Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

ரு நிறுவனத்திடமிருந்து ஃப்ரான்சைஸ் பெறுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய சில சட்டரீதியான வழிமுறைகள் இருக்கின்றன. ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் என்பது ஒரு ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் இடையில் நடைபெறும் ஆவணப்பூர்வமான புரிந்துணர்வு நடைமுறை. ஏற்கெனவே சந்தையில் நற்பெயரையும் தனக்கென ஒரு தனித்தன்மையும் அடைந்துவிட்ட ஒரு நிறுவனம் தன் முத்திரையை, தனது உற்பத்திப் பொருள்களை புதிய ஃப்ரான்சைஸிகளுக்கு வழங்கும்போது இது போன்ற ஓர் ஒப்பந்தம் மிக அவசியமானது. இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட சில வருட காலங்களுக்கு மேற்கொள்ளப்படும். இதில் ஒரு ஃப்ரான்சைஸர், தன்னுடைய ஃப்ரான்சைஸிக்கு என்னென்ன வசதிகளை ஏற்படுத்தித் தருவார் என்பதும், ஒரு ஃப்ரான்சைஸரிடமிருந்து ஃபிரான்சைஸி எதிர்ப்பார்ப்பது என்ன என்பதும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். இதில் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

எஃப்.டி.டி.

எஃப்.டி.டி (FDD - Franchise Disclosure Document) என்று சொல்லப்படும் இந்த ஒப்பந்தம், ஃபிரான்சைஸி முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்வதற்காகக் குறிப்பிட்ட சில நாள்களுக்கு முன்னரே அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். ஒரு வழக்கறிஞரின் முன்னிலையில் ஃப்ரான்சைஸர், ஃபிரான்சைஸி இருவரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள்.

இதிலிருக்கும் சிக்கல் என்னவென்றால், ஒப்பந்தம் ஒரு வழக்கறிஞரின் முன்னிலையில் நடைபெறும்போது, ஏற்கெனவே வேறொரு நிறுவன ஒப்பந்தத்தின் நகலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஃபிரான்சைஸியாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில்தான் நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகளைப் பெற முடியும்; பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் பயனளிப்பதாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு நாட்டுக்கும் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் மாறுபடும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தத்தில் முதன்மையாகக் குறிப்பிடப் பட்டிருக்கும் அம்சங்கள் இங்கே...

■ பிரான்சைஸரால் வழங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள்.

■ தேவைப்பட்டால் பிரத்யேகமான பொருள்களை ஃப்ரான்சைஸரிட மிருந்து ஃப்ரான்சைஸி பெறுவதற்கான அனுமதி.

■ ஃப்ரான்சைஸரின் நிபந்தனைகளுக்கேற்ப நடந்துகொள்ளும் ஒப்புதல்.

■ முறையான கணக்குவழக்குகள் பராமரிப்பதற்கான நடைமுறை.

■ தேவைப்படும்பட்சத்தில் பொருள்களை ஃப்ரான்சைஸர் பார்வையிடுவதற்கான ஒப்புதல்.

■ ஃப்ரான்சைஸிக்கு வழங்கப்படும் உரிம ஆவணங்களைப் பராமரித்தல்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

ஃப்ரான்சைஸி என்பவர் யார்?

ஒரு நிறுவனத்திடம் ஃப்ரான்சைஸ் பெறும் ஒருவர், அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஓர் உட்பிரிவு மட்டுமே. இவர் அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவோ அதன் பார்ட்னராகவோ கருதப்பட மாட்டார். ஒரு ஃப்ரான்சைஸர் ஃப்ரான்சைஸிக்குத் தன் உற்பத்திப் பொருளையும், தன்னுடைய பிராண்டையும் பயன்படுத்த அளிக்கும் அனுமதி என்பது ஓர் அங்கீகாரம் மட்டுமே.

ஃப்ரான்சைஸரின் எதிர்பார்ப்புகள்

ஃப்ரான்சைஸர் தன் பிராண்டுக்கான சின்னம், உரிமம் ஆகியவற்றை வழங்கினாலும் அவற்றின் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் அவரே வைத்திருப்பார்.

தெளிவான வியாபார உத்திகள் தெரிந்தவர்கள் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் கையொப்பமாகும்போதே அடிப்படைச் சிக்கல்களைப் பேசித் தீர்த்துவிட முடியும்!

ஒரு ஃப்ரான்சைஸர் ஃப்ரான்சைஸியிடம் எந்த மாதிரியான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார் என்பதும், இக்கட்டான நிலைகளில் அவருக்கு நிறுவனம் எந்த அளவுக்கு ஆதரவளிக்கும் என்பதும் இதன் அடிப்படை நோக்கம். ஆனால், ஃப்ரான்சைஸியின் தொழிலுக்கு உட்பட்ட அன்றாட நிகழ்வுகளின் மேல் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் ஃப்ரான்சைஸர் விதிக்க மாட்டார்.

ஃப்ரான்சைஸிங் கட்டணம்

ஒரு நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் அதன் விளம்பரப் பயனைப் பெறும் ஃப்ரான்சைஸி ஒரு குறிப்பிட்ட தொகையை ஆரம்பத்திலும், பிறகு மாதா மாதம் அல்லது வருடந்தோறும் செலுத்த வேண்டும். அந்தத் தொகை ஃப்ரான்சைஸர் மற்றும் ஃப்ரான்சைஸிக்கு இடையே முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். மேலும், முன் அனுபவம் இல்லாத நபர்களுக்கு நிறுவனம் தன் சார்பிலேயே பயிற்சி அளிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடவசதி

பெரும்பாலான நிறுவனங்கள் ஃப்ரான்சைஸி களுக்கான வியாபார எல்லையை நிர்ணயிப்பதில் தலையிடுவதில்லை. ஃப்ரான்சைஸிகளுக்குத் தொழில் செய்யும் இட எல்லைகளைத் தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. அந்த எல்லைக்குள் மட்டுமே தான் பெற்றுள்ள உரிமத்துக்கான பிராண்டை அவர் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், தான் தேர்வு செய்திருக்கும் இடத்துக்கான ஒப்புதலை ஃப்ரான்சைஸி, ஃப்ரான்சைஸரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தன் அலுவலகத்தையோ பணியிடத்தையோ ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அமைத்துக்கொள்ள வேண்டும். இது கட்டாயமில்லை என்றாலும் சில ஃப்ரான்சைஸர்கள் இடத்தைப் பார்வையிட விரும்புவார்கள். மேலும், ஃப்ரான்சைஸி பொருள்களை விற்பதற்குத் தேவையான விளம்பரங்களை ஃப்ரான்சைஸர் ஏற்படுத்தித் தந்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வார்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

இணைய வசதி

ஃப்ரான்சைஸி தான் உரிமம் பெற்ற பொருள்களை இணையத்தில் விற்பனை செய்ய விரும்பினால், அதற்கான இணைய விளம்பரங்களையும் ஃப்ரான்சைஸரே ஏற்படுத்தித் தருவார்.

நஷ்டத்துக்கான பொறுப்பு

பெரும்பாலான நேரங்களில் பொருள்களின் கழிவில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய ஃப்ரான்சைஸியே பொறுப்பேற்றுகொள்ள வேண்டியிருக்கும். இதனால் ஃப்ரான்சைஸிக்கு பெரும் நஷ்டம் ஏற்படலாம். எனவே, ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்னரே கழிவுகளால் ஏற்படும் நஷ்டத்துக்கான பொறுப்பை முழுக்க முழுக்க ஃப்ரான்சைஸர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஃப்ரான்சைஸி உறுதியாக இருக்க வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

சமநிலை

ஒரு நிறுவனத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃப்ரான்சைஸிகள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பிராண்டைப் பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படலாம். அதனால் தனக்குக்கீழ் இயக்கும் வெவ்வேறு ஃப்ரான்சைஸிகளுக்கு இடையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் ஆதரவையும் தருவதற்காக இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது.

ஒரு வளர்ச்சியடைந்த நிறுவனத்துடனான ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் பெரும்பாலான நேரங்களில் பெரிய அளவில் ஃப்ரான்சைஸிக்குச் சாதகமாக இருக்காது.

பொருள்களில் மாற்றங்களைச் செய்யும் உரிமை

ஃப்ரான்சைஸ் ஒப்பந்தங்கள் குறைந்தபட்சம் 5 - 10 ஆண்டுகளுக்கு முடிவு செய்யப்படுவதால், ஒப்பந்தம் கையொப்பமிடப்படும்போதே இடைப்பட்ட காலங்களில் மாற்றங்களைச் செய்துகொள்ளும் உரிமையை ஃப்ரான்சைஸர் ஃப்ரான்சைஸிக்கு விளக்கிவிட வேண்டியது அவசியம். ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்துக்குள் தன் உற்பத்திப் பொருள்களின் விலை அல்லது அவற்றின் தயாரிப்பு முறை அல்லது வேறு ஏதாவது மாற்றங்களை ஃப்ரான்சைஸர் செய்ய விரும்பினால் அதற்கான முழு உரிமை அவருக்கு இருக்கிறது. இதற்கான ஒப்புதலை ஃப்ரான்சைஸியிடமிருந்து நிறுவனம் முறையே பெற்றிருக்கும்.

ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுதல்

ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் இடையில் ஓர் இணக்கமான உறவு நீடிக்கும்பட்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக ஃப்ரான்சைஸி மறுபடியும் ஒரு புது ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டியிருக்கும்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...

இவை தவிர, ஒரு ஃப்ரான்சைஸி பின்வரும் மாற்றங்களையும் எதிர்ப்பார்க்கலாம்.

■ ஃப்ரான்சைஸர் நிறுவனத்தின் விதிமுறைகள் மாறியிருக்கலாம்.

■ முந்தைய முறையைப்போல் அல்லாமல் ஃப்ரான்சைஸருக்குச் செலுத்தும் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

■ ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தனியாகக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

■ சென்ற முறை ஃப்ரான்சைஸிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ■ ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்படலாம்.

ஒவ்வொரு வருடமும் பல ஃப்ரான்சைஸ் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன.பல ஃப்ரான்சைஸ் ஒப்பந்தங்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. ஃபிரான்சைஸில் பெரும் லாபத்தைச் சம்பாதிக்க முடியும் எனக் கண்மூடித்தனமாக நம்பியவர்கள் பலர், பின்னர் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்துக்கு முன்னதாகவே ரத்து செய்ய நேர்ந்திருக்கிறது.

ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முழு உரிமையும் ஃப்ரான்சைஸருக்கு உண்டு. நிறுவனத்தின் பிராண்டைத் தவறாகப் பயன்படுத்தினாலோ, நிறுவனத்தின் அனுமதியின்றி உரிமத்தைப் பிறருக்கு மாற்றிவிட்டாலோ அல்லது நிறுவனத்துக்கு முறையாக செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தத் தவறினாலோ ஒரு ஃப்ரான்சைஸ் இடைக்காலத்திலேயே ரத்து செய்யப்படும். ஃப்ரான்சைஸர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்தால், ஒரு வாரத்துக்கு முன்னரே அதற்கான அறிக்கையை ஃப்ரான்சைஸியின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஃப்ரான்சைஸ் சிலருக்கு எளிதில் முன்னேறக்கூடிய ஒரு வழியாகத் தோன்றலாம். ஒரு வளர்ச்சியடைந்த நிறுவனத்துடனான ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் பெரும்பாலான நேரங்களில் பெரிய அளவில் ஃப்ரான்சைஸிக்குச் சாதகமாக இருக்காது. ஏனென்றால், அது முற்றிலும் ஃப்ரான்சைஸரின் நலனையும் நஷ்டத்தையும் தவிர்க்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட ஒன்று.

ஃப்ரான்சைஸ் தொழிலில் சில சிக்கல்கள் இருந்தாலும், ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைப்போல் அது இருக்காது. தெளிவான வியாபார உத்திகள் தெரிந்தவர்கள் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் கையொப்பமாகும்போதே இந்த அடிப்படைச் சிக்கல்களைப் பேசித் தீர்த்துவிட முடியும். மேலும், ஒரு ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் இடையில் இருக்கும் நன்னம்பிக்கையும் மிக முக்கியமானது.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism