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இழந்துதான் உடல்நலத்தை சீராக்கிக்கொள்ள முடியும்.

இன்றைய தேதியில் பலருக்கும் எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது. ஒருவர் குறைந்த பட்சமாக ரூ.5 லட்சத்துக்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது அவசியம். அதேபோல குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்து பாலிசி எடுப்பதும் அவசியம்.

இன்றைய தேதியில் பலருக்கும் எவ்வளவு தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது.

4) டேர்ம் இன்ஷூரன்ஸை அவசியம் தேவை!

இன்ஷூரன்ஸ் எடுப்பது நம் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகத்தான் என்பதை இன்றைய தலைமுறையினர் நன்கு உணர்ந்திருந்தாலும், செலுத்தும் பிரீமியம் பணம் நமக்குத் திரும்பக் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை மட்டுமே நம்மில் பலரும் எடுத்திருக்கிறார்கள். எண்டோவ்மென்ட் பாலிசிகளைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் பிரீமியம் அதிகம். ஆனால், இழப்பீடாகக் கிடைக்கும் தொகை குறைவு. எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு பதிலாக ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பட்சத்தில், அதற்காக அவர் செலுத்தும் பிரிமீயம் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், கிடைக்கும் இழப்பீடு, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் நிதித் தேவைகளைக் கஷ்டப்படாமல் நிறைவேற்றிக்கொள்ள நிச்சயம் உதவும். இந்த ஆண்டிலாவது நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும் முடிவை எடுக்க வேண்டியது மிக அவசியம்.

5) அவசரகால நிதி இருக்கிறதா?

மருத்துவமனைச் செலவுகள், வேலையிழப்பு, நெருங்கிய உறவுகளுக்குத் தந்து உதவ வேண்டிய கட்டாயம் என திடீர் பணத் தேவைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்தத் தேவைகளைக் கஷ்டப்படாமல் நிறைவேற்ற நம்மிடம் அவசரகால நிதி இருக்க வேண்டும். ஒருவர் வாங்கும் மாதச் சம்பளத்தைப்போல ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டுக்குத் தேவையான தொகை அவசரகால நிதியாக வைத்திருப்பது அவசியம். இந்தப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, வங்கி எஃப்.டி., கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் வைத்திருக்கலாம்!

செலவுகளை கவனத்தில்கொள்ளுங்கள்!

- அஞ்சலி மல்ஹோத்ரா, அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ்

1. ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள்!

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அனைவரும் கடைப்பிடிக்க நினைக்கும் முக்கியமான குறிக்கோள். சத்தான நீராகாரங்கள், நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. நிதி இலக்குகளின் பட்டியலை உருவாக்குங்கள்!

புதிய ஆண்டுக்கான தீர்மானங்களை எடுக்கும்போது, தனிப்பட்ட நிதி இலக்குகளை வரையறுக்க வேண்டும். எந்த இலக்குக்கு எப்போது நிதி தேவைப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ப முதலீடு செய்யத் தொடங்குகள்.

3. செலவுகளை கவனத்தில்கொள்ளுங்கள்!

எல்லோரும் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான நிதி சார்ந்த முடிவு, பட்ஜெட் போடுவது. வரவிருக்கும் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்கூட்டியே தயாரிப்பதன் மூலம் பணம் எங்கு போகிறது, எவ்வளவு பணத்தை நாம் சேமிக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். நிதிரீதியாக வெற்றி பெற, பட்ஜெட் போடுவது மிகவும் அவசியம்.

4. கூடுதல் வருமானத்தை உருவாக்குங்கள்!

வரும் ஆண்டில் கூடுதல் வருமானம் ஈட்டும் வழிகளைத் தேடிக்கொள்ளுங்கள். வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் இப்போது நிறையவே இருப்பதால், நம் உழைப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஏற்ப பல வகைகளிலும் கூடுதல் வருமானம் பெறலாம். கூடுதல் வருமானத்துக்கான வழிகளை நாம் கண்டறியவில்லை என்றால், தேவையற்ற செலவுகளை நாம் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம்.

5. கடனில்லாமல் இருங்கள்!

கடனில்லாமல் இருப்பது போன்ற நிம்மதியான வாழ்க்கை வேறு எதுவும் இல்லை. நீங்கள்பட்ட கடனைப் பட்டியலிட்டு, அவற்றை எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைத்துவிடுவது நல்லது

தமிழில்: ஆ.வல்லபி