Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 2 - ஃப்ரான்சைஸ்... பல வகைகளும் வழிமுறைகளும்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

தொழில்முனைவோருக்கான வழிகாட்டல்

ஃப்ரான்சைஸ் தொழில் - 2 - ஃப்ரான்சைஸ்... பல வகைகளும் வழிமுறைகளும்!

தொழில்முனைவோருக்கான வழிகாட்டல்

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

பெரிய நிறுவனத்திடமிருந்து உரிமம் வாங்கித் தொழில் செய்வதுதான் ஃப்ரான்சைஸ் என்று கடந்த இதழில் பார்த்தோம். ஃப்ரான்சைஸில் எத்தனை வகைகள் இருக்கின்றன, அவற்றைப் பெறும் முக்கியமான முறைகள் என்னென்ன என்பதையெல்லாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஜாப் ஃப்ரான்சைஸ் (Job Franchise)

வீட்டில்வைத்தோ, ஒரு சிறிய கடையை ஆரம்பித்தோ நம்மிடம் இருக்கும் பணத்தைக்கொண்டு ஃப்ரான்சைஸ் பெற நினைப்பவர்கள், ஜாப் ஃப்ரான்சைஸைப் பெறலாம். குறைந்த அளவிலான பொருள்கள், அலுவலகம்/கடை நடத்துவதற்கான இடம், அவசியமேற்பட்டால் வாகனம் போன்றவை இதற்குத் தேவைப்படும். ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்சி, மொபைல் ஷோரூம், ஐஸ்க்ரீம் கடை, ஈவன்ட் மேனேஜ்மென்ட் போன்றவை இதற்கு சில உதாரணங்கள்.

ஐயப்பன் ராஜேந்திரன் 
நிறுவனர், Strategizer Franchise Consulting Services
ஐயப்பன் ராஜேந்திரன் நிறுவனர், Strategizer Franchise Consulting Services

புராடக்ட்/டிஸ்ட்ரிபியூஷன் ஃப்ரான்சைஸ் (Product/Distribution Franchise)

இது சப்ளையர்-டீலர் முறையிலான தொழில்முறை. ஃப்ரான்சைஸி பெற்று, ஃப்ரான்சைஸரின் பொருள்களை விற்பனை செய்வதுதான் நம் வேலை. அல்லது ஃப்ரான்சைஸரின் பொருள்களை மொத்தமாகப் பெற்று, பல கடைகளுக்கு டிஸ்ட்ரிபியூஷனும் செய்யலாம். ஃப்ரான்சைஸரின் லைசென்ஸை வைத்துக்கொண்டு ஃப்ரான்சைஸி தொழிலை நடத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொழில்
தொழில்

மிக முக்கியமாக, இந்த வகை ஃப்ரான்சைஸில் லைசென்ஸ் மட்டுமல்லாமல் ஃப்ரான்சைஸரின் தயாரிப்பு முறையையும் தருகிறார். அதாவது, பெப்ஸி, கோக் போன்ற நிறுவனங்கள் தங்கள் லைசென்ஸுடன் அந்தப் பொருளைத் தயாரிக்கும் வழிமுறையையும் கொடுக்கிறார்கள். அழகுசாதனப் பொருள்கள், வாகனங்கள், கணினி, மின்னணுப் பொருள்கள் ஆகியவை இந்த வகையில் விற்கப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிசினஸ் ஃபார்மேட் ஃப்ரான்சைஸ் (Business Format Franchise)

இதில் ஃப்ரான்சைஸ் எடுப்பவர் ஃபிரான்சைஸரின் முத்திரையைப் பெறுவதுடன், தொழில் நடத்துவதற்கான மொத்த அமைப்பையும் பெற முடியும். அதாவது, எப்படித் தொழில் நடத்த வேண்டும் என்ற திட்டம் முதற்கொண்டு தேவையான பொருள்கள், மனிதவளம், அவற்றுக்கான பயிற்சிகள் என அனைத்திலும் ஃப்ரான்சைஸர் உதவுவார். அதாவது, குறிப்பிட்ட பொருளை மட்டுமல்லாமல், அந்தத் தொழிலின் மொத்த அமைப்பையும் நாம் ஃப்ரான்சைஸாகப் பெறுகிறோம். ஃபாஸ்ட் ஃபுட், உணவகம், ஃபிட்னெஸ் சென்டர் உட்பட எழுபதுக்கும் அதிகமான துறைகளில் இது போன்ற ஃப்ரான்சைஸைப் பெறலாம். மிகவும் பரவலாகச் செய்யப்படுவது, பிசினஸ் ஃபார்மேட் ஃப்ரான்சைஸ்தான். இதற்கு உதாரணமாக நேச்சுரல்ஸ், கிரீன் டிரெண்ட்ஸ் மற்றும் கேட் சென்டரைச் சொல்லலாம்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

இன்வெஸ்ட்மென்ட் ஃப்ரான்சைஸ் (Investment Franchise)

இதற்குப் பெரிய அளவிலான பொருள் முதலீடு தேவை. பெரிய ஹோட்டல்கள், உண வகங்களின் ஃப்ரான்சைஸ் இந்த முறையில்தான் பெறப்படுகிறது. ஃப்ரான்சைஸி ஒன்று தன் குழுவை வைத்து இந்தத் தொழிலை நடத்தலாம் அல்லது தான் ஒரு ஃப்ரான்சைஸராக இருந்துகொண்டு வேறொருவருக்கு ஃப்ரான்சைஸ் வழங்கலாம்.

பொருள் முதலீடு, ஃப்ரான்சைஸரின் திட்டம், அமைப்புமுறை, ஃப்ரான்சைஸர்-ஃப்ரான்சைஸி இடையிலான உறவு போன்றவற்றின் அடிப்படையில் ஃப்ரான்சைஸ்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் மேற்சொன்ன நான்கு வகைகளும் மிக முக்கியமானவை; பரவலாக நடைமுறையில் உள்ளவை. இனி இந்த ஃப்ரான்சைஸ்களைப் பெறும் வழிமுறைகள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம்.

சிங்கிள் யூனிட் ஃப்ரான்சைஸ் (Single Unit Franchise)

மிகவும் பரவலான, பிரபலமான, பல காலமாகப் பின்பற்றப்படும் ஃப்ரான்சைஸ் வழிமுறை இது. ஃப்ரான்சைஸர், தொழில் தொடங்கி, அதை நடத்தும் உரிமத்தை ஃப்ரான்சைஸியிடம் தருகிறார். ஃப்ரான்சைஸி அதற்குத் தேவையான பொருள் முதலீடு மற்றும் மேலாண்மைத் திறனைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் ஒரு ஃப்ரான்சைஸ் மட்டுமே பெற முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மல்ட்டி யூனிட் ஃப்ரான்சைஸ் (Multi-Unit Franchise)

ஃப்ரான்சைஸி வரலாற்றில், சிங்கிள் யூனிட் ஃப்ரான்சைஸி மற்றும் மல்ட்டி யூனிட் ஃப்ரான்சைஸி ஆகியவைதான் அடிப்படை முறைகளாக இருந்தவை. இவற்றில், மல்ட்டி யூனிட் முறை 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, அபார வளர்ச்சியைச் சந்தித்துவருகிறது.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஒரு ஃப்ரான்சைஸி, குறிப்பிட்ட ஃப்ரான்சைஸ ரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட ஃப்ரான்சை ஸ்களைத் தொடங்க முடியும். குறிப்பிட்ட கால வரையறைக்குள், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட ஃப்ரான்சைஸ் களை நிறுவ வேண்டும். பல ஃப்ரான்சைஸ்களை ஒரே நேரத்தில் சமாளிக்கத் தேவையான பொருளாதாரம், மனிதவளம், மேலாண்மைத் திறன் ஆகியவை ஃப்ரான் சைஸியிடம் இருக்க வேண்டும். சிங்கிள் யூனிட் ஃப்ரான்சை ஸிக்கு என ஒரு இடம் இருந்தா லும்கூட, மல்ட்டி யூனிட் ஃப்ரான்சைஸி தொடர்ந்து பெரிய தாக்கத்தை உண்டாக் கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.

ஏரியா டெவலப்மென்ட் ஃப்ரான்சைஸ் (Area Development Franchise)

மல்ட்டி யூனிட் ஃப்ரான்சைஸைப்போலவே, ஒன்றுக்கு மேற்பட்ட ஃப்ரான் சைஸ்களை குறிப்பிட்ட கடைகளில், குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். ஜிம்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏரியா டெவலெப்மென்ட் ஃப்ரான்சைஸில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ‘சப்வே’ (Subway) நிறுவனம் இந்தப் பிரிவில்தான் இயங்குகிறது.

ஃப்ரான்சைஸ்
ஃப்ரான்சைஸ்

மாஸ்டர் ஃப்ரான்சைஸ் (Master Franchise)

ஃப்ரான்சைஸர் ஒருவர் ஒரு நாட்டில், ஒரு பகுதியில் ஒருவரை மாஸ்டர் ஃப்ரான்சைஸியாக நியமிப்பார். மாஸ்டர் ஃப்ரான்சைஸி தனக்குக் கீழ் சப்-ஃப்ரான்சைஸ் கொடுப்பார். மாஸ்டர் ஃப்ரான்சைஸி, ஃப்ரான்சைஸராகச் செயல்பட்டு, பிற ஃப்ரான்சைஸிகளைத் தேர்வு செய்வார்.

சரியான கவனம் இல்லாதபட்சத்தில் ஒரு பிராண்டின் தரத்தை முற்றிலும் குறைத்துவிடும் அபாயம் உள்ளது!

மாஸ்டர் ஃப்ரான்சைஸில் இயங்கும் பல நிறுவனங்களை நீங்கள் தினசரி வாழ்க்கையில் கடந்துகொண்டிருக்கிறீர்கள். ஷாப்பிங் மாலுக்கு போகும்போதெல்லாம் உங்கள் வீட்டு வாண்டுகள் உங்களை இழுத்துச் செல்லும் கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ் போன்றவை மாஸ்டர் ஃப்ரான்சைஸிதான். விரைவான வளர்ச்சி மற்றும் ஆதாரபூர்வமான வழிகளில் ஃப்ரான்சைஸி பாதுகாக்கப்படுவது இதிலிருக்கும் பயன்கள்.

மேலும், தனக்கு உட்பட்ட எல்லையில் ஓர் அடிப்படை புரிந்துணர்வு அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், இவ்வளவு வழிமுறைகளைக்கொண்டிருக்கும் இந்த முறை, ஒரு முறையான நிர்வாக அனுபவமுள்ள நபரால் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சரியான கவனம் இல்லாதபட்சத்தில் ஒரு பிராண்டின் தரத்தை முற்றிலும் குறைத்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், மாஸ்டர் ஃப்ரான்சைஸ் போன்ற ஒரு வழிமுறையில் மேலும் ‘FDD’ (Franchise Disclosure Document) போன்ற அதிகாரபூர்வ செயல்பாடுகளும் இருக்கின்றன. இந்த முறையில் ஃப்ரான்சைஸர், ஃப்ரான்சைஸி இருவரும் ஃப்ரான்சைஸ் முன் அனுபவமுள்ள வழக்கறிஞர் மூலம் தங்கL ஆவணங்களை அரசு விதிகளின்படி சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஃப்ரான்சைஸ் பிசினஸில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism