Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 9 - ஃப்ரான்சைஸரின் முழுமையான உதவி..!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

வளர்ச்சிக்கான அம்சம்

ந்த ஃப்ரான்சைஸ் கம்பெனியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி ஓர் உற்சாகமான, உத்வேகமான குழுவை நம்பியே இருக்கிறது. அதுபோல ஃப்ரான்சைஸிகள் தனித்து இயங்கி வளர, ஒரு முழுமையான ஃப்ரான்சைஸ் ஆதரவு அமைப்பு இருக்க வேண்டியது அவசியம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 9 - ஃப்ரான்சைஸரின் முழுமையான உதவி..!

ஓரு முழுமையான ஃப்ரான்சைஸ் ஆதரவு அமைப்பு அதாவது, ஒரு ‘காம்ப்ரிஹென்சிவ் ஃப்ரான்சைஸ் சப்போர்ட் சிஸ்டம்’ என்பது ஃப்ரான்சைஸி மற்றும் ஃப்ரான்சைஸர் இருவரின் தொழில் வளர்ச்சியையும் வலிமையாக்கும்படி வடிவமைக்கப்படுகிறது. அதாவது, ஒரு ஃப்ரான்சைஸி தன் தொழிலில் தனியே திணறி நிற்காமல், ஃப்ரான்சைஸரின் ஆதரவோடு நிற்பதற்காக இந்த சிஸ்டம் வடிவமைக்கப்படுகிறது.

இதன் காரணமாக எந்த இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் முன்னதாக ஒரு ஃப்ரான்சைஸியாக நீங்கள் ‘ஃப்ரான்சைஸ் டிஸ்க்ளோஷர் டாக்குமென்ட்டை’ ஆராய்ந்து படிக்க வேண்டும். ஃப்ரான்சைஸரிடம் தீவிரமாக உரையாட வேண்டும். ஏற்கெனவே அவருக்கு இருக்கும் ஃப்ரான்சைஸிகளுடன் பேசி எந்த மாதிரியான ஆதரவு வழங்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃப்ரான்சைஸ் தொழில் - 9 - ஃப்ரான்சைஸரின் முழுமையான உதவி..!

ஒரு நிறுவனத்தின் ஃப்ரான்சைஸிகள் வேகமாக வளர்கின்றனவே என்ற ஆச்சர்யத்தில் மட்டும் அந்த நிறுவனத்தில் இணைய நினைப்பது தவறு. அந்த ஃப்ரான்சைஸிகளுக்கெல்லாம் தாய் ஃப்ரான்சைஸ் தினசரி எப்படிப்பட்ட ஆதரவைத் தருகிறது என்பதை கவனிக்க வேண்டும். என்ன மாதிரியான சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதையும் கவனித்து முடிவுசெய்ய வேண்டும்.

இந்த ஆதரவுப் படிநிலைகள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபட்டாலும், சில அடிப்படைச் சேவைகள் அவசியம் தேவை. அவை என்னென்ன?

பயிற்சித் திட்டம்

அனைத்து ஃப்ரான்சைஸர்களும் பிசினஸின் ஒவ்வொரு முக்கியப் பங்குக்காக ஃப்ரான்சைஸி களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். ஃபைனான்ஸ், பிசினஸ் அமைப்புகள் என அத்தனையையும் உள்ளடக்கியதாக அந்தப் பயிற்சித் திட்டம் இருக்க வேண்டும். கூடவே எப்படி மார்க்கெட்டிங் வித்தைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது என்பதும் பயிற்சித் திட்டத்தில் இருக்க வேண்டும்.

பயிற்சியை சில நாள்களிலிருந்து சில மாதங்கள் வரை எடுக்கலாம். சில நேரங்களில் வெறும் வாய்வழிப் பயிற்சியாகவோ, ஃப்ரான்சைஸியின் இடத்தில் பணி தொடங்கியவுடன் நடக்கும் பயிற்சியாகவோ அது இருக்கலாம்.

பெரிய ஃப்ரான்சைஸ் நிறுவனங்களில், சிறப்பு நிபுணர்கள் பயிற்சி நடத்துகிறார்கள். அதே நேரத்தில், சிறிய ஃப்ரான்சைஸ் பிசினஸ்களில் ஃப்ரான்சைஸர் அவராகவே பயிற்சியை நடத்தலாம். ஒரு புது பிசினஸை கையில் எடுத்திருக்கும் ஃப்ரான்சைஸிகளுக்கும், மேனேஜர்களுக்கும் அதன் முக்கியப் பகுதிகள் புரிய வேண்டும் என்பதே பயிற்சியின் மைய நோக்கம். அதனால் என்ன மாதியான பயிற்சி உத்தி கையாளப்படுகிறது என்பது முக்கியமில்லை.

ஒரு ஃப்ரான்சைஸியின் வெற்றிக்கு மிகவும் முக்கியம், அவர்களுக்கு சரியான இடம் அமைந்திருக்கிறதா, இல்லையா என்பதுதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இடத் தேர்வு

ஒரு ஃப்ரான்சைஸியின் வெற்றிக்கு மிகவும் முக்கியம், அவர்களுக்கு சரியான இடம் அமைந்திருக்கிறதா, இல்லையா என்பதுதான். இந்த விஷயத்தில் ஃப்ரான்சைஸரும் ஃப்ரான்சைஸியும் ஒன்றாக வேலை செய்து, பிசினஸுக்கு ஏற்ற சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். குத்தகை ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஜியோகிராஃபிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

சந்தைப்படுத்துதலும் விளம்பரமும்!

மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள் நிதிக்கு ஃப்ரான்சைஸிகள் நிதி கொடுக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு பிரமாண்டத் திறப்புவிழாவைத் தாண்டி பிராண்டைக் கட்டியமைப்பதற்கும், விளம்பர பிரசாரங்கள் செய்வதற்கும் ஒரு ஃப்ரான்சைஸர் திட்டமிட வேண்டும். இவை தவிர, உள்ளூரிலிலும் மாநில அளவிலும் எப்படிப்பட்ட மார்க்கெட்டிங் திட்டங்களையெல்லாம் நடத்த வேண்டும் என்பதை ஃப்ரான்சைஸர்கள் புது ஃப்ரான்சைஸிகளுக்கு வழிகாட்ட வேண்டும். போஸ்டர்கள், பேனர்கள் போன்றவையும் ஃப்ரான்சைஸிகளுக்குத் தரப்பட வேண்டும்.

தொடர் உதவி

தொடர் உதவியின் பங்காக ஒரு நல்ல ஃப்ரான்சைஸர், புதிய ஃப்ரான்சைஸிகளுக்குச் செயல்பாட்டு விளக்கம் ஒன்றைத் தர வேண்டும். இதில், இந்த பிசினஸை எப்படி நடத்துவது என்பது குறித்த அத்தனை குறிப்புகளும் விவரமாகத் தரப்பட வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

தலைமை அலுவலக ஆதரவு

பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஒரு முறையான உதவி அமைப்பு நிறுவப்பட்டிருக்கும். தலைமை அலுவலகத்தில் தனிப்பட்ட நிபுணர்குழு இதற்கென இருக்கும். உதாரணமாக, ஒரு தலைமை அலுவலகத்தில், `களச் சேவை ஆலோசகர்’ என ஒரு பதவி இருக்கும். அந்தப் பதவியில் இருப்பவர்கள் ஃப்ரான்சைஸிகளுடன் மார்க்கெட்டிங் குறித்தும், தொழில்நுட்பம் தொடர்பாகவும், பயிற்சித் திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட சந்திப்புகள் நடக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருடாந்தரச் சந்திப்புகள்!

வழக்கமாக ஃப்ரான்சைஸர்கள் தங்கள் ஃப்ரான்சைஸிகளுடன் வருடாந்தரச் சந்திப்புகள் நடத்த வேண்டும். இந்தச் சந்திப்புகளில் வளர்ச்சியையும் வருவாயையும் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். பிசினஸுக்கான சிறப்புத் திட்டமிடல் அல்லது குழப்பங்கள் குறித்து கலந்தாய்வு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பாகவும் இது அமையும்!

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

பிற முக்கிய அம்சங்கள்!

உங்கள் சந்திப்புகளில் நீங்கள் எந்தச் சேவைகள் குறித்துப் பேசுகிறீர்களோ, எவையெல்லாம் முக்கியமானவை என நீங்கள் நினைக்கிறீர்களோ அவை, `ஃப்ரான்சைஸரின் கடமைகள்’ என ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். உதவி அலுவலர்களாக வருபவர்களின் பின்புலத்தைச் சோதிக்க வேண்டும். அவர்கள் அனுபவமிக்க நிபுணர்களாக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். அவர்கள் எவ்வளவு காலமாக ஃப்ரான்சைஸருடன் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

உங்கள் பகுதிக்கு என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கள அலுவலரைச் சந்தியுங்கள். எப்போதெல்லாம் அவர் ஃப்ரான்சைஸி ஆபீஸுக்கு வருவார், என்ன மாதிரியான உதவிகள் செய்வார், எத்தனை ஃப்ரான்சைஸிகளை அவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதே அமைப்பிலிருக்கும் பல ஃப்ரான்சைஸிகளைப் பார்வையிடுங்கள். அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனியுங்கள். அவற்றில் பொதுவான பிரச்னை ஏதாவது இருந்தால், அது பெரிய சிக்கலுக்கு அறிகுறியாக இருக்கலாம். இந்த நாள் மற்றும் முன்னாள் ஃப்ரான்சைஸிகளிடம் பேசுங்கள். கள அலுவலரின் தீர்வுகள் நடைமுறைக்கேற்றவையாக, பட்ஜெட்டுக்குள் அடங்குகிற மாதிரி இருக்கின்றனவா எனக் கேளுங்கள். ஏதாவது ஒரு விநோதமான சிக்கல் நேரும் பட்சத்தில், அதை கள அலுவலர் எப்படி எதிர்கொள்வார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன் உங்களுக்கு இருக்கும் கேள்விகளையெல்லாம் கேட்டுவிடுவதும் அவசியம். ஒரு ஃப்ரான்சைஸை வாங்குவது எப்படி என அடுத்த இதழில் பார்ப்போம்!

(ஜெயிப்போம்)