Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

முக்கியமான 4 பிரிவுகள்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

முக்கியமான 4 பிரிவுகள்!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

நாம் ஒரு தொழிலை முன்னெடுத்து நடத்துவது வருமானத்துக்காகத்தான். எந்தத் தொழில் தொடங்கவும் முதலீடு மிக அவசியம். உங்கள் தொழிலில் நீங்கள் செலவிடுவது பணத்தை மட்டுமல்ல; நேரத்தையும் திறமையையும் செலவிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஃப்ரான்சைஸ் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் அதற்குத் தேவையான முதலீட்டை மூலதனம், செயல்பாட்டுச் செலவுகள், ஃப்ரான்சைஸர் கட்டணம், உரிமக் கட்டணம் என நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது மிக முக்கியம். இனி இந்த நான்கு விஷயங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

மூலதனம்

ஒரு நிறுவனத்திடம் ஃப்ரான்சைஸ் பெறும்போது தொழிலைத் தொடங்க உங்களுக்குத் தேவைப்பட்ட முதலீட்டை முறைப்படி தெரிவிக்க வேண்டியது அவசியம். எந்த மாதிரியான ஃப்ரான்சைஸ் தொடங்கப்போகிறோமோ அதற்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், இடவசதி, விளம்பரங்கள் ஆகியவை முதன்மையானவை. நீங்கள் முதன்முறையாக ஃப்ரான்சைஸ் தொடங்குகிறீர்கள், போதிய அளவுக்கான அனுபவம் இல்லை எனும் பட்சத்தில் அனுபவமிக்க ஒருவரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. கூடுதல் நேரத்தை ஒதுக்கி, சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ளக் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

இடம்: ஒரு நிறுவனத்திடமிருந்து ஃப்ரான்சைஸ் பெற்ற பிறகு, குறிப்பிட்ட சில நாள்களுக்குள் தொழில் செய்வதற்கு நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். நீங்கள் தேர்வுசெய்யும் இடத்தில் உங்கள் பொருள்களுக்கான மதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். சிலர் தங்கள் சொந்த இடத்தில் தொழில் தொடங்குவார்கள். அந்த இடத்தில் போதிய வாய்ப்புகள் இல்லாதிருந்தால், அது மேலும் சிக்கல்களையே உருவாக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள்: உங்கள் கடையையோ, அலுவலகத்தையோ வடிவமைப்பதில் உங்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. உங்கள் தொழிலுக்கு நீங்கள் ஓர் இடத்தை வாடகைக்கு அல்லது லீஸுக்கு எடுத்துக்கொள்ளலாம்.அதிகப்படியான முதலீடு இருக்கும்பட்சத்தில் சிலர் இடத்தைச் சொந்தமாக அமைக்க விரும்பலாம். இதில் இருக்கும் ஒரு நன்மை என்னவென்றால், ஆரம்பத்தில் ஒரு மொத்தத் தொகையை மட்டும் செலவிட்டால் போதும், பிற்பாடு பெரிய செலவு எதுவும் இருக்காது. உதாரணமாக, ஒரு ரெஸ்ட்டாரென்ட்டுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் உபகரணங்கள் கணினி, பில்லிங் இயந்திரம், ஃபர்னிச்சர். இவற்றை வாங்கவும் பொருத்தவும் ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும்.

விளம்பரங்கள்: உங்கள் இருப்பை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் முதன்மையானது. பெரும்பாலான நேரங்களில் உங்கள் தொழிலுக்கான விளம்பரத்தை நீங்கள் ஃப்ரான்சைஸ் பெறும் நிறுவனமே செய்துதரும். அதற்கான கட்டணத்தை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும். தவிர, உங்கள் கடை அல்லது அலுவலகத்தின் விளம்பரத்தை நீங்கள் தனிப்பட்ட செலவில் செய்துகொள்ளலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செயல்பாட்டுச் செலவுகள்

முந்தைய செலவுகள் உங்கள் தொழிலை அமைக்கத் தேவைப்பட்டவை மட்டுமே. ஒரு நிறுவனமாகச் செயல்பட தொடங்கிய சில வருடங்கள் கழித்துதான் நம் வருமான சதவிகிதத்தைக் கணக்கிட முடியும். அதுவரை நம் தொழில் நிலைத்திருப்பதைத் தீர்மானிக்கக் கூடியவை செயல்பாட்டுச் செலவுகள். இதற்காக நம்மிடம் எப்போதும் ஓர் இருப்புத் தொகை இருக்க வேண்டியது அவசியம். இதை, `வொர்க்கிங் கேப்பிட்டல்’ (Working Capital) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பல்வேறு அன்றாடச் செலவுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை...

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

மின்சாரம்: இது தவிர்க்க முடியாத செலவு. ஒரே ஒரு திரைகொண்ட ஒரு திரையரங்கின் மாத மின் கட்டணம் எவ்வளவு இருக்கும்... கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய். இது போன்ற செலவுகளைச் சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

பணியாள்களின் ஊதியம்: தனிநபராக ஒரு தொழிலை முன்னெடுக்க முடியாது. ஒரு கூட்டியக்கத்தின் மூலமாகத்தான் ஒரு தொழிலை வளர்த்தெடுக்க முடியும். தகுதியான வேலையாட்களை அமர்த்தி, முறையான சம்பளம் வழங்க வேண்டியது அவசியம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

வாடகை: முன்பு சொன்னதுபோல் சொந்தமாக இடம் இல்லாதபட்சத்தில் வாடகைச் செலவு தவிர்க்க முடியாதது.

இதர செலவுகள்: இவை பெரும்பாலும் நாம் முதன்மையாகக் கருத்தில்கொள்ளாத செலவுகள். ஆனால், நம் மொத்த வருமானத்தில் முக்கியப் பங்குவகிப்பவை. சின்ன சின்ன நிகழ்வுகளில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ரூபாயும் நம் முதலீட்டின் ஒரு பங்குதான். எதிர்ப்பாராத இயந்திரக் கோளாறுகளுக்கு ஆகும் செலவுகள், சரக்கை நம்மிடம் கொண்டு வர ஆகும் போக்குவரத்துச் செலவுகள், அவற்றுக்கெனத் தனியாக இருக்கும் வரிகள், செய்யும் தொழில் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்துக்காக வருடத்துக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் வரி என எல்லாச் செலவுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

ஒரு ஃப்ரான்சைஸைத் தொடங்கி அது நிலையான ஓர் இடத்தை அடைய சில ஆண்டுகள் ஆகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ரான்சைஸி கட்டணம்

ஒரு நிறுவனத்திடம் ஃப்ரான்சைஸ் பெறும்போது, அவர்களின் பிராண்ட், நற்பெயர், பொருளின் செயல்முறை ஆகியவற்றைப் பெறுகிறீர்கள். இதற்காக உங்களிடமிருந்து குறிப்பிட்ட சதவிகிதக் கட்டணம் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தின்போதே முடிவு செய்யப்படும். இதை நஃீங்கள் ஃப்ரான்சைஸருக்கு தொடக்கத்திலேயே செலுத்திவிட வேண்டும்

ஃப்ரான்சைஸ் தொழில் - 5 - ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க முதலீடு!

உரிமக் கட்டணம்

ஒரு நிறுவனத்தின் பொருளுக்கான உரிமத்தைப் பெற்று அதன் மூலம் உங்கள் வருமானத்தை ஈட்டுகிறீர்கள். இதற்காக மாதந்தோறும் ஃப்ரான்சைஸருக்கு ஒரு கட்டணம் ராயல்ட்டியின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும். பெரும்பாலும், இது மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்கள் ராயல்ட்டி கட்டணத்தை வாரந்தோறும் பெறுவதும் உண்டு.

ஃப்ரான்சைஸி கட்டணத்துக்கும் உரிமக் கட்டணத்துக்கும் என்ன வித்தியாசம்..? பெரும்பாலானவர்கள் ஃப்ரான்சைஸி கட்டணத்தையும் உரிமக் கட்டணத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். உங்கள் பணம் எந்தெந்தக் காரணங்களுக்காகச் செலவிடப்படுகிறது என்பதில் உங்களுக்கு எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. ஒரு நிறுவனம் பல வருடங்களாகக் கட்டமைத்து வந்திருக்கும் மதிப்பையும் நற்பெயரையும் தொழில்முறை சார்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறீர்கள். ஒரு பொருளுக்கு இருக்கும் சமூகத் தேவையை நீங்கள் உருவாக்கவில்லை. அது, அதன் நிறுவனத்தின் உழைப்பால் உருவான ஒன்று. இந்தக் காரணத்தால் நீங்கள் பெறும் ஃப்ரான்சைஸுக்கு ஒரு தொடக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதான் `ஃப்ரான்சைஸி கட்டணம்.’ உங்கள் வருமானம் மொத்தமும் நீங்கள் உரிமம் பெற்ற பொருளால் உண்டாவது. இதன் மூலம் தொடர் பயனையும் அடைகிறீர்கள். இதற்காக மாதந்தோறும் வசூலிக்கப்படுவதே உரிமக் கட்டணம்.

ஒரு ஃப்ரான்சைஸைத் தொடங்கி அது நிலையான ஓர் இடத்தை அடைய சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இதற்கு இடைப்பட்ட காலத்தில் நாம் பல சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் பெரிய அளவிலான லாபம் இல்லையென்றாலும், தொழில் நடத்தும் அளவுக்குப் போதுமானதாக இருப்பின் சோர்வடையத் தேவையில்லை.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism