Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்?

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

10 பளிச் காரணங்கள்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்?

10 பளிச் காரணங்கள்!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

வாழ்வில் உத்வேகம் இருக்கும் அத்தனை பேருக்குமே ஏதாவது ஒருகட்டத்தில், `ஒரு பிசினஸ் தொடங்க வேண்டும்’ என்ற யோசனை வரும். உடனே ஒரு பிசினஸைத் தொடங்கி, அதில் வெற்றி பெறுவது வரை கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவோம். ஆனால், யதார்த்தத்தில் இருந்த இடத்திலேயேதான் இருப்போம். இந்த யதார்த்தத்துக்கும் கற்பனைக்குமான இடைவெளியை உடைக்கும் சிலர் மட்டுமே உண்மையில் தொழிலதிபர்கள் ஆகிறார்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்?

ஆனால், இன்றைய உலகில் `தொழிலதிபர்’ எனும் சொல் நீங்கள் தனியாளாக நின்று அடிக்கல் நாட்டித் தொடங்கிய ஒரு பிசினஸைக் குறிப்பதாக மட்டுமே இருப்பதில்லை. ஒரு பிரமாண்ட பிராண்டின் பங்காக இணைந்துகொண்டும் நீங்கள் சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தொழிலதிபராக மாற முடியும். ஒரு ஃப்ரான்சைஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான காரணம் இது. மேலும், பல காரணங்களையும் பார்க்கலாம்.

1. வெற்றி பெற்ற அமைப்பில் முதலீடு செய்கிறீர்கள்

வெற்றி பெறாத, யாருக்குமே அறிமுகமில்லாத ஒரு நிறுவனத்தில் ஃப்ரான்சைஸியாக மாற யாருமே முன்வரப் போவதில்லை என்பது நிதர்சனம். ஒரு பிராண்ட் எட்டியிருக்கும் வளர்ச்சியை வைத்து நீங்கள் அதன் ஃப்ரான்சைஸியாகலாம் என முடிவு செய்வீர்கள் அல்லவா... அப்படியெனில், அந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த நாள் வரை அதன் ஊழியர்கள் போட்ட உழைப்பை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் போகிறீர்கள். அந்த உழைப்புடன் உங்கள் முயற்சியும், உங்கள் க்ரியேட்டிவிட்டியும், உங்கள் சிந்தனைகளும் இணைந்து ஒரு வெற்றியை உங்களுக்குக் கொடுக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்?

2. கட்டுப்பாடுகள் இல்லாத வழிகாட்டுதல்!

உங்களுக்கு மேலே மேற்பார்வைக்கு ஒரு நபர் இருப்பார். அவர் உங்கள் பிராண்டின் நிறுவனராகவோ, சி.இ.ஓ-வாகவோ இருக்கலாம். ஆனால், ஒரு ஃப்ரான்சைஸின் தலைவராக நீங்கள்தான் இருப்பீர்கள். உங்களுக்குக் தரப்படும் வழிகாட்டுதல்கள் உங்கள் நிறுவனத்தின் மீதிருக்கும் உரிமையை மறுக்காதவையாகவே இருக்கும்.

3. நிதி உதவி பெறுவது எளிது!

சொந்தமாக பிசினஸ் தொடங்கப் போவதாக ஒரு பிரமாண்ட புளூ பிரின்ட்டுடன் நீங்கள் வங்கி வங்கியாக ஏறி இறங்கினால் கிடைக்காத வங்கிக் கடன், ஒரு குறிப்பிட்ட பிராண்டின் ஃப்ரான்சைஸியாக நீங்கள் மாறப் போகிறேன் என்று சொன்னால் கிடைக்கும். ஏனென்றால், அந்த பிராண்ட் உருவாக்கியிருக்கும் நம்பகத்தன்மை மற்றும் அந்த பிராண்டுக்கு இருக்கும் வருவாய் வரலாற்றை அடிப்படையாக வைத்து வங்கிகள் கடன் தரும் முடிவை எடுக்கின்றன.

ஃப்ரான்சைஸ் பிசினஸில் உங்கள் தாய் நிறுவனம், வணிக அறிவுரைகள் மற்றும் அனுபவப் பாடங்களை உங்களுக்குத் தாராளமாகத் தரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4. குறைந்த ரிஸ்க்

புதிதாக ஒரு ரெஸ்டாரன்ட்டைத் திறக்கும் ஐடியா உங்களுக்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இதுவரை இல்லாததுபோல, இத்தாலிய உணவுகளை குறைந்த விலையில் மக்களுக்குத் தர வேண்டும். `இத்தாலிய உணவகம்’ என்றாலே மேல்தட்டு மக்களுக்கான இடமாக இருக்கும் நிலையை மாற்ற, பாமர மக்களுக்காக ஓர் இத்தாலிய உணவகத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நினைப்பதெல்லாம் சரிதான்… ஆனால், உணவகத்தைத் தொடங்கிய பிறகு, இந்திய மக்களுக்கு இத்தாலிய உணவின்மீது பெரிய நாட்டம் இல்லை என்பது தெரிய வந்தால் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்!

franchising
franchising

அதற்கு பதிலாக ஃப்ரான்சைஸ் எடுப்பது சிறப்பு. ஏற்கெனவே ஒருவர் ரிஸ்க் எடுத்து செய்த ஒரு முயற்சி வெற்றி கண்டிருக்கிறது. அந்த வெற்றியின் ஒரு பங்காக நீங்களும் இயங்கலாம் என்பதால், குறைந்த அளவுதான் ரிஸ்க் இருக்கிறது.

5. உதவி மற்றும் ஆதரவு

சொந்தமாக பிசினஸ் தொடங்கும் ஒரு நடுத்தரவர்க்கத்து நபருக்கு யாரெல்லாம் ஆதரவாக, உறுதுணையாக இருப்பார்கள் தெரியுமா... குடும்பமும் நண்பர்களும்தான். ஆதரவு அளிப்பதுடன், முடிந்தால் பண உதவியும் செய்வார்கள். ஆனால், வணிகரீதியான அறிவுரைகள், அனுபவப் பாடங்கள் எல்லாம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. ஃப்ரான்சைஸ் பிசினஸைத் தேர்வு செய்யும்போது, உங்கள் தாய் நிறுவனம் வணிக அறிவுரைகளையும், அனுபவப் பாடங்களையும் உங்களுக்குத் தாராளமாகத் தரும்.

6. ஊழியர் பயிற்சி

நீங்கள் ஃப்ரான்சைஸியாகும்போது, உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்க ஒரு குழுவை அல்லது நிபுணரை ஃப்ரான்சைஸ் நிறுவனம் அமர்த்துகிறது. ஏனென்றால், இப்போது உங்கள் நிறுவனத்தில் இயங்கும் ஒவ்வொருவரின் செய்கையும், வாடிக்கையாளருக்கு பிராண்டின் செய்கையாகவே தெரியும். எனவே, பிராண்டின் நன்மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு ஃப்ரான்சைஸ் பிசினஸின் அடிநாதமாக இருப்பது... வணிக நடவடிக்கையை அடுத்த தலைமுறைக்கோ, அடுத்த நபருக்கோ வெற்றிகரமாக வார்த்துத் தருவதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. வெற்றி விகிதம்

சொந்தமாக பிசினஸ் தொடங்கும் நபர்களைவிட, ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்குபவர்கள் அதிக அளவு வெற்றி பெறுகிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ‘எது வெற்றி’ என்பதையே! ஃப்ரான்சைஸ் பிசினஸ் உங்களை பிரமாண்ட வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பது மறுக்க முடியாதது!

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

8. பல தலைமுறைகளுக்கான ஒரு பிசினஸ்!

ஒரு ஃப்ரான்சைஸ் பிசினஸின் அடிநாதமாக இருப்பது வணிக நடவடிக்கையை அடுத்த தலைமுறைக்கோ, அடுத்த நபருக்கோ வெற்றிகரமாக வார்த்துத் தருவதுதான். அப்படி இருக்கும்போது, உங்கள் உழைப்பில் கட்டி எழுப்பும் பிராண்டும், அதன் மதிப்பும், அதன் மூலமான வருவாயும் எளிதில் மறைந்துவிடாது! மாறாக, சொந்தமான வணிக முயற்சி என்பது அதன் நிறுவனரின் மறைவுக்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் காட்சி நமக்குப் பழக்கமானதாக இருக்கிறது.

9. உங்களுக்கான மனிதர்கள்!

ஒரு பிராண்டாக மாறும் நீங்களும், உங்கள் நிறுவனமும், சக ஃப்ரான்சைஸிகளும், தாய் ஃப்ரான்சைஸும் ஒரு குழுவாக இருப்பீர்கள். உங்களுக்கு வரும் அபாயங்களைத் தடுக்க அந்த மொத்தக்குழுவும் முயலும். அதேபோல, உங்கள் பிராண்டைப் பாதுகாக்க நீங்களும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பீர்கள். தங்களுக்கான மனிதர்களுக்கு மத்தியில், ஓர் இலக்குடன் பயணிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்?!

10. எல்லாம் உங்கள் வசதிதான்!

சின்ன வயதிலிருந்தே ஃபேஷனில் ஆர்வம் கொண்ட நீங்கள், இந்தியாவில் பிறந்த காரணத்தால் இன்ஜினீயரிங் படித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைத்து, அதுவே உங்கள் அடையாளமாகவும் ஆகிப்போகிறது. இப்போது உங்களுக்குத் தனியே ஒரு பாதை வேண்டுமென்றால், பத்து ஆண்டுக்காலம் உங்கள் வருவாய்க்கு வழியாக இருந்த தகவல் தொழில்நுட்பத்தில்தான் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு ஃபேஷன் நிறுவனத்தின் ஃப்ரான்சைஸியாக நீங்கள் மாறினால், ஃப்ரான்சைஸ் பிசினஸ் உங்களின் விட்டுப்போன கனவை மீட்டெடுக்கவும் அல்லது நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒரு கனவில் அடுத்தபடிக்குப் போகவும் உங்களுக்கு உதவும்.

இப்படி, ஃப்ரான்சைஸ் எடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இனி ஃப்ரான்சைஸ் தொடங்க இடம் தேடும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்துத் தொடர்ந்து பேசுவோம்!

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism