Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 12 - சரியான இடம்... தேர்வு செய்வது எப்படி?

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

வழிகாட்டும் டிப்ஸ்

ஃப்ரான்சைஸ் தொழில் - 12 - சரியான இடம்... தேர்வு செய்வது எப்படி?

வழிகாட்டும் டிப்ஸ்

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

ரு ஃப்ரான்சைஸ் பிசினஸை நீங்கள் தொடங்கும்போது எடுக்கும் சில முடிவுகள், அதை வளர்த்தெடுப்பதில் முக்கியமான பங்குவகிக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, ஃப்ரான்சைஸ் தொழில் செய்வதற்காக நீங்கள் தேர்வு செய்யும் இடம். உங்கள் ஃப்ரான்சைஸ் சிறப்பாக அமைய ஒரு நல்ல இடத்தை எப்படித் தேர்வு செய்வது... வழிகாட்டும் சில டிப்ஸ்...

ஃப்ரான்சைஸ் தொழில் - 12 - சரியான இடம்... தேர்வு செய்வது எப்படி?

ஃப்ரான்சைஸ் கான்செப்ட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!

ஓர் இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்னர், உங்கள் குறிப்பிட்ட ஃப்ரான்சைஸின் கான்செப்ட் என்னவென்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கான்செப்ட்டின் மையமாக இருப்பவர்கள், டார்கெட் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் எங்கிருக்கிறார்கள், எங்கு வேலை செய்கிறார்கள், எது அவர்களை நிறுவனத்தை நோக்கி வரச் செய்யும் என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஃப்ரான்சைஸ் கான்செப்ட்டையும், டார்கெட் வாடிக்கையாளரையும் புரிந்துகொண்டால் போதும்... ஒரு நல்ல இடத்தை எளிதாகத் தேர்வு செய்ய முடியும். ஒரு குக்கிராமத்தில் சென்று ட்ரெண்டியான துணிக்கடையையோ, ஒரு ஷாப்பிங் மாலில் காயலான் கடையையோ தொடங்க மாட்டீர்கள். உங்கள் ஃப்ரான்சைஸின் கான்செப்ட், நீங்கள் தேர்வு செய்யும் இடத்துடன் பொருத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஆய்வு செய்யுங்கள்!

ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்வதற்கு அடுத்த முக்கியமான படிநிலை, அந்த இடம் குறித்து ஆய்வு செய்வது. உங்கள் ஃப்ரான்சைஸுக்கான ஓரிடத்தைப் பார்க்கும்போது சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

அந்த இடத்துக்கு வந்து செல்வது எளிதாக இருக்கிறதா, பார்க்கிங் வசதி உள்ளதா, அதிகமாக உபயோகப்படுத்தப்படும் சாலைகளிலிலிருந்து அது பார்க்கும்படியான இடத்தில் இருக்கிறதா, பக்கத்தில் நம் ஃப்ரான்சைஸை போலவே வேறு யாராவது நடத்து கிறார்களா, நாம் தேர்வு செய்தி ருக்கும் இடத்தைவிட அவர் களிருக்கும் இடம் பல வசதிகளு டன் இருக்கிறதா என்பதை யெல்லாம் பாருங்கள். உங்களைப் போலவே, வேறொரு ஃப்ரான்சைஸ் கடை பக்கத்திலேயே இருக்கிறது என்பதால், நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், உங்களைத் தேடி வரும் வாடிக்கை யாளர்களை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி யிருக்கும்.

நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடத்தைச் சேர்ந்த மக்களைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் டார்கெட் வாடிக்கையாளர்களைத் தாண்டி, அந்த ஊரிலிருக்கும் மற்றவர்களின் விருப்பத்தை அறிந்துகொள்வதும் முக்கியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃப்ரான்சைஸரிடம் உதவி கேளுங்கள்!

உங்கள் ஃப்ரான்சைஸைத் தொடங்கும் இடத்தைப் பார்ப்பதற்கு உங்கள் ஃப்ரான்சைஸர் நிறைய உதவிகள் செய்ய முடியும். ஏனென்றால், ஃப்ரான்சைஸ்களுக்கு ஏற்ற இடம் எது என்பது குறித்து அவர்களுக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்கும். சில ஃப்ரான்சைஸர்களுக்கு ரியல் எஸ்டேட் தொடர்புகளும், சட்ட வல்லுநர் தொடர்புகளும் இருக்கும் என்பதால் இடம் தேர்வு செய்வது எளிதாகவும் நடக்கலாம்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

உங்களுக்கு சாதகமான ஒப்பந்தம்

உங்கள் ஃப்ரான்சைஸ் நிறுவனத்தைத் தொடங்க எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ, அதற்கான ஒப்பந்தத்தைப் புரிந்துகொள்வது கடினமானதாக இருக்கலாம். அந்தச் சமயத்தில் உங்கள் ஃப்ரான்சைஸர் அல்லது அவரின் சட்ட வல்லுநர் குழுவிடமிருந்து உதவி பெறுங்கள். அப்போது தான், பிற்பாடு உங்களைச் சிக்கலில் மாட்டிவிடக்கூடிய பல தவறுகளிலிருந்து தப்பிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெறும்போது உங்களுக்கு வசதியான ஒப்பந்தத்தைப் போட முடியவில்லையெனில், அந்த இடத்தை மறந்துவிடுங்கள்.

நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடம் பாதுகாப்பான இடம்தானா எனப் பார்க்க வேண்டியது மிக அவசியம்!

இடத்தின் எதிர்காலம்

ஒரு ஏரியாவில் ஃப்ரான்சைஸைத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், எப்படியும் விரிவுபடுத்துவதைப் பற்றி யோசிப்பீர்கள். அப்படி இருக்கும்போது, உள்ளூர் தலைவர்களுடன் தொடர்பில் இருங்கள். அந்த இடத்தில் வரப்போகும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், வரிகள், பிற எதிர்கால நிகழ்வு களெல்லாம் எப்படி உங்கள் ஃப்ரான்சைஸை பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிற பிசினஸ்கள் மற்றும் சேவைகள்!

முதலில் உங்கள் நிறுவனம் வரப்போகும் இடத்துக்குப் பக்கத்திலிருக்கும் பிசினஸ்களும், சேவைகளும் உங்களுக்கு ஏதாவது வசதியை உண்டாக்கிக் கொடுக் கின்றனவா என்பதைப் பாருங்கள். காரணம், அங்கே இருக்கும் பிசினஸ் மற்றும் சேவை நிறுவனங்கள் மூலம் உங்களுக்கான வாடிக்கை யாளர்கள் கிடைக்கக்கூடும். உதாரணமாக, நீங்கள் ஒரு ஸ்டேஷனரி கடையைத் தொடங்க நினைக்கிறீர்கள் என்றால், அதை ஒரு பள்ளிக் கூடத்தின் அருகில் தொடங்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மாணவர்கள் தான் உங்கள் முக்கிய வாடிக்கையாளர்கள். அதோடு, உங்கள் வாடிக்கை யாளர்களுக்கும், உங்கள் ஊழியர்களுக்கும் தேவைப் படும் வசதிகளெல்லாம் உங்கள் நிறுவனத்தின் பக்கத்தில் அமைந்திருக்க வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

முக்கியமான கேள்விகள்

ஃப்ரான்சைஸ் நிறுவனத்தைத் தொடங்கும் போது உங்களுக்கான சரியான இடத்தைத் தேர்வு செய்ய கீழே தரப்பட்டிருக்கும் கேள்வி களை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இவற்றுக்கான பதில் இல்லாமல், நீங்கள் இடத்தை உங்கள் ஃப்ரான்சைஸுக்காகத் தேர்வு செய்யவே கூடாது.

நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடத்தைச் சேர்ந்த உங்கள் டார்கெட் வாடிக்கையாளர்களைத் தாண்டி, மற்றவர்களின் விருப்பத்தை அறிந்துகொள்வதும் முக்கியம்.

1. உங்கள் வணிகத்துக்கேற்ற இடத்தில்தான் ஃப்ரான்சைஸ் தொடங்கப் போகிறீர்களா? 2. தேவையான அளவு இடம் இருக்கிறதா? 3. நீங்கள் போட்ட லே-அவுட் முழுமையடைகிறதா? 4. ஒரு கட்டடத்தை வாங்கப்போகிறீர்கள் அல்லது குத்தகைக்கு எடுக்கப்போகிறீர்கள் என்றால், அதில் ஏதாவது ரிப்பேர் வேலை இருக்கிறதா? 5. மின் விளக்குகள், குளிர்சாதன வசதிகளெல்லாம் போதுமானவையாக இருக்கின்றனவா? 6.ஒப்பந்தமும் வாடகையும் உங்களுக்குச் சாதகமானவையாக இருக்கின்றனவா? 7.நீங்கள் வாழும் இடத்திலிருந்து எளிதாக உங்கள் ஃப்ரான்சைஸ் லொகேஷனுக்கு எளிதாக வந்து செல்ல முடியுமா? 8. உங்கள் நிறுவனம் அமைத்திருக்கும் ஊரிலிருந்து உங்களுக்குத் தேவையான திறமை வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பார்களா? 9. உங்கள் விற்பனை, தேவைகளுக்கேற்ற மாதிரி மக்கள் நெருக்கம் இருக்கிறதா? 10. நீங்கள் தேர்வு செய்யும் இடம் உருவாக்க நினைக்கும் இமேஜை வளர்த்தெடுக்குமா? 11. நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடம் பாதுகாப்பான இடம்தானா? 12. பொதுப் போக்குவரத்து வசதிகள் தேவையான அளவுக்கு இருக்கின்றனவா?

இந்த கேள்விகளையெல்லாம் கேட்டு, அவற்றுக்கான பதில்களையும் பெறுங்கள். அப்போதுதான் தேர்வு செய்த இடத்தைப் பற்றிய தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். இனி, ஒரு ஃப்ரான்சைஸருக்குக் கொடுக்க வேண்டிய ராயல்டியைப் பற்றியும், அவர்களிடமிருந்து என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கலாம் என்றும் அடுத்த வாரம் பார்ப்போம்!

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism